அவர்
தமிழார்வம் உள்ள ஒரு அயல்நாட்டு நண்பர்.
ஒரு
நாள் என்னைக்கேட்டார்”தமிழில் ’நெடுநாள் வடை’என்று ஒரு இலக்கியம்
இருக்கிற தாமே! வடையைப்
பற்றி ஒரு இலக்கியமா!”.
”ஓ!அதைப்பற்றி ஆங்கிலத்தில் படித்தீர்களா?”
“ஆம்!”
”நண்பரே!அது நெடுநாள் வடை அல்ல.’நெடுநல் வாடை”
“அப்படியென்றால்
என்ன?”
”இது
பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று.ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் புகழ்ந்து பாடப்பட்டது”
“அதற்கு
ஏன் அந்தப்பெயர்?”
”நூலில்
குறிப்பிடப்படும் நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நடை பெறுகின்றன. தலைவனைப் பிரிந்து தவிக்கும்
தலைவிக்கு அது மிக நீண்ட(நெடு) வாடைக் காலமாகப் படுகிறது.போரில் வெற்றி பெற்ற
தலைவனுக்கொ வெற்றியின் காரணமாக ஒரு நல்ல வாடைக்காலமாகத் தோன்றுகிறது. ஆகவே அது நீண்ட,நல்ல,வாடைக்காலம்!எனவே நூலின்
பெயர் “நெடு நல் வாடை’.இதுதான் புலவர்
கவிதைகளின் சிறப்பு”
“அருமை”
“வடை
ஒரு நாள் இருந்தாலே ஊசிப் போய்விடும்.நெடு நாள் இருந்தால் என்ன ஆகும்”
”எனக்கு
இது தொடர்பான ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது.இரு புலவர்கள் வடைபஜ்ஜி விற்கும்
ஒரு டீக்கடைக்குப் போனார்கள்.வடை வாங்கினார்கள். வடையைப் பிய்த்துப் பார்த்தால் வடை
ஊசிப்போய் நூல் வருகிறது.
ஒருவர் சொன்னார்” ஊசியிருக்கிறது”.இரண்டாமவர் சொன்னார் ”நூலுமிருக்கிறது”. வாசலில் ஒரு பெண் ஏதாவது கொடுப்பார்களா எனக் காத்திருப்பதைப் பார்த்தனர் ”தையலுக்காகும்” என அவளிடம் கொடுத்தனர்.என்ன தமிழ் விளையாட்டு பாருங்கள்”
ஒருவர் சொன்னார்” ஊசியிருக்கிறது”.இரண்டாமவர் சொன்னார் ”நூலுமிருக்கிறது”. வாசலில் ஒரு பெண் ஏதாவது கொடுப்பார்களா எனக் காத்திருப்பதைப் பார்த்தனர் ”தையலுக்காகும்” என அவளிடம் கொடுத்தனர்.என்ன தமிழ் விளையாட்டு பாருங்கள்”
“இப்போதெல்லாம்
பெண்களுக்குத் தமிழ்க் கொடி ,தமிழ்ச்செல்வி என்றெல்லாம் அழகான பெயர்கள்
வைக்கிறார்கள்;ஆனால் வேறு பெயரிட்டு அழைக்கிறார்கள்,அழகாகத் தமிழ் என அழைத்தால்
என்ன”
”அழைக்கலாம்.ஆனால்
பலருக்குத் தமிழின் சிறப்பான இந்தச் சிறப்பு ழகரம் உச்சரிக்க வருவதில்லையே.பழம் என்பதற்குப்
பளம்,பயம்,பலம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.”
”ழகரம்
என்றில்லை.லகர ளகர,னகர,ணகரமும் தகராறுதான்.சிறுவன் பல்லிக்குப் போனான் என்கிறார்கள்.சுவரில்
பள்ளி இருக்கிறது என்று சொல்கிறார்கள்.நெஞ்சத்துக்கு மணம் எனச் சொல்கிறர்கள்.பணம்
என்பதைப் பனம் என்கிறார்கள்.”
”ஆமாம்!குறிப்பாக
இத்தகைய தமிழ்ப்பணியில் பெருந்தொண்டு ஆற்றுபவர்கள் தொ(ல்)லைக் காட்சியினர்தான்.
ஒரு
நாள் ஓய்வில் வருகிறேன் ஐயா!தமிழ் பற்றி நிறையப் பேச வேண்டும்
வாருங்கள்.உங்களைப்
போல் தமிழ் கற்ற ஒருவர் திருக்குறளைத் திருத்த முனைந்த கதை ஒன்று
சொல்கிறேன்!