தங்கத் தோசை --விலை ரூ.1011/-
கிடைக்குமிடம் -பெங்களூரு
ஆலிவ் எண்ணெய் உபயோகித்துச் செய்தது.
ஐ.எஸ்.ஓ. அங்கீகாரம் பெற்றது!
எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!
காணொளி பாருங்கள்!
குப்பனுக்குக் குடிக்கக் கூழில்லையாம்,பணக்காரச்
சுப்பனுக்கு தோசையிலே தங்கம் கேக்குதாம்!
1011 இல் அவன் வீட்டில் ஒரு மாசம் அரிசி பொங்கும்
ஆனா இங்கயோ திங்கவும் வேணுமாம் தங்கம்!
போங்கப்பா!
சிலருக்கு மாத சம்பளமே ரூபாய் 1000 க்கு குறைவாக இருக்கும்போது ரூபாய் 1011 க்கு ஒரு தோசையா? வயிறு எரிகிறது. ம்.ம். இன்னொரு ஃபிரெஞ்சு புரட்சி வராமல் இருந்தால் சரி.
ReplyDeleteவராது என்று சொல்ல முடியுமா!
Deleteநன்றி சார்
உலகம் எங்கேயோ போகிறது!
ஆமாம் ஐயா!
Deleteநன்றி
இப்படியெல்லாம் காசை புடுங்கிறானுங்களா? ஏழைக்கு எள்ளுருண்டை கூட கிடைக்காத நாட்டில் இப்படியும் வினோதங்கள்!
ReplyDeleteஎன்ன செய்ய சுரேஷ்!
Deleteநன்றி
நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல
ReplyDeleteகொஞ்சம் ஓவராகத்தான் படுகிறது
கூந்தலுள்ள மகராசிகள் கொண்டை முடியட்டும்
சுவாரஸ்யமான பகிர்வு. தந்தமைக்குவாழ்த்துக்கள்
ஆமாம் ரமணி சார்!ஒரு தோசைக்கு இவ்வளவா?!
Deleteஅட.... இப்படியும் ஒரு தோசை.... உரக்கச் சொல்லாதீங்கப்பு..... தில்லிக்காரங்க சாப்பிட ரெடியாகிடுவாய்ங்க! தில்லிக்காரங்க தோசைன்னாலே வாயைத் திறப்பாய்ங்க!
ReplyDeleteஅதான் பஞ்சாபி ஓட்டலிலேயே மசாலாதோசை விக்கறாங்களே
Deleteநன்றி வெங்கட்
Deleteகவரிங் தோசை உண்டா?
ReplyDeleteவரும்!
Deleteநன்றி
நன்றி சார்
ReplyDelete