Thursday, January 3, 2013

தமிழ்ப் பெயர்ச் சிக்கல்!

“வாப்பா!எப்படி இருக்கே”

”ஏதோ இருக்கேன்.எனக்கு ஒரு உதவி செய்யணும்பா.”

“என்ன சொல்லு”

”என் பெயரைத் தமிழ்ப் படுத்தணும்”

“ஏம்பா திடீர்னு?”

“நான் காதலிக்கும் பெண்ணோட அப்பா ஒரு தமிழ்ப் பித்தர்.அவரோட மகளுக்கு,அதாவது என் காதலிக்கு முதலில் வைத்த பெயரான ’சாந்தி’ என்பதை ’அமைதி’ என்று மாற்றியவர். நானும் தமிழ்ப் பெயர் வச்சுக்கிட்டா அவர்கிட்ட நல்ல பெயர் வாங்கிடலாம்”

”ஆனா உன் பெயர்ல கொஞ்சம் சிக்கல் இருக்கே”

”என்னப்பா?”

“தமிழ்ப் படுத்தினா நல்லாருக்காதே”

“எல்லாம் சரியா இருக்கும்;சொல்லு”

”சரி;அப்புறம் என்னைக் குத்தம் சொல்லாதே.உன் தமிழ்ப் பெயர்...........

“தற்குறி”

“அய்யோ!என்னப்பா?’

“ஆமா!சுயம்புலிங்கம்தானே உன் பெயர்?!”

!!!!!!!!!!!!!!!!!!!!!

18 comments:

  1. அப்ப லிங்கம்னா குறியா !!

    ஓகே ஓகே

    ReplyDelete
  2. எங்க ஊரில் தானாக தோன்றிய லிங்கத்திற்கு " தான்தோன்றீஸ்வரர் " என்று பெயர். அந்த பெயரிலேயே சிவன் கோவில் உள்ளது.

    தமிழ் படுத்தறேன்னு சொல்லி Season Ticket என்பதை பருவச் சீட்டு என்று போட்டு மானத்தை வாங்குவதும் நடக்கத்தான் செய்கிறது!!

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஜயதேவ்.நேரதியாக மொழி பெயர்த்தால் விபரீதங்கள் தோன்றாதா என்ன?!
      நன்றி

      Delete
  3. மொழிபெயர்க்கலாம். மொழிபெயர்ப்பு என்ற பெயரில் பொருளை சிதைக்காதவரை.

    ReplyDelete
  4. தமிழில் பெயர் மாற்றம் பற்றிய கருத்துக்கள் பரவலாகப் பேசப்பட்ட காலத்தில், துக்ளக்கில் சோ அவர்கள், கபாலீஸ்வரர் என்பதை கபாலம்= மண்டையோடு, ஈசுவரர்= கடவுள் அதனால் மண்டையோட்டுக் கடவுள் எனக் குறிப்பிடலாம் என எழுதினார். அது தான் ஞாபகம் வருகிறது.
    இலங்கையில் நான் சிங்களப்பகுதியில் வேலை செய்த போது, மகாலிங்கம் எனும் என் நண்பர் பெயரைச்
    சொல்லி சிங்கள நண்பர்கள் சிரிப்பார்கள். சிங்களத்தில் "பெரிய குறி" என்பதே கருத்து, அவர்கள் வேறு
    அழைக்கும் போது கையால் பெரிதென சைகை வேறு காட்டி ; காவுக்கு ஒரு இழுப்பு வேறு.
    பெண்களே அட்டகாசமாக கிண்டல் செய்வார்கள்.
    கிருஸ்ணன் என்றால் கறுப்பனாமே!

    ReplyDelete
    Replies
    1. ஆம் யோகன் பாரிஸ்
      நன்றி

      Delete
  5. பெயர் மாற்றத்தில் இவ்வளவு இருக்கா ?

    ReplyDelete
    Replies
    1. இருக்கே!
      நன்றி சசிகலாம்மா

      Delete
  6. மொழி பெயர்ப்புன்னாலே சிக்கல்தான்!

    ReplyDelete
  7. காதலுக்கு உதவியா?

    ReplyDelete
    Replies
    1. நம்மால முடிஞ்சது!!
      நன்றி கண்ணதாசன்

      Delete
  8. நகைச்சவையானாலும் வேண்டாமிந்த விளையாட்டு!

    ReplyDelete
    Replies
    1. புரிகிறது ஐயா!இனிக் கவனமாக இருப்பேன்.
      நன்றி

      Delete