Tuesday, January 15, 2013

யாருக்கு ஆஸ்கார்?!



ஆஸ்கார் விருது பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோம்.

இந்த விருது பற்றி நமக்கு என்ன தெரியும்?

திரைப்படத் துறையின் உயரிய விருது என்பது தெரியும்.

அமெரிக்காவில் இயங்கும்,சலனப் பட க் கலை ,அறிவியல் கழகத்தினால்  திரைப் படத் துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் விருது என்பது தெரியும்.

இது எந்த ஆண்டு முதலில் வழங்கப்பட்டது,தெரியுமா?

1929 ஆம் ஆண்டு,ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஓட்டலில் ஒரு சிறிய விழாவில் முதல் முறை இவ் விருது வழங்கப்பட்டது.

இவ்விழாவை ஊடகங்கள் கண்டு கொள்ளவே இல்லை;

காரணம் விருது வழங்குவதில் எதிர்பார்ப்பு ஏதும் இன்றி மூன்று மாதங்களுக்கு முன்பே விருது பெறுவோர் பெயர்கள் அறிவிக்கப் பட்டு விட்டன!

எதிலுமே சஸ்பென்ஸ் இருந்தால்தானே சுவாரஸ்யம்!

மொத்தம் 24  திரைப்படத் துறைகளுக்கு இந்த விருது வழங்கப் படுகிறது.

விருதுடன் வழங்கப்படும் அந்தச் சிலையை வடிவமைத்தவர்,எம்ஜிஎம் படப்பிடிப்பகத்தின் கலைத் துறையின் தலைவர் செட்ரிக் கிப்பன்ஸ் என்பவர்..

ஆஸ்கார் என்ற பெயர் எப்படி வந்தது என்பது குறித்து சர்ச்சையே இருக்கிறது.

நடிகை பெட்டி டேவிஸ்,(இவர் அக்கழகத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை பெற்றவர்), தன் முதல் கணவர் நினவாகத் தானே அப்பெயரை வைத்ததாகச் சொல்லி யிருக்கிறார்

கழகத்தின் நிர்வாகச் செயலாளர் மார்கரெட் ஹார்ரிக் அவர்களின் மாமாவை உருவத்தில் அச்சிலை ஒத்திருப்பதால் அப்பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகிறது!

பரிசு பெற்றவர்களோ,அவர்கள் வாரிசுகளோ இச்சிலைய விற்க விரும்பினால் சட்டப்படி முதலில் கழகத்துக்கே அதை ஒரு டாலருக்கு விற்பனைக்கு அளிக்க வேண்டும்.

கழகத்தில் வாக்களிக்க உரிமையுள்ள 6000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது .

இவர்கள் படத்துறையின் 15 பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.

இந்த ஆண்டு நம் பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ யின் பெயரும் பட்டியலில் உள்ளது;

அதற்குள் அவரது அப்பாடல் பற்றிச் சச்சரவு எழுந்து விட்டது!

(தகவல்:டைம்ஸ் ஆஃப் இந்தியா)

5 comments:

  1. நல்ல தகவல். இன்னொரு செய்தியை விட்டுவிட்டீர்களே! நம்மூர் திரைப்பட தயாரிப்பாளர் திரு இரவிச்சந்திரன் ஆஸ்கார் மூவீஸ் என்ற பெயரில் திரைப்பட நிறுவனம் நடத்தியதும், அந்த பரிசு தரும் நிறுவனத்தின் அனுமதி பெறாமல் அந்த பெயரை பயன்படுத்துதல் தவறு என்றும்,அதனால் அவர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிந்த பிறகு அந்த பெயரில் உள்ள ஆங்கில எழுத்துக்களை (ஆனால் உச்சரிப்பு அதே போல் வருமாறு ) மாற்றிவிட்டார் என்பதும் தான் அந்த செய்தி. அவர்களது சமீபத்திய திரைப்படம் ‘துப்பாக்கி’ என்பதும் கொசுறுச்‌ செய்தி.

    ReplyDelete