Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Tuesday, March 25, 2014

சில்லுன்னு ஒரு பீர்!

  
                               ஹப்பா!என்ன வெய்யில் என்ன வெய்யில்!
 
பீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்.

எல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா?  பீர் அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்ள வேணும் தானே !? இவைகள் ஒன்றும் " பீலா " இல்லை. 

மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவுகளே. பீர் அருந்துவது உடலுக்கு நல்லது. கவனிக்கவும்- அருந்துவது. வயிறு முட்ட குடித்து விட்டு வண்டியை வேளச்சேரி மெயின் ரோடில் ட்ராபிக் மெரிடியனில் முட்டி விட்டு மல்லாந்து கிடக்க அல்ல.

1 . பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைகிறது. உண்மை 

பொதுவாகவே அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மன நிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறதாம்.

2 .  பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.

1982-1996 இந்த வருட இடை வெளிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்தும் 
பழக்கமுள்ளவர்களுக்கு 20 - 50 சதவீதம் இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு.


3 . பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.

பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cholesterol (H D L - High Density Lipoprotein ) தருகிறது.எனவே இது இரத்தம் தன பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது.(Clotting)


4 . பீரில் நிறைய நார் சாது உள்ளது ( Fiber) 
இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடதுவிடுமாம்.இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்.


5 . பீர் வைட்டமின் செறிந்தது. ( பழைய போர்ன்விடா விளம்பரம் மாதிரி இருக்கு)

பீரிலிருந்து பல வகை விட்டமின்கள் கிடைகின்றன.மக்னீசியம், செலினியம்,பொட்டாசியம்,பாஸ்பரஸ், பயோட்டின்,
போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12.


6 . பீர் மாரடைப்பை தடுகிறது.
2001 ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி மது அருந்துபவர்களுக்கு இதய நோய் (Strokes) வருவது மிகக்குறைவாம்.
காரணம், அளவான மது இரத்தத்தின் அடர்த்தியை குறைகிறது.இதனால் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் தடை இன்றி நடக்கிறது.இதனால் மிக சிறிய மெல்லிய ரத்தக்குழாய்கள் உள்ள மூளையில் இரதம் கெட்டியாகாமல் அதனால் மாரடைப்பு வராமல் எளிதான இரத்த ஓட்டம் அமைய வாய்ப்புக்கள் அதிகரிக்கிறது.


7. பீர் உங்கள் மூளையை இளமையாக வைக்கிறது.

2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு - Mental impairment என்ற மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாத வர்களை விட 40% குறைவாக உள்ளது .


8 . பீர் நமது கல்லீரலுக்கு நல்லது.

மிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களை அகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் "வளர் சிதை மாற்றம் " காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன  This is from Beer Net Publication, April 2001 Biological Institute.


9 . பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.(Insomnia)

லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives)  செயல் படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது.


10 . பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது.

நியூ காஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதை தடுக்கிறதாம்.
 
டிஸ்கி: இதெல்லாம் நான் சொல்லல்லீங்கொ! பிரபல பதிவர் ஒருவரின் ,சூரியனுக்கு உகந்த ரத்தினப் பதிவரின் வலைப்பூவிலிருந்து cp பண்ணினதுங்கோ!
 
குடி குடியைக் கெடுக்கும்,குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்!

Wednesday, July 24, 2013

எனது முதல் கணினி அனுபவம்..(தொடர் பதிவு)



என்னைச் சந்திக்காமலேயே என் மீது அப்படி என்ன கோபமோ பள்ளி மாணவனுக்கு (அதாங்க ஸ்கூல் பையன்!),ஒரு சிக்கலான தொடர் பதிவில கோத்து விட்டு விட்டார்!”என் முதல் கணினி அனுபவம்” என்ற தலைப்பில் எழுத வேண்டுமாம்.இதைத் தன் வளைக் கரங்களால் தொடங்கி வைத்தவர் ஆரணி அக்கா!என்னவோ போங்கப்பா;நானும் இதுல மாட்டிக்கிட்டேன்!

எனக்குத் தினமும் கணினி முன் அமர்வதே முதல் அனுபவம் போலத்தான் தோன்றுகிறது; எதோ ஒரு விரலால் தட்டிப் பதிவை ஒப்பேத்தி விடுகிறேனே தவிர,நுணுக்கங்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை!சிலரது பதிவுகளைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது! எத்தனை அலங்காரங்கள்?!

சரி விடயத்துக்கு வருவோம்.என் முதல் கணினி அனுபவம் ,எப்போது ?(ஐயா புண்ணிய வான்களே!முதல் கணினி அனுபவத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.ஒவ்வொரு அனுபவமாகத்  தொடராதீர்கள்!) பள்ளியில் படிக்கும்போதா?கல்லூரி சென்றபிறகா?அது முக்கியமில்லை அனுபவம் எப்படி என்பதே முக்கியம்.

என் வீட்டுக்கு அருகில் ஒரு கணினிப் பயிற்சி நிறுவனம் தொடங்கினார்கள். அதில் இலவச அறிமுகம் என்று பயிற்சி வகுப்பு ஒன்று நடத்தினார்கள். இலவசமாச்சே,விடலாமா?முதல் ஆளாகப் போய் விட்டேன்.முதல் வகுப்பில் இருபது பேர் இருக்கும்.பத்துக் கணினிகள். ஒவ்வொன்றின் முன்னும் இருவர்.என் பார்ட்னர்…….(வேண்டாம் அந்தக்கதையெல்லாம் எதற்கு. சுருக்கமாகச் சொன்னால் வகுப்பு சுவாரஸ்யமாகப் போக உதவியது!)

குப்பையைப் போட்டால் குப்பை வரும்,பைனரி என்று என்ன வெல்லாமோ சொன்னார்கள். கடைசியில் உருப்படியாக எல்லோரும் ஒரு  மின்னஞ்சல் கணக்குத் தொடங்க உதவினார்கள். நான் யாஹூ வில் ஒரு கணக்குத் தொடங்கினேன்.இடையில் பிஸ்கட் ,டீ வேறு!

அது ஒன்றுதான் நான் அன்று கற்றுக் கொண்டது!

ஆனாலும் சுவாரஸ்யமான அனுபவம்தான்!

நான் மட்டும் சும்மாவிடலாமா ஐந்து பேரை மாட்ட வேண்டாம்?!

இதில் ஒரு சங்கடம் என்னவென்றால்  இச் சுழலில் ஏற்கனவே சிக்காதவர்களாகத் தேட வேண்டும்;என் பதிவைப் படிப்பவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதானே  அவர்களுக்குத் தெரியும்!

அந்த ஐவர்!

1)வே.நடனசபாபதி

2)s.suresh

3)டினேஷ் சுந்தர்

4)கவியாழி கண்ணதாசன்

5)காமக் கிழத்தன் 

எழுதுவாங்கன்னு நம்புகிறேன்!






Wednesday, May 15, 2013

ஏஞ்சலினா ஜோலியின் மார்பகங்கள்





பெண்ணே!உனக்குத் துணிச்சல் அதிகம்தான்

பெண்மைக்கு அழகே மார்பகம்தான் என்று

ஆண்கள் எல்லாம் ஆவலுடன் நோக்கும் உலகில்

கவர்ச்சியே மூலதனமாய்க் காட்டி முன்னேற

நடிகையர் முந்தும் கனவுப் பட்டறையில்

உடலழகு காட்டியே உயர நினைக்கும் கனவுலகில்

கவலைகள் எதுவுமின்றி  களைந்தாய் உன் மார்பகத்தை

கேன்ஸர் எனும் அரக்கனின் பிடியில் தப்புதற்கே!

மங்கையர்க்கு எல்லாம் ஒரு அறிவுரை தந்து விட்டாய்

ஏஞ்சலினா ஜோலி நீ வாழ்கவென்றே  வாழ்த்துகிறேன்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Friday, February 1, 2013

குடித்து வாழ வேண்டும்!



ஒரு படத்தில் கலைவாணர் பாடுவார் ”குடிச்சுப் பழகணும்” என்று!

டி.ஏ. மதுரம்”ஐயய்யோ,என்னாங்க,குடிச்சுப் பழகணுங்கறீங்க” என்றவுடன் தொடர்ந்து பாடுவார் ”படிச்சுப் படிச்சுச் சொல்லுறாங்க பாழும் கள்ளை நீக்கிப் பாலைக் குடிச்சுப் பழகணும்”பால் இல்லாவிட்டால் மோர் இல்லாவிட்டால் நீராகாரம் என்று போகும் அப்பாடல்.

குடியின் தீமையை உணர்ந்தவர்கள் குடிக்காமல் இருக்க வேண்டும்;குடிப்பழக்கம் உள்ளவர் களாயின் அதை விட வேண்டும்.

விட முடியவில்லையா,அளவாகவாவது குடிக்க வேண்டும்!

அது என்ன அளவு?

இந்திய ஆண்களின் குடி அளவு...விஸ்கி என்றால் ஒரு நாளைக்கு அதிக பட்சம் இரண்டு பெரிய  பெக்...வோட்கா என்றால் மூன்று சிறிய ஷாட்!(அப்போ மற்ற பிராந்தி வகையறா என்றால் எவ்வளவு வேண்டும் குடிக்கலாமா?!)

பெண்கள் என்றால் அதிக பட்சம் இரண்டு மத்திய அளவு ஒயின்!

போதை மருந்து மற்றும் மதுபான ஆய்வு என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

57 நாடுகளில் அமுலில் இருக்கும் குடி அளவு வழிகாட்டுதல் பற்றி ஒப்பீடு செய்து அதன் பின் இந்த அளவுகள் கூறப்பட்டுள்ளன.

”பெண்கள் ஒரு வாரத்துக்கு சராசரி அளவில் 12 அளவும் ஆண்கள் 18 அளவுக்குள்ளும் மது அருந்தலாம்.வாரத்துக்கு ஒருநாள் மது அருந்தக்கூடாது.வண்டி ஓட்டுபவர்கள்,கர்ப்பமான பெண்கள்,குழைந்தைக்குப் பால் கொடுக்கும் பெண்கள் இவர்கள் மது அருந்தக் கூடாது.
பல நாடுகளில் குடிக்கும் அளவு என்ன என்பது பற்றிய பரிந்துரை இருக்கிறது;ஆனால் இந்தியா,பெல்ஜியம்,நார்வே போன்ற சில நாடுகளில்,இப்படிப்பட்ட பரிந்துரைகள் இல்லை!”

 நான் கேட்பது...ஒருவரால் குடிக்கும் அள்வைக் கட்டுப்படுத்த முடியும் என்றால்,முழுதாக நிறுத்த முடியாதா என்ன?

ஊறுகாய்:-நேற்று ஸ்கூல்பையன் பார்க் ஷெரடன் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார்.

ஒரு தற்செயல் இணைவு...நேற்று நான் நண்பர் ஒருவருடன் அதே ஓட்டலுக்குச் சென்றிருந்தேன்(அவர் செலவுதான்)

//இடதுபுறம் திரும்பிச் சென்றால் வலதுபுறத்தில் அழகான "பார்"// இது பதிவில் அவர் எழுதியது!

அந்தப்பாரின் உள்ளே.....

மக்கில் இருப்பது ,விளிம்பு வரை நுரை ததும்பும் பியர்!

அந்த மக்கின் பெயர்----”பூட்லெக் மக்”(bootleg mug!)

இரண்டு பேர் போனோம்;ஆனால் ஒரு மக்தான் இருப்பதைப் பார்க்கிறீர்கள்!

அவர்தான் குடித்தார்!

அவர் அளவோடு குடிப்பவர்தான்!

Tuesday, January 29, 2013

கேஸ் சிலிண்டரும் அவியலும்!


சமையல் கேஸ் சிலிண்டருக்கு முடிவுறு தேதி உண்டா?

நிச்சயமாக உண்டு!

காலாவதியான சிலிண்டர்கள் பாதுகாப்பானவை அல்ல;அவற்றால் விபத்துகள் நேரலாம்!

முடிவு தேதியை எப்படித் தெரிந்து கொள்வது?

சிலிண்டரில் மேலே மூன்று பட்டையான பாகம் இருக்கும்.

அவற்றில் ஒரு பட்டையின் உள் புறம் இந்தத் தேதி  குறிக்கப்பட்டிருக்கும்.

எப்படி—உதாரணம் C12.

இதன் பொருள் என்ன?

A என்பது மார்ச்.
B என்பது ஜூன்
C என்பது செப்டம்பர்
D என்பது டிசம்பர்

அதாவது இந்த சிலிண்டர் செப்டம்பர் 2012 உடன் காலவதியாகி விட்டது என்று பொருள்.

சிலிண்டர்  வாங்கும்போது இதையும் சரி பார்த்து வாங்குவது பாதுகாப்பானது!

………………………………………………………..

அவியல் பிறந்தது எப்படி?

பீமனுக்கு விடம் கலந்த உணவைக் கொடுத்துக் கௌரவர்கள் அவனைக் கொன்று நதியில் எறிந்து விடுகிறார்கள்.

அங்கு அவன் நாகலோகம் சென்று அவர்களால் காப்பாற்றப் பட்டு மீண்டும் வருகிறான்.

பீமன் இறப்பைக் கொண்டாட ஒரு விருந்து வைக்க துரியோதனன் முடிவு செய்து ,அதற்காக அநேக காய்கறிகள் வாங்கி வைத்திருக்கிறான்.

பசியுடன் வந்த பீமன்-அவனுக்குச் சமைக்கத்தெரியும்-எல்லாக் காய்கறிகளையும் வெட்டிப் போட்டு ஒரு பதார்த்தம் செய்தான்.

அதுவே முதல் அவியல்!