Wednesday, January 9, 2013

யாருக்குப் பொதி சுமந்தால் என்ன?!




ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான், பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்கள் ” என்றான்.

கழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு!என்றது.

ஏன் என்றான் கழுதைக்கு சொந்தக்காரன்.

எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறாதா?” என்றது.


நீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மாற்றம் மட்டுமே!

    *********************************************************************

    நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”

எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.என்றது பூனை.

  அப்போது பெரிதாக சப்தம் கேட்டது. நாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.

    நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.

    நீதி :
சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.

  
*********************************************************************


அம்மா நண்டு தன் மகனைப் பார்த்து மகனே ! ஏன் சைடு வாங்கிக்கொண்டு நடக்கிறாய்! ஏன் நேராகதான் நடந்து செல்லேன் ” என்றது. மகன்உண்மைதான் அம்மா, நேராக எப்படி நடப்பது என்று சொல்லிக்கொடுத்தால் நிச்சயம் நான் அவ்வாறே நடந்து காட்டுகிறேன்என்றது. தாய் நண்டு என்ன தான் முயன்றாலும் நேராக நடக்க வரவில்லை. பக்கவாட்டிலேதான் செல்ல முடிந்தது.சரி, இப்படியே நடந்து தொலைஎன்றது.

    நீதி : உபதேசத்தைவிட உதாரணம் சக்தி வாய்ந்தது.










  (தமிழ் தாயகத்திலிருந்து)
 

5 comments:

  1. நீதி புகட்டும் நல்ல கதைகள்!

    ReplyDelete
  2. நல்ல கதைகள்! ஆனால் அனைத்தையுமே ஏற்கனவே படித்துள்ளேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. அருமையான கதைகள் குப்பன் ஐயா.

    ReplyDelete
  4. கதைகளும் அதன் நீதியும் அருமை !

    ReplyDelete