சமையல் கேஸ் சிலிண்டருக்கு முடிவுறு
தேதி உண்டா?
நிச்சயமாக உண்டு!
காலாவதியான சிலிண்டர்கள் பாதுகாப்பானவை
அல்ல;அவற்றால் விபத்துகள் நேரலாம்!
முடிவு தேதியை எப்படித் தெரிந்து
கொள்வது?
சிலிண்டரில் மேலே மூன்று பட்டையான பாகம்
இருக்கும்.
அவற்றில் ஒரு பட்டையின் உள் புறம் இந்தத்
தேதி குறிக்கப்பட்டிருக்கும்.
எப்படி—உதாரணம் C12.
இதன் பொருள் என்ன?
A என்பது மார்ச்.
B என்பது ஜூன்
C என்பது செப்டம்பர்
D என்பது டிசம்பர்
அதாவது இந்த சிலிண்டர் செப்டம்பர் 2012 உடன் காலவதியாகி விட்டது
என்று பொருள்.
சிலிண்டர் வாங்கும்போது இதையும் சரி பார்த்து வாங்குவது பாதுகாப்பானது!
………………………………………………………..
அவியல் பிறந்தது எப்படி?
பீமனுக்கு விடம் கலந்த உணவைக் கொடுத்துக் கௌரவர்கள் அவனைக் கொன்று
நதியில் எறிந்து விடுகிறார்கள்.
அங்கு அவன் நாகலோகம் சென்று அவர்களால் காப்பாற்றப் பட்டு மீண்டும்
வருகிறான்.
பீமன் இறப்பைக் கொண்டாட ஒரு விருந்து வைக்க துரியோதனன் முடிவு
செய்து ,அதற்காக அநேக காய்கறிகள் வாங்கி வைத்திருக்கிறான்.
பசியுடன் வந்த பீமன்-அவனுக்குச் சமைக்கத்தெரியும்-எல்லாக் காய்கறிகளையும்
வெட்டிப் போட்டு ஒரு பதார்த்தம் செய்தான்.
அதுவே முதல் அவியல்!
நீங்கள் கொடுத்த அவியலும் சுவை!
ReplyDeleteஇரண்டு தகவலில் முதல் தகவல் ஏற்கனவே அறிந்தது! அவியல் தகவல் புதிது! அருமையான பகிர்வு! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Delete