”காலை வணக்கம் டாக்டர்!நான் சொன்ன விஷயத்தை ………
“நான் யோசிச்சேன்.உங்க தயாரிப்பு தரமானதா இருந்தா நிச்சயம் வாங்கலாம்”
”ரொம்ப சந்தோஷம் டாக்டர்!இப்ப உடனடியா எத்தனை ஸ்டென்ட் வேண்டியிருக்கும்?”
‘நான் ஒரு மாதத்தில் குறைந்தது ஐந்து ஆஞ்சியோப்லாஸ்டியாவது செய்கிறேன்.எனவே
நிச்சயம் ஐந்தாவது வேண்டும் மாதத்துக்கு.உங்க தயாரிப்பை வாங்கலாம்.ஒரு ஸ்டெண்டுக்கு
எனக்கு ரூ.10000 கொடுத்து விடுங்கள்.
“மகிழ்ச்சி டாக்டர்.உங்கள் விருப்பப்படியே செய்து விடுகிறேன்.”
மூன்று மாதம் கழிகிறது.டாக்டர் 16 ஸ்டென்ட்கள் உபயோகப் படுத்தியிருக்கிறார்.
“என்ன மிஸ்டர்!16 ஸ்டென்ட்டுக்கு ஒரு லட்சத்து அறுபதாயிரம் எனக்கு
வரணும்.இன்னும் வரவில்லை.இனிமேல் உங்க தயாரிப்பை நான் பயன்படுத்தமாட்டேன்”
“டாக்டர்.அப்படிச் செய்து விடாதீர்கள்!நான் உங்களுக்குச் சேர வேண்டிய
பணத்தைக் கொடுத்து விடுகிறேன்”
ஊழல் தடுப்புப் பிரிவுக்குப் புகார்
போகிறது.
டாக்டர் கைது செய்யப்படுகிறார்.
இது கதையல்ல நிஜம்!ஹைதராபாத்தைச்
சேர்ந்த பிரபல இதய நோய் மருத்துவர் சம்பந்தப் பட்ட நிகழ்வு இது!
ஒரு மருத்துவர் சொல்லியிருக்கிறார்
தேவையே இல்லாமல் ,மருந்தினால் குணப்படுத்தப்படக் கூடிய நேரத்தில் கூட
ஆஞ்சியோப்லாஸ்டி பலரால் சிபாரிசு செய்யப்படுகிறது என்று!
எங்கே இருக்கிறது மருத்துவப் பணியின் ஒழுக்கவியல்?
ஒரு ஆண்டில் இந்தியாவில் மூன்று லட்சம்
ஸ்டென்ட்டுகள் பயன் படுத்தப்படுகின்றன என்பது அதிகார பூர்வமற்ற தகவல்.
உலகம் எல்கே போகிறது?
ReplyDelete??
Deleteநன்றி ஐயா
மருத்துவர்கள் செய்வதைப் பணி என்றும் சேவை என்றும் சொல்வார்கள் முன்பெல்லாம். இப்போது மருத்துவத் தொழில் என்று சொல்லப்படுகிறது. தொழில் என்ற வார்த்தையைப் பிரயோகித்ததால்தான் லாபம், பணம் ஒன்றே குறிக்கோளாகிப் போனதோ? இப்படிப் பணம் சம்பாதிப்பதற்கு அந்த மருத்துவர்.... ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுத்திருக்கலாம்! பாவி... படுபாவி!
ReplyDeleteஆம் பாலகணேஷ்
Deleteநன்றி
இது ஒன்றும் புதிதல்ல. மருந்து நிறுவனங்களிடம் குளிர்சாதனப் பெட்டி, இருக்கைகள், மின் விசிறிகள் போன்றவைகளையும் வாங்கிக்கொண்டு அந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு சிபாரிசு செய்து பின் அந்த நிறுவனத்தின் மருந்துகள் விற்றதின் அடிப்படையில், Turnover Commission பெற்றதும், சுண்டுவிரலில் அடிபட்டால் கூட கதிர் படம் (Scan) எடுக்கச்சொல்லி அதில் காசு பார்த்ததின் பரிணாம வளர்ச்சியே இது! நாடு எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறது!
ReplyDeleteஉண்மைதான்
Deleteநன்றி
அரசல் புரசலாக இப்படி நடக்கிறது என்று கேள்விபட்டிருந்தாலும், உங்கள் பதிவைப் படித்தவுடன், கவலை அதிகமாகிவிட்டது.
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!
நன்றி அம்மா!
Deleteஎல்லாவற்றிலும் ஊழல்! இதுதான் இன்றைய இந்தியா! அவமானம்!
ReplyDelete
ReplyDeleteகுட்டன் ஐயா....
இனி மேல் டாக்டர்கள் எல்லாம் வேண்டாம்.
பேசாமல் பாட்டி வைத்தியத்திற்கே போய்விடலாம்....!!!
தேவையில்லாது 30% Block இருப்பவர்களுக்குக் கூட ஸ்டெண்ட் பொருத்துகிறார்கள்... மருத்துவம் சேவை என்பதிலிருந்து தொழில் என்ற நிலைக்கு எப்போதோ மாறி விட்டது குட்டன்!
ReplyDelete