Saturday, January 12, 2013

புத்தகக் கண்காட்சியும் நானும்!

 
பொங்கல் விடுமுறையில் சென்னையில் இருப்பதால் ஒரு நாள் புத்தகக் கண்காட்சிக்குப் போகலாம் என எண்ணம் இருக்கிறது.என்று செல்வது என இன்னும் முடிவு செய்யவில்லை. தங்கமணிக்கு இதிலெல்லாம் அதிக ஈடுபாடு கிடையாது.எனவே முதலில் தங்கமணிக்கு ஒரு  சென்னை காணும் பொங்கல் நடத்தி விட்டுப் பின்புதான் புத்தகக் கண்காட்சியெல்லாம்.

என்ன புத்தகங்கள் வாங்கலாம் எனத் திட்டமிடுதல் எதுவும் இல்லை .போக வேண்டியது பார்க்க வேண்டியது பிடித்தால் அதை வாங்க வேண்டியது!

இந்தமுறை அங்கு ஃபுட் கோர்ட்டெல்லாம் இருக்கிறதாமே!ஏன் மோகன் குமார் அவர்கள் அதைப் பற்றி எதுவும் எழுதவில்லை?!ஆமாம் கோர்ட்டுன்னா நீதி மன்றம்!அது என்ன ஃபுட் கோர்ட்?!ஹி,ஹி!ஓ!இது டென்னிஸ் கோர்ட் மாதிரியா?!

நிறையப் பதிவர்கள் வருவார்களாம்.ஆனால் எப்படித் தெரிந்து கொள்வது?அவங்க பதிவில் இருக்கும் ஃபோட்டோவை வைத்துத் தெரிந்து கொள்ளலாம் என்றால் பலர் பழைய புகைப் படத்தையே பதிவில் போட்டிருக்கிறார்கள்-(எப்பவும் இளமையாகத் தோன்ற வேண்டும் என்ற ஆசை!).

ஆனால் விடுமுறை நாட்களில் கூட்டம் கட்டுக் கடங்காமல் இருக்குமாம்!அந்தக் கூட்டதில் நீந்தி,புத்தகம் வாங்கி,பதிவர்களை அடையாளம் கண்டு,அறிமுகம் செய்து கொண்டு (சொன்னாத் தெரியப்போகுதாக்கும்!),  ஃபுட் கோர்ட்டில போய்ச் சாப்பிட்டு.....இதெல்லாம் நடக்கிற காரியமா?!

பார்க்கலாம்!

20 comments:

  1. குட்டனுக்கு குசும்பு அதிகம் அப்படிங்கறது இதுதானா ?

    ReplyDelete
    Replies
    1. குசும்பு குட்டன்!நல்லாருக்கே!
      நன்றி மதுரகவி அவர்களே

      Delete
  2. ஹா ஹா ஹா !!! செம நண்பா, எப்படியாவது கண்டு பிடிங்க...

    ReplyDelete
    Replies
    1. நான் கண்டு பிடிச்சிடுவேன்;என்னைத்தான் கண்டு பிடிக்க முடியாது!
      நன்றி ஆகாஷ்

      Delete
  3. ஆரம்பிக்கிற நாளே சுத்தி பாத்துட்டு வந்தேன்.நான் இன்னைக்கு போறதா இருக்கேன்.முடிஞ்சா மீட் பண்ணலாம்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா?முடிஞ்சா பார்க்கலாம்!
      நன்றி முரளிதரன்

      Delete
  4. அவசியம் புத்தகக் கண்காட்சிக்கு செல்லுங்கள். நிச்சயம் சென்னை பித்தன் வந்திருப்பார். யாரை அடையாளம் கண்டுபிடிக்கமுடியாவிட்டாலும் அவரை கண்டுபிடித்துவிடலாம். ஏனெனில் அவர் அடையாறு அஜீத் ஆயிற்றே!

    ReplyDelete
    Replies
    1. அவர் உங்கள் நண்பரோ!இன்னும் ஓரிருவரிக் கூடக் கண்டு கொள்ள முடியும்--புலவர் ஐயா,வே.நடனசபாபதி அவர்கள்!
      நன்றி சார்.

      Delete

  5. வணக்கம்!

    பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
    எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

    ReplyDelete
    Replies
    1. பொங்கல் வாழ்த்துகள் ஐயா!

      Delete
  6. Namma Pathivargalil 90% Discovery Book Palace Stall 43, 44 il iruppargal. Ange poi, 'Naan than Manbumigu Kuttan' endru neengal sonnal pothum. Ellorum ungalai Gavanippargal. no.. no... not in double meaning i told. Nandraga Pesuargal endru sonnen. hi... hi...

    ReplyDelete
    Replies
    1. ஏன் ஆங்கிலம்?போய்ப் பார்க்கிறேன்.
      நன்றி பால கணேஷ் அவர்களே!

      Delete
  7. அவங்க பதிவில் இருக்கும் ஃபோட்டோவை வைத்துத் தெரிந்து கொள்ளலாம் என்றால் பலர் பழைய புகைப் படத்தையே பதிவில் போட்டிருக்கிறார்கள்.\\\ அதானே, உங்கள மாதிரி லேட்டஸ்டு படத்தை யாரு போட்டாங்க!! எல்லோரும் குட்டனை ஃ பாலோ பண்ணுங்கப்பா. ஒரு கார்டூனைப் போடுங்க, ஈசியா கண்டுபுடிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா,ஹா!இன்னும் சில காலம் முகமூடியைக் கழட்ட முடியாது ஜெயதேவ்.5-2-2013 அன்று பதிவுக்கு ஒரு வயது நிறைவடைகிறது. அதன் பின் ஒரு வேளை நான் நானாக வரலாம்!

      நன்றி!

      Delete
  8. உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும்
    என் இதயங்கனிந்த தமிழர்ப்புத்தாண்டு மற்றும்
    பொங்கல் வாழ்த்துக்கள் குட்டன் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி அருணா செல்வம்!பொங்கல் வாழ்த்துகள் உங்களுக்கும் உரித்தாகுக

      Delete
  9. போயிட்டு வாங்க! எப்படியும் கண்டு பிடிச்சுடுவாங்க! :)

    ReplyDelete
    Replies
    1. பார்க்கலாம்!
      நன்றி வெங்கட்

      Delete
  10. ஆன்மிக நூல்கள் விற்கும் கடையொன்றில் காவியுடையில் உட்கார்ந்திருக்குமென்னைக்கண்டுபிடிப்பது வெகு சுலபம். ஆனால் எங்கள் வெளியீடுகளைத் தயவு செய்து வாங்கியாகனும்.

    ReplyDelete
    Replies
    1. வருகிறேன்;.ஆன்மீகத்தில் எனக்கும் நாட்டமுண்டு!
      நன்றி

      Delete