அஆஇ
கட்சித் தலைமையிடமிருந்து சில கீழ் மட்டத் தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு ஓலை அனுப்பப்
படுகிறது.சமீபத்தில் அவர்கள் பகுதிக்கு வந்த மகளிர் தலைவலியை,sorry தலைவியை அவர்கள் வரவேற்கப்
போகவில்லையாம்.அதற்கான விளக்கம் கேட்டு ஓலை.
அதற்குப்
பதில் கடிதங்கள் இரண்டு
கடிதம்-1
அனுப்புனர்
ப
பா பி பீ
வட்டச்
செயலர்
...........ஊர்.
பெறுநர்
தலைமைக்
கலகம்!
பெரு மதிப்புக்குரிய தலைமைக்குத் தொண்டன் வணக்கம்.
தலைமையிடமிருந்து
வந்த ஓலை கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.அப்பா காலத்திலிருந்து கட்சிப்
பணியாற்றி வருபவன்.தலைமை கிழித்த கோட்டைத் தாண்டாதவன்.
எனக்கு
ஓலையா?
தங்கத்
தலைவி,தமிழினத் திலகம் அவர்களை வரவேற்க நான் போகாத காரணம் அன்று எனக்குக் கடுமையான
வயிற்றுப் போக்கு--முன்பு ஒரு முறை ஒரு நடிகருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு நாடாளு
மன்றத்தில் வாக்களிக்க முடியாமல் போனது போல!நிற்காது போய் ஒரே நாற்றம். அந்நிலையில்
நான் போனல் அங்கு வீசும் தலைவியின் கூந்தல் மணத்தையும் மீறி இது வீசும்.எனவே
செல்லவில்லை.
இதற்கான
மருத்துவரின்(இவர் எங்கள் குடும்ப மருத்துவர்!) சான்றிதழ் இணைத்துள்ளேன்.
தயை
கூர்ந்து அன்று ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டுகிறேன்.
இப்படிக்கு
தங்கள் கீழ்ப்படிதலுள்ள
.....................
---------------
---------------------------------
கடிதம்-2
அனுப்புனர்
........
வணக்கத்திற்குரிய
தலைமைக்கு.
தமிழ்ப் பெண்களின் மானம் காக்க வந்த தலைவியை வரவேற்க நான் போக இயலவில்லை. காரணம்.அன்று என் பெரிய தந்தையின் பேரனின்,சகலையின் மாமாவின் சித்தியின் சகோதரி இறந்து போனார்.இவ்வளவு நெருங்கிய உறவினரின் துட்டிக்குப் போகாமல் இருக்க முடியுமா?
சான்றாக அன்னாரின் இறப்புச் சான்றிதழ் இணைத்துள்ளேன்.
எனவே
அன்று ஒரு நாள் எனக்கு விடுப்பு அளிக்க வேண்டிடுகிறேன்.
தங்கள்தாழ்மையுள்ள
தொண்டன்
................
ஓஹோ... விசயம் இப்படி போகுதோ...
ReplyDeleteஎன்ன ஒரு கொலவெறி...
ReplyDeleteசெய்யுங்கப்பா...
ஆஹா இப்படி எத்தின பேர் கிளம்பியிருக்கிறாய்ங்க..
ReplyDeleteநடக்கட்டும்... :)
ReplyDeleteங்ங்ங்ங்ங்ங்.....ப்பா !
ReplyDeleteஇதுக்கு பிறகும் கட்சியில வச்சிருப்பாங்களா ?
ReplyDeleteவச்சிருந்தாலும் .............