Monday, January 28, 2013

விஸ்வரூபம் தடை செய்யப்படத்தான் வேண்டும்!



என்ன துணிச்சல் உங்களுக்கு கமல் சார்?......தொழில் நுட்பத்தில் சிறந்த ,அழுத்தமான கதைக்கருவைக் கொண்ட தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் ஒரு படத்தை,யார் உணர்வும் உண்மையாகப் புண்படா வண்ணம் எடுப்பதற்கு!

நடந்து தேய்ந்த பழைய பாதையில் சென்று மசாலா படங்களை எடுக்காமல் ஹே ராம், விருமாண்டி போன்ற படங்களை எடுத்தமைக்காக நீங்கள் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்தான்!

அதுவும் உங்கள் பணத்தை முதலீடு செய்து? நம்பமுடியாத செயல். வருந்தி உழைத்துத் தேடிய இந்தப் பணத்தை நிலத்திலோ,தங்கப் பத்திரங்களிலோ அல்லது அதனினும் மேலாக ஒரு அரசியல் கட்சி துவங்குவதிலோ செலவு செய்திருக்கலாம் எனத் தெரியாதா? எங்கு சம்பாதித்தேனோ அங்குதான் செலவு செய்வேன் என்று  இருப்பது முட்டாள்தனம் இல்லையா?!

ஆக்க பூர்வமாக,தனிச் சிறப்பாகச் சிந்திக்க என்ன துணிச்சல்!கடந்த 51 ஆண்டுகளாக எங்களையெல்லாம் மகிழ்வித்து,அழ,சிரிக்க வைத்து எங்கள் வாழ்க்கையின் அங்கமாகப் போயிருக்கிறீர்கள்;இதற்காகவே நீங்கள் தண்டிக்கப் பட வேண்டும்!

கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?

‘ஹே ராம்’ என்றொரு படம்! மஹாத்மாவுக்கு தமிழ் சினிமாவின்  யாவுங்கடந்த பாராட்டாக அமைந்தது.ஆனால் படம் வெளியாகும் முன்பே ஒரு காந்தி வெறுப்பாளர் என முத்திரை குத்தப் பட்டீர்கள்!

மரணதண்டனையைக் குறித்து விருமாண்டி என ஒரு இணையற்ற படம் எடுத்தீர்கள் ஆனால் படத்தின் பெயர்ச் சிக்கலில் நீதிமன்றத்துக்கு அலைந்தீர்கள்!

தசாவதாரம் என்றொரு படம்.விளம்பரங்களைப் பார்த்தே படத்தைப்பற்றித் தவறாகப் புரிந்து கொண்டவர்களால்,இந்துமத விரோதி என அழைக்கப்பட்டீர்கள்!

இனியாவது இப்படிப் படம் எடுப்பதை நிறுத்தக்கூடாதா?!

உங்களுக்கும் உங்களைப்போன்ற பட உலகில் உள்ள சிறந்த படைப்பாளிகளுக்கும் ”உங்கள் உடல் நலம்,மனநலம்,வாழ்வு இவற்றில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால் சிறந்த படைப்புகள் தருவதை நிறுத்துங்கள்” என்று ஒரு பாடம் புகட்டுவதற்காகவாவது ..........

விஸ்வரூபம் தடை செய்யப்படத்தான் வேண்டும்!

 (behind woods.com  என்ற தளத்தில் இந்திராணி நாராயண் என்பவர் எழுதிய   ங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம்)

21 comments:

  1. இன்றைய நிலையில் யாரையும் புண்படுத்தாமல் படம் எடுப்பது சிரமம். எனவே படம் எடுக்காமல் இருப்பதே மேல்.

    ReplyDelete
    Replies
    1. அவ்வை சண்முகி போல் எடுக்கலாமே!
      நன்றி ஐயா

      Delete
  2. சரியாக சொன்னீர்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. sako...!

    punpaduvathum...

    seelvadiya punkal piyyapaduvathum...

    yaarentru konjam sinthiyungal sonthame......

    ReplyDelete
    Replies
    1. என் பார்வை நடுநிலைப்பார்வை.
      நன்றி சீனி

      Delete
  4. விஷரூபத்திற்கு பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன்,
    விஷகருத்துகள் முறைதனா?

    மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்படும் நச்சு கருத்துகள் அனைத்திற்கும் பதிலடி.


    இங்கே சொடுக்கவும் >>>>> விஷரூபத்திற்கு பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன் விஷகருத்துகள் முறைதனா? விஷ்வரூபம் கருத்து சுதந்திரமா?

    ReplyDelete
  5. சரியா சொன்னீங்க.

    ReplyDelete
  6. உண்மைதான் .. பேசாம வயலும் வாழ்வும் எடுக்கலாம் ( அதுக்கும் ஏதாவது எதிர்ப்பு வரும்) .

    ReplyDelete
    Replies
    1. வரும்,வரும்!
      நன்றி ராஜா

      Delete

  7. கலகம் பிறந்தால்
    நியாயம் பிறக்கும் என்பார்கள்.

    எந்த ஒரு நிகழ்ச்சி விமர்சனத்திற்கு
    உள்ளாகிறதோ....
    அதில் ஏதோ ஓர் உண்மை மறைந்திருக்கிறது...

    என்ன நிகழ்ச்சி என்று தெரியாமலேயே
    என்னத்தைச் சொல்லுறது குட்டன் ஐயா.
    த.ம. 6

    ReplyDelete
    Replies
    1. ஒரு நல்ல கலைஞனுக்கு வந்த சோதனை
      நன்றி

      Delete
  8. He shouldn't have agreed for the preview before release.

    ReplyDelete
    Replies
    1. எப்படியாவது படம் வெளியாக வேண்டுமே!
      நன்றி

      Delete
  9. எல்லோருமே இப்படி எனக்கு காட்டிவிட்டுத்தான் படம் வெளியிடவேண்டும் ஆரம்பித்து விடுவார்கள்.

    ReplyDelete
  10. விஸ்வரூபம் தடை செய்யப்பட்டதன் உண்மையான காரணம் என்னவென்று தெரியாமலேயே இருக்கிறதே!


    இந்திரா நாராயண் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் என்று குறிப்பிட்டதற்கு உங்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மூலத்தைச் சொல்ல வேண்டாமா!
      நன்றி

      Delete
  11. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!.............

    ReplyDelete
  12. வணக்கம்

    இன்று உங்களின் படைப்பு வலைச்சரத்தில் அறிமுகமானது வாழ்த்துக்கள் உங்கள் பக்கம்வருவது முதல் தடவை எழுத்துலகில் மேலும் வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete