Thursday, January 17, 2013

கண்ணா! இன்னொரு லட்டு தின்ன ஆசையா?!



ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு...”you can’t have the cake and eat it too”

ஆம்! சாப்பிட்டு விட்டால் கேக் இருக்காது!கேக்கை வைத்திருக்க விரும்பினால் சாப்பிட முடியாது.ஏதாவது ஒன்றுதான் முடியும்.

வேலை கிடைக்க வேண்டும்;ஆனால் வேலை செய்யாமலே பணம் கிடைக்க வேண்டும்! 

எப்படி....?!

என்ன,காமெடி பண்றயா எனக் கேட்கிறீர்களா?

ஆணி புடுங்கி அலுத்துப் போய் இருக்கேன்;சும்மா தமாஷ் பண்ணாதே என்கிறீர்களா?

பொட்டி தட்டி தட்டி,புளித்துப் போய் இருக்கிறேன்,வேடிக்கை காட்டாதே என்கிறீர்களா?

ஆனால் சில புத்திசாலிகள் இருக்கிறார்கள்;அவர்களால் அது முடியும்!

அமெரிக்காவில் ஒரு உள் கட்டமைப்பு நிறுவனத்தில் பணி புரியும் ஒருவர்...’பாப்’ எனப் பெயர் வைத்துக் கொள்வோம்...தனது வேலையை சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு ஒப்படைத்து விட்டு வேலை ஏதும் செய்யாமலே சம்பளம் வாங்கியிருக்கிறார்!

அவரது ஊதியம்,2,50,000 டாலர்கள்.சீன நிறுவனத்துக்கு வேலையை முடிக்க அவர் கொடுத்த தொகை 50000 டாலர்.எந்த வேலையும் செய்யாமல் அவருக்குக் கிடைத்த தொகை இரண்டு லட்சம் டாலர்கள்! 

அலுவலகத்தில் அவர் செய்த வேலை என்ன தெரியுமா?

காலை 9 மணிக்கு அலுவலகம் சேர்தல்;இரண்டு மணி நேரம்  இணைய உலா;பின் பூனை காணொளி!மணி 11.30க்கு மதிய உணவு;  1 மணி-இ பே நேரம்;2 மணிக்கு முக நூல் புதுப்பித்தல்;4.30 க்கு அன்றைய பணி பற்றிய அறிக்கை சமர்ப்பித்தல்! 5 மணிக்கு வீட்டை நோக்கி!

என்ன சுகமான வாழ்க்கை!

இவருக்கு ஒவ்வொரு காலாண்டும் கிடைத்த அலுவல்  மதிப்பீடு....ஒப்பற்ற, முதல்தர, ஊழியர்!

இது வெறும் அதிர்ஷ்டமா?

இல்லை!

அவரது அதீத புத்திசாலித்தனம்!

அப்படித்தானே!

பாராட்டப் பட வேண்டியவரா?

தண்டிக்கப்பட வேண்டியவரா?!

12 comments:

  1. மூளையை உபயோகித்து அவர் பணம் சம்பாதித்திருக்கலாம்.ஆனால் உடலுழைப்பு இல்லாமல் சேர்த்த பணம் அது. எனவே அவரை பாராட்டவேண்டியதில்லை.

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு புத்திசாலி!
      நன்றி சார்

      Delete
  2. எனக்கு ஒரு லட்டே போதும்பா.....

    ReplyDelete
    Replies
    1. திருப்பதி லட்டு!
      நன்றி ஆத்மா

      Delete
  3. புத்திசாலி மனிதர் தான் வோய்

    ReplyDelete
  4. மொத்த அமரிக்காவுமே ஊரான் வீட்டு பணத்தில் தான் வாழ்ந்துகிட்டு இருக்கு, இதுல ஒரு அமரிக்கர் தான் உங்க கண்ணில் பாட்டாரா!! நம்மூரில் கூட இந்த மாதிரி புத்திசாலி பார்ட்டிகள் எக்கச் சக்கமாக இருக்கிறார்கள், என்ன பணம் இந்திய ரூபாயில் இருக்கும், கொஞ்சம் கம்மியாக வரும்!!

    ReplyDelete
    Replies
    1. செய்தி இவரைப் பற்றிக் கிடைத்தது
      நன்றி

      Delete
  5. குட்டன் ஐயா.... நம்ம ஊரிலும் இப்படித்தான்
    வேலையே செய்யாமல் அரசு ஊழியர்கள்
    சம்பளம் வாங்குகிறார்கள்.

    என்னத்தைச் சொல்வது...
    புத்தியுள்ளவன் பிழைத்துக்கொள்கிறான்.

    ReplyDelete
    Replies
    1. சரிதான்
      நன்றி அருணா செல்வம்

      Delete
  6. ஒரு இடைத் தரகர்களுக்குத்தான் வருமானம் அதிகம்.அந்த வேலையைத் தான் அவர் செய்திருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. எப்படியோ, சம்பாதிக்கிறார்,நல்ல பெயரோடு!
      நன்றி முரளிதரன்

      Delete