Wednesday, January 9, 2013

யூசுஃபின் கருணை!



கருத்த இரவொன்றில் வந்தான் ஒரு அன்னியன் யூசுஃபின் கூடாரத்துக்கு
உரைத்தான் அவன்சட்டம் துரத்துகிறது,கத்தி காத்திருக்கிறது,
ஓரிடம் இல்லை சிறிதே தலைசாய்க்க;பயந்தோடும் என்னைப் பாருங்கள்
தேடி நான் வந்தேன் ;உண்ண உணவும்,ஓய்வெடுக்க இடமும் தேவை
நாடெங்கும் நல்லவர் என்றே பேர் பெற்ற யூசுஃபே”

இக்கூடாரம் என்னுடையது அல்ல;ஆண்டவனுடையது
இருப்பதெல்லாம் உமக்கும் சொந்தம்,
வேண்டியன கொள்ளும்,வேட்கையைத் தீர்த்திடும்
என்றுரைத்த யூசுப்பும்,வந்தவனுக்கு நல்ல உவளித்தான்
படுக்க  திகள் செய்தான் .

பொழுது விடியும் முன்பே,போய் அவனை எழுப்பினான்
”இதோ ஆயிரம் பொற்காசுகள்,எடுத்துக்கொள்
வளியினும் வேகம் செல்லும் குதிரையும்  தயார்.
பொல்லார் கண்ணில் படாமல் புரவியில் ஏகுவாய் “என்றான்.

விளக்கொன்றால்  மறுவிளக்கை ஏற்றினாலும் முதல்
விளக்கு  தன் ஒளியைச் சிறிதும் இழப்பதில்லை;
அதேபோல் மேன்மை தூண்டுமே மேன்மையை!

அந்நியனின் முகம் யூசுஃபின் கருணையால் ஒளிர்ந்தது
அவன் மண்டியிட்டான்  ,மனமுருகிச் சொன்னான்
“உம் கருணைக்கு நான் தகுதியற்றவன்,
உம் மகனை இரக்கமின்றிக் கொன்ற இப்ராஹிம் நான்”

”இந்தா இன்னும் ஓராயிரம் பொற்காசு எடுத்துச் செல்
உன்னோடு சேர்ந்து ஓடட்டும் என்  ஒரே மன இருளும்
என் மகனே !ஆண்டவனின் தீர்ப்பு நேர்மையானது,நியாயமானது
உன் இறப்புக்கு இன்று பழி தீர்க்கப்பட்டது.
உறைவாய் நிம்மதியாய் உம்பர் உலகில் நீ!”

(ஜேம்ஸ் ரஸ்ஸல் லோவலின் “யூசுஃப்” என்ற கவிதையின் தமிழ் வடிவம்)

5 comments:

  1. நீங்களே மொழிபெயர்த்ததா? நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  2. என்ன முரளிதரன் சார்!நம்மை மறந்துட்டீங்க போல!
    ஆம்,இது எனது தமிழ்ப் படுத்த்ல்தான்;மேலும் பல ஆங்கிலக் கவிதைகளைத் தமிழ்ப்படுத்தும் எண்ணம் இருக்கிறது,இது பெறும் வரவேற்பைப் பொறுத்து!
    நன்றி

    ReplyDelete
  3. மொழிபெயர்த்தாலும் அதன் பொருள் சுவை குறையாமல் இருக்கிறது.நன்றி !

    ReplyDelete
  4. மொழிபெயர்ப்பும்,கவிதையும் அருமை

    ReplyDelete
  5. தமிழாக்கம் அருமை. நீங்கள் இந்த பணியையும் செய்யலாமே?

    ReplyDelete