Friday, February 1, 2013

குடித்து வாழ வேண்டும்!



ஒரு படத்தில் கலைவாணர் பாடுவார் ”குடிச்சுப் பழகணும்” என்று!

டி.. மதுரம்”ஐயய்யோ,என்னாங்க,குடிச்சுப் பழகணுங்கறீங்க” என்றவுடன் தொடர்ந்து பாடுவார் ”படிச்சுப் படிச்சுச் சொல்லுறாங்க பாழும் கள்ளை நீக்கிப் பாலைக் குடிச்சுப் பழகணும்”பால் இல்லாவிட்டால் மோர் இல்லாவிட்டால் நீராகாரம் என்று போகும் அப்பாடல்.

குடியின் தீமையை உணர்ந்தவர்கள் குடிக்காமல் இருக்க வேண்டும்;குடிப்பழக்கம் உள்ளவர் களாயின் அதை விட வேண்டும்.

விட முடியவில்லையா,அளவாகவாவது குடிக்க வேண்டும்!

அது என்ன அளவு?

இந்திய ஆண்களின் குடி அளவு...விஸ்கி என்றால் ஒரு நாளைக்கு அதிக பட்சம் இரண்டு பெரிய  பெக்...வோட்கா என்றால் மூன்று சிறிய ஷாட்!(அப்போ மற்ற பிராந்தி வகையறா என்றால் எவ்வளவு வேண்டும் குடிக்கலாமா?!)

பெண்கள் என்றால் அதிக பட்சம் இரண்டு மத்திய அளவு ஒயின்!

போதை மருந்து மற்றும் மதுபான ஆய்வு என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

57 நாடுகளில் அமுலில் இருக்கும் குடி அளவு வழிகாட்டுதல் பற்றி ஒப்பீடு செய்து அதன் பின் இந்த அளவுகள் கூறப்பட்டுள்ளன.

பெண்கள் ஒரு வாரத்துக்கு சராசரி அளவில் 12 அளவும் ஆண்கள் 18 அளவுக்குள்ளும் மது அருந்தலாம்.வாரத்துக்கு ஒருநாள் மது அருந்தக்கூடாது.வண்டி ஓட்டுபவர்கள்,கர்ப்பமான பெண்கள்,குழைந்தைக்குப் பால் கொடுக்கும் பெண்கள் இவர்கள் மது அருந்தக் கூடாது.
பல நாடுகளில் குடிக்கும் அளவு என்ன என்பது பற்றிய பரிந்துரை இருக்கிறது;ஆனால் இந்தியா,பெல்ஜியம்,நார்வே போன்ற சில நாடுகளில்,இப்படிப்பட்ட பரிந்துரைகள் இல்லை!”

 நான் கேட்பது...ஒருவரால் குடிக்கும் அள்வைக் கட்டுப்படுத்த முடியும் என்றால்,முழுதாக நிறுத்த முடியாதா என்ன?

ஊறுகாய்:-நேற்று ஸ்கூல்பையன் பார்க் ஷெரடன் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார்.

ஒரு தற்செயல் இணைவு...நேற்று நான் நண்பர் ஒருவருடன் அதே ஓட்டலுக்குச் சென்றிருந்தேன்(அவர் செலவுதான்)

//இடதுபுறம் திரும்பிச் சென்றால் வலதுபுறத்தில் அழகான "பார்"// இது பதிவில் அவர் எழுதியது!

அந்தப்பாரின் உள்ளே.....

மக்கில் இருப்பது ,விளிம்பு வரை நுரை ததும்பும் பியர்!

அந்த மக்கின் பெயர்----”பூட்லெக் மக்”(bootleg mug!)

இரண்டு பேர் போனோம்;ஆனால் ஒரு மக்தான் இருப்பதைப் பார்க்கிறீர்கள்!

அவர்தான் குடித்தார்!

அவர் அளவோடு குடிப்பவர்தான்!

13 comments:

  1. பீர் குடி வகையில் சேர்த்தி இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆகா!பெரியவங்க சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி!
      நன்றி ஐயா

      Delete
  2. குடிமகன்களுக்கு நல்ல தகவல்தான். அளவை பின்பற்றுவார்களா?

    ReplyDelete
    Replies
    1. என்னத்தை படிச்சு,என்னதை பின் பற்றி!
      நன்றி முரளிதரன்

      Delete
  3. உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் தருமானால் நிச்சயம் அளவோடு குடிக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. பெயரே உ.பா.தானே!
      நன்றி ஐயா

      Delete
  4. அளவோடு குடித்தால் வளமோடு வாழலாம்னு புதுமொழியே உண்டாகிடுச்சு போல... உங்களின் எழுத்துநடை எப்பவும் போல சுவாரஸ்யம்.

    ReplyDelete
  5. //ஒருவரால் குடிக்கும் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்றால்,முழுதாக நிறுத்த முடியாதா என்ன?//
    நன்றாய்க் கேட்டீர்கள்!அவர்களைக் கேட்டால் நாளை முதல் குடிக்கமாட்டேன் என்பார்கள்! வெளி நாட்டு தட்பவெப்ப நிலைக்கு உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள அவர்கள் அளவோடு குடிக்கிறார்கள். வெப்ப நாடு போன்ற நமது நாட்டில் அது தேவை இல்லை. ஆனால் யார் சொல்லி கேட்கப்போகிறார்கள்?

    ReplyDelete
    Replies
    1. அதானே!
      நன்றி நடனசபாபதி சார்

      Delete
  6. விரைவில் சொர்க்கம் செல்ல வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நல்லவ்ர் நீங்க ,அடுத்தவன் சீக்கிரம் சொர்க்கம் போக ஆசைப்படுறீங்க!
      தலைப்பைப் படிச்சுட்டு கமெண்ட் போட்டீங்களோ!
      எப்படியோ, நன்றி!

      Delete
  7. நமக்கு தேவையில்லாத விவகாரம்! இருந்தாலும் ரசித்தேன்! நன்றி!

    ReplyDelete