Monday, January 7, 2013

உண்ணாவிரதம்,ஓங்குக!

இன்று காலை என் சென்னை நண்பர் ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்து,ஒரு தகவலைச் சிரித்துக் கொண்டே சொன்னார்!

அவர் சொன்ன செய்தியைக் கேட்ட எனக்கு பழைய  நிகழ்வு ஒன்று நினைவுக்கு வந்தது.

ஒரு முறை ஒரு விழாவுக்கு நன்கொடை வாங்க ஒரு ஊர்ப்பெரிய மனிதர் வீட்டுக்குச் சென்றோம்.அவர் மனைவி எங்களை வரவேற்றுவிட்டுச் சொன்னார்”இன்னிக்கு அவர் உண்ணாவிரதம்.உள்ள இட்லி சாப்பிட்டுக்கிட்டு இருக்காரு!”. எங்களுக்குச் சிரிப்பு வந்தது..
அவர் சொல்ல வந்தது என்ன வென்றால் அன்று அவர் சோறு சாப்பிட மாட்டார் ;ஒரு வேளை மட்டும் டிஃபன் சாப்பிடுவார் என்பதே(ஃபுல் கட்டுக் கட்டிட வேண்டியதுதான்!) .பெரியவர்கள்,கிருத்திகை போன்ற சில நாட்களில் இவ்வாறு விரதம் இருப்பதுண்டு.அந்தப் பெரியவர் அது போன்ற விரதம் மேற்கொண்டிருந்ததைத்தான் அவர் மனைவி “உண்ணாவிரதம்” என்று சொல்லிக் காமெடியாக்கி விட்டார்!

நிற்க! என் நண்பர் சொன்ன செய்தி என்ன? இன்று சேவை வரியை எதிர்த்து நடிகர்கள் காலை 8 முதல் மாலை 5 வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள் அல்லவா?அவருக்குப் பழக்கமான ஒரு சிறிய நடிகர்,நேற்றே வீட்டில் சொல்லி விட்டாராம்,”காலை ஏழு மணிக்கெல்லாம் டிஃபன் ரெடியாகி விட வேண்டும்;சாப்பிட்டு விட்டு நான் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளச் செல்ல வேண்டும்” என்று.

இது எப்புடி இருக்கு?!

ஆனால் அவர் ஒரு சாமானியர் .

 சிலபெரிய தலைவர்களே உண்ணாவிரதத்தைக் கேலிக் கூத்து ஆக்கும்போது இவரை நோவானேன்?!

இவராவது,9 மணி நேரம் நிச்சயமாக  உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்!

உண்மையில் நாம் எல்லோருமே தினம் உண்ணாவிரதம் இருந்துகொண்டுதான் இருக்கிறோம்!

என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்;தினம் 13 மணிநேரம் உண்ணாவிரதம்தான்!

இரவு 8 முதல் மறுநாள் காலை 9 வரை.

9 மணிக்கு விரதத்தை  முறித்து (breakfast) காலை உணவு சாப்பிடுவேன்.

நீங்களும் அதுபோல்தானே!:கால அளவு வேண்டுமானால் மாறலாம்.!

இன்று காலை விரத முடிவு ஆயிற்றா?!(என்ன சாப்பிட்டீங்க?)

15 comments:

  1. இதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்ணா விரதம் என்று சொல்கிறார்களே தவிர எவ்வளவு மணி நேரம் என்று சொல்வதில்லை. எனவே நேரம் பற்றி சொல்லாதவரை ஒரு மணி நேரம் சாப்பிடாமல் இருந்தாலே(!) அது கூட உண்ணா விரதம் தான். என்ன சரிதானே!

    ReplyDelete
    Replies
    1. குறைந்த பட்சம் 24 மணிநேரம் கூட இல்லாத ஒன்றை எப்படி உண்ணாவிரதம் எனச் சொல்வது!?
      நன்றி சார்

      Delete
  2. ரெண்டு பொண்டாட்டியுடன் பொய் உண்ணாவிரதம்

    இருந்தது எங்கள்

    மஞ்சள் துண்டு

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு இதெல்லாம் சாதாரணமப்பா!
      நன்றி

      Delete
  3. நான் கூட தினம் தினம் உண்ணாவிரதம் தான்.நம்ம ஆட்களை மெளன விரதம் இருக்க சொல்லணும்.ஏமாத்த முடியாது.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா முடியாது!பேச்சு எங்கள் மூச்சு!
      நன்றி

      Delete
  4. அப்படிப் பார்த்தால் இந்திய மக்கள் தொகையில் பெரிய எண்ணிக்கையில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஏன்னா சாப்பிட ஒன்றும் கிடைப்பதில்லையே...........

    ReplyDelete
    Replies
    1. உண்மை,உண்மை.
      நன்றி ஜயதேவ்

      Delete
  5. காலை 8 மணிமுதல் -மாலை 5 மணிவரை அதற்கும் முன்னும் பின்னும் சாப்பிடுவதில் தப்பில்லையே

    ReplyDelete
    Replies
    1. 9 மனிநேரம் சாப்பிடாமல் இருப்பது ஒரு தியாகமா?
      நன்றி கண்ணதாசன்

      Delete
  6. எங்கள் மஞ்ச தலைவர் 15 நிமிடம் உண்ணா விருத்தம் இருந்து உலக சாதி படைத்துள்ளார் தெரியுமா ?

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு ஒரு நிமிடம் என்பது நமக்கு ஒரு மணிநேரம்!

      நன்றி ராஜா

      Delete
  7. உண்மையான போராளி திலீபனை தவிர வேறு யாரும் உண்மையாக உன்னாவிருதம் இருந்து இருந்ததில்லை என எண்ணுகிறேன் . நம்ம அரசியல்வாதிகள் பேச்சில் மட்டும்தான் சாகும்வரை உண்ணா விருத்தம் ...

    ReplyDelete
    Replies
    1. அந்த ஆயுதம் கூர் மழுங்கி விட்டது!

      Delete
  8. உடலைக் குறைப்பதற்காக சாப்பிடாமல் இருக்கிறார்களே...
    அவர்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது குட்டன் ஐயா...?

    அதுவும் உண்ணாவிரதம் தானா...?

    ReplyDelete