Wednesday, January 16, 2013

ரயில் ராதிகாவின் துணிவும்,முடிவும்!



ராதிகாவுக்கு ரயில் மீது என்னவோ அப்படியொரு மோகம்.

சிறு வயதிலிருந்தே இந்த மோகம் தொடங்கி விட்டது.

இதற்குத் துணை போவது போல் அவள் வசித்த குடிசையும் ரயில் தண்டவளத்தை ஒட்டியே அமைந்து விடவே,அந்த வழியாகப் போகும் ஒவ்வோரு ரயிலையும் நின்று பார்ப்பதும்,அந்த ஓட்டுநர்களுக்கு சல்யூட் அடிப்பதும் அவளுக்கு வழக்கமாகி விட்டது.

ஆரம்பப் பள்ளி நாட்களில் வகுப்பில் ஒரு நாள் ஆசிரியை மாணவ,மாணவிகளை எதிர் காலத்தில் என்ன ஆக விருப்பம் என்று கேட்க, ஒவ்வொருவரும், மருத்துவர், பொறியாளர், ஆசிரியர்,விஞ்ஞானி என்றெல்லாம் சொல்ல இவள் மட்டும் எஞ்சின் டிரைவர் என்று சொல்லி அனைவரது கேலிக்கும் ஆளானாள்!

அதைப்பற்றி அவள் கவலைப்பட்டதே இல்லை.”பெண் பிரதம மந்திரியாக இருக்கும்போது நான் எஞ்சின் டிரைவர் ஆக முடியாதா” என்பதே அவள் கேள்வி!

ஆனால் அவளால் ஐந்து வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை!அவள் தந்தை இறந்து விட அவள் அம்மாவுடன் அவளும் வீட்டு வேலைக்குப் போக ஆரம்பித்தாள்.

ஆனால் அடிக்கடி அந்தக் கனவில் லயித்து விடுவாள்.

ஒரு ரயில் அதிகாரி வீட்டில் வேலை செய்து வரும்போது,ரயில் யார்டில் எஞ்சின்,ரயில் பெட்டிகளைச் சுத்தம் செய்யும் வேலை கிடைத்தது.

எஞ்சினுக்குள் போய்ப் பார்த்துத் தொட்டுச் சுத்தம் செய்வதென்ற நினைப்பே அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது!

அவள் அந்த வேலையை மிக விரும்பினாள்.

ஒருநாள்…………

எஞ்சினைச் சுத்தம் செய்யும்போது காலில் ஏதோ இடறியது.

எடுத்துப் பார்த்தாள்…சாவி!

“என்ன சாவி?எஞ்சின் சாவியாக இருக்குமோ?” யோசித்தாள்.

சாவித்துவாரத்தில் சாவியை நுழைத்துத் திருப்பினாள்.

 யார்டில் டிரைவர் ஓட்டும்போது பார்த்திருந்த அனுபவம் கைகொடுத்தது.

அவளது செயலில் எஞ்சின் உயிர்பெற்றது!

ஓடத்துவங்கியது!

அவள் என்ன செய்தாளோ,எஞ்சின் வெகு வேகமாக ஓட ஆரம்பித்தது.

அவளுக்கு வேகத்தைக் கட்டுப்படுத்தத் தெரியவில்லை.

பயம் வந்தது.

வேகமாக ஓடிய எஞ்சின் தண்டவாள முடிவையும் தாண்டித்  தரையில் ஓடி,ஒரு வீட்டின் மீது மோதியது.

ராதிகா எஞ்சின் ஓட்டும் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியிலேயே,கண்ணை  மூடினாள்.


(இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு செய்தியின் அடிப்படையில் புனையப் பட்டது! )


16 comments:

  1. புனையப்பட்ட கதையானாலும் அசலை விட நகலே சுவாரஸ்யமாயிருந்தது!

    ReplyDelete
  2. Something similar happened at Chennai central. somebody started the engine of a local train and started driving like mad. Killed many, stopped only after hitting some other train.

    ReplyDelete
    Replies
    1. this incident reportedly happened in sweden.
      நன்றி ஜெயதேவ்!

      Delete
  3. நல்ல புனைவு,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வித்தியாசமான சிந்தனை.
    வாழ்த்துக்கள் குட்டன் ஐயா.
    த.ம. 7

    ReplyDelete
  5. அடடா... ஆசை அழிவுக்குக் காரணம் ஆகிவிட்டதே....

    ReplyDelete
  6. குட்டனின் கற்பனைக் குதிரையில் பயணம் செய்வது நல்ல அனுபவமாகவே இருந்தது. அழகாய் கதை புனைந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete


  7. தலைப்பும் முடிப்பும் மலைப்பே தந்தது!

    ReplyDelete
  8. ஆசை நிறைவேறியது மகிழ்ச்சியைதந்தது முடிவு அய்யோ...பாவம் என்றாகியது.

    ReplyDelete
    Replies
    1. பாவம்தான்!
      நன்றி மாதேவி

      Delete