Friday, February 15, 2013

அண்ணாவையே எதிர்த்த ஒரு தம்பி!



அண்ணா!

அவர் தலைவர் மட்டுமல்ல!

தம்பிகளுக்கெல்லாம் கடவுள்.

அவர் சொல்லே அவர்களுக்கு வேதம்!

அவர் விரல் நீட்டிக்காட்டிய வழியில் நடப்பதே தம்பிகளின் கடமை.

அவர் இட்ட கடமையைக் கண்ணியத்தோடும்,கட்டுப்பாட்டோடும் நிறைவேற்றுவதே 

அவர்கள் குறிக்கோள்..

ஆனால்…………………..
………………

அந்த அண்ணாவையும் ஒரு தம்பி எதிர்க்கும் ஒரு நேரம் வந்தது.

அண்ணா  தருமன் சூதாடி  ஒவ்வொன்றாக இழக்கிறான்.

சகுனியின் தூண்டுதலில் நாட்டையும் வைத்திழக்கிறான்

பின்னர் நகுல சகாதேவர்களை இழக்கிறான்.

சகுனி சொல்கிறான்

வேறொரு தாயிற் பிறந்தவர்-வைக்கத்
தகுவரென்றிந்தச் சிறுவரை-வைத்துத்
தாயத்தி லேயிழந்திட்டனை

பின்னர் அர்ஜுன்,வீமனையும் இழக்கிறான்;தன்னையுமிழக்கிறான்!

தம்பிகள் ஒரு வார்த்தை பேசவில்லை.

கடைசியாக….

பாஞ்சால நாட்டினர் தவப்பய னை
ஆவியி னினியவ ளை-உயிர்த்
தணிசுமந் துலவிடு செய்யமு தை
ஓவிய நிகர்த்தவ ளை-அரு
ளொளியினைக் கற்பனைக் குயிரத னைத்
தேவியை நிலத்திரு வை-எங்குந்
தேடினுங் கிடைப்பருந் திரவியத் தை”.......

பாஞ்சாலியை சூதில் பணயமாக  வைத்திழக்கிறான்.

அவளை சபைக்கு இழுத்து வந்து அவமானப்படுத்துகிறார்கள் கௌரவர்கள்

தம்பி வீமன் பொறுமையிழக்கிறான்.

அண்ணாவை முதன் முதலாக எதிர்க்கிறான்!

சொல்கிறான்…

“நாட்டை யெல்லாந் தொலைத்தாய்-அண்ணே
நாங்கள் பொறுத் திருந்தோம்.
மீட்டு மெமை யடிமை-செய்தாய்
மேலும் பொறுத் திருந்தோம்.

துருபதன் மகளைத்-திட்டத்
துய்ந னுடற் பிறப்பை
இரு பகடை யென்றாய்-ஐயோ
இவர்க் கடிமை யென்றாய் !

இது பொறுப்ப தில்லை-தம்பி
எரி தழல் கொண்டு வா.
கதிரை வைத் திழந்தான் –அண்ணன்
கையை எரித்திடுவோம்”

இதுவே தம்பி அண்ணாவை எதிர்த்த சம்பவம்!

16 comments:

  1. அழகாக விளக்கினீர்கள்.

    ReplyDelete
  2. அண்ணாவையே எதிர்த்த தம்பி என்ற தலைப்பைப் பார்த்ததும் நீங்கள் சொல்லின்செல்வர் திரு E.V.K.சம்பத் அவர்களை பற்றி எழுதியிருக்கிறீர்களோ என நினைத்து பார்த்தபோது, தருமனின் செயல் கண்டு பீமன் வெகுண்டு எழுந்ததை ‘பாஞ்சாலி சபதத்தில்’ பாரதி சொன்ன எழுச்சிமிகு வரிகளை பதிவிட்டு அன்றே அண்ணனை (வேறு காரணத்திற்காக) எதிர்த்த தம்பிகளும் இருந்திருக்கிறார்கள் என்பதை அழகுபட சொல்லியிருக்கிறீர்கள். பீமனுக்கு அர்ஜுனன் சொன்ன ‘தருமமே மறுபடியும் வெல்லும்’ என்ற அழகான பதில் வரிகளை இன்னொரு பதிவில் வேறொரு தலைப்பில் எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. தருமம் இன்று வெல்லுமா?ஆராய்ந்து பார்க்கலாம்!
      நன்றி ஐயா

      Delete
  3. அழகு மிக்க தலைப்பு! பொருத்தமும் அருமை!

    ReplyDelete
  4. விளக்கமும் அருமை

    ReplyDelete
  5. கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரமா...?
    பீமனைத்தான் சொல்கிறேன்.

    தலைவன் தவறு செய்கிறான் என்றதும்
    அன்றே... அப்பொழுதே குரல் கொடுத்திருக்க வேண்டும்.

    நம் நாட்டில் மகாபாரதக்கதை இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

    ஈர்ப்பான தலைப்பும்
    அருமையான பதிவும் சூப்பர் குட்டன் ஐயா.

    த.ம. 5

    ReplyDelete
    Replies
    1. ”சூரிய?”
      நன்றி அருணா செல்வம்

      Delete
  6. சுவாரஸ்யமான தலைப்பு! சுவையான மகாபாரத கதை பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  7. நன்றாக சிந்தித்து எழுதப்பட்டுள்ளது. நன்றி.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வேதா இலங்காதிலகம் அவர்களே

      Delete