Friday, January 4, 2013

கேன்சர் கேன்சல்!

சத்திய சாயிபாபாவின் மகிமைகள் ,அவர் செய்த அற்புதங்கள் பற்றிச் சொல்லும்போது சொல்வார்கள், கேன்சர் நோயாளியைக் “கேன்சர் கேன்சல்”என் சொல்லியே   குணப் படுத்தியதாக.இப்பதிவு அதைப் பற்றி ஆராயும் பதிவல்ல என்பதை முதலிலிலேயே தெளிவு படுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன்  .

இப்போது இந்தியாவிலிருந்து,அதிலும் குறிப்பாகக் கேரளத் திலிருந்து பலர் பெரு நாட்டிலிருக்கும் லிமா என்ற ஊருக்குப் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் அனைவரும் முற்றிய நிலை புற்று நோயாளிகள்--கேன்சர் கேன்சல் செய்ய!

லிமாவில் ஒரு புது விதமான மருத்துவம் செய்யப் படுகிறது, புற்று நோயைக் குணப் படுத்த.ஒரு விதமான வண்டுகளை ஒரு குறிப்பிட்ட அளவில் தினம் விழுங்க வேண்டும்.அவ் வண்டுகள் வயிற்றுக்குள் சென்று இறந்ததும்,ஒரு இயக்கு நீரைச் சுரக்கும். அது புற்று நோயைக் குணப்படுத்தும்!

இதன் காரணமாக கேரளாவிலிருந்து பெரு  செல்ல நுழைவனுமதி  வேண்டுகோள்கள் அதிகமாக வரவே பெரு தூதரகத்திலிருந்து ஒரு அதிகாரியை அனுப்பி நிலைமையை ஆராய்ந்து நுழைவனுமதிகள் வழங்க ஏற்பாடுகள் செய்தது பெரு அரசு.சென்று வருவது உள்ளிட்ட செலவுடன் மொத்தம் மூன்று லட்சம் செலவாகலாம் எனச் சொல்லப் படுகிறது.

இந்த வண்டுக்கு ஸ்பானிஷ் ஃப்ளை என்றொரு பெயரும் உண்டு!

ஏதாவது நினைவுக்கு வருகிறதா?

ஆம்!இதற்கு செக்ஸ் ஆசையை அதிகரிக்க செய்யும்  குணமும் உண்டாம்!

இனிமேல்  கீமோ தெரபி எல்லாம் வேண்டாம்!வண்டுகளை விழுங்கி புற்று நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம்.

இது போல் ஹைதராபாத்தில் ஆஸ்த்மாவுக்காக மீன் விழுங்கும் மருத்துவம் ஒன்று இருக்கிறது அல்லவா?!

ஏதோ நல்லது நடந்தாச் சரி!

..............................................
இன்று பார்த்தது!

ஒரு கடையின் பெயர்ப் பலகையில் ”குர்டைன் வேல்ட்” என எழுதியிருந்தது.

என்ன வியாபாரம் என்றே தெரியாமல் போயிருக்கும், ஆங்கிலத்திலும் எழுதப் பட்டிருக்கா விட்டால்!

...........

...........

பெயர்----”curtain world" !!

11 comments:

  1. நல்ல தகவல்! பெயர் பலகைகள் இப்படித்தான் குழப்புகின்றன! நன்றி!

    ReplyDelete
  2. எப்படியோ கேன்சரை சரிசெய்தால் பரவாயில்லை நிறையபேரின் உயிருக்கு உத்திரவாதம் கிடைக்கும்

    ReplyDelete
  3. நல்ல தகவல் குட்டன் ஐயா.

    (வண்டுக்கள் பாவம் தான்!!)
    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. ஒருவருக்கு வேதனை;மற்றவருக்கு மகிழ்ச்சி!
      நன்றி அருணா செல்வம்

      Delete
  4. mmm...

    theriyaatha thakavalkal...

    ReplyDelete
  5. \\சத்திய சாயிபாபாவின் மகிமைகள் ,அவர் செய்த அற்புதங்கள் பற்றிச் சொல்லும்போது சொல்வார்கள், கேன்சர் நோயாளியைக் “கேன்சர் கேன்சல்”என்று சொல்லியே குணப் படுத்தியதாக.\\ இவரு என்ன வியாதியில செத்தாரு ?? கேன்சருன்னு எவனோ சொன்னான்.

    அந்த வண்டு மேட்டர் நிஜமா இருந்தா நல்லாயிருக்கும், மேலும் விவரங்கள் இருந்தால் தெரியப் படுத்துங்கள்.

    Curtain World .......... தமிழனுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா. ஃபிளவர் மில் - இதென்ன தெரியுமா? Flour Mill !!

    ReplyDelete
    Replies
    1. இது டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த செய்தியின் சாராம்சம்.மேலதிகத் தகவல்கள் கிடைத்தால் தெரிவிக்கிறேன்.
      நன்றி ஜயதேவ்

      Delete
  6. தகவலுக்கு நன்றி! புற்று நோய்க்கு காளான்கள் (Cultivated Mushrooms) சாப்பிட்டு வந்தால் குணமடையும் என்று சொல்வதுண்டு. இதுபற்றி இன்னும் முழு ஆராய்ச்சி செய்யப்படவில்லை என நினைக்கிறேன்.

    தவறாக எழுதப்பட்டிருந்த இன்னொரு பலகையை மைசூரிலிருந்து விராஜ்பேட் (குடகு மாவட்டம்) போகும் வழியில் பார்த்தேன். அதில் Diary Farm என்று பால் பண்ணைக்கு எழுதப்பட்டு இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. பலகைகளில் பல சுவாரஸ்யம்!
      நன்றி

      Delete