ஒரு பெண் ஒரு நாள் இரவு வீடு திரும்பாமல் வெளியே தங்கி விட்டு,மறுநாள்
காலை வீடு திரும்பினாள்.கணவனிடம்”நேற்று இரவு நேரமாகிவிட்டதால் என் உயிர்த்தோழி ஒருத்தியோடு
தங்கி விட்டேன்”என்று.
அவள் கணவன் அவள் உயிர்த்தோழிகள் பத்துப் பேருக்கு தொலை பேசி விசாரித்தான். அவர்கள்
அனைவரும் அவர்களுக்குத் தெரியாது எனச் சொல்லி
விட்டார்கள்!
..
ஒரு ஆண் இரவு வீடு திரும்பாமல் மறுநாள் காலை வீட்டுக்கு வந்தான்.மனைவியிடம்
சொன்னான்”நேற்று நேரமாகி விட்டதால் என் உயிர் நண்பன் ஒருவனுடன் தங்கி விட்டேன்.”
அவன் மனைவி அவன் உயிர் நண்பர்கள் பத்துப்பேரைத்தொலை பேசியில் தொடர்பு
கொண்டாள்;
அதில் எட்டுப்பேர் அதை உண்மையென்றும் அவருடன்தான் தங்கியதாகவும்
சொன்னார்கள்!
இருவர் அதோடு நில்லாமல் இன்னும் அங்குதான் இருப்பதாகவும் சொன்னார்கள்!
இதுதான் பெண்ணுக்கும் ஆணுக்கும் வேறுபாடு!
(நன்றி :டைம்ஸ் ஆஃப் இந்தியா)
……………………………
ஒரு பெண் திருமணம் ஆகும் வரை எதிர்காலம் பற்றிக் கவலைப்படுகிறாள்
ஒரு ஆணின் கவலையே திருமணத்துக்குப் பின்தான் ஆரம்பமாகிறது!
……………..
ஒரு பெண் ஒருவனை மணக்கும்போது அவன் மாறுவான் என்ற நம்பிக்கையோடு
மணக்கிறாள்; ஆனால் அவன் மாறுவதில்லை
ஓர் ஆண் பெண்ணை மணக்கும்போது
அவள் மாறமாட்டாள் என நம்புகிறான்;ஆனால் அவள் மாறி விடுகிறாள்!
……………..
வாழ்க்கையில் இருநேரங்களில் ஒரு ஆணால் பெண்ணைப் புரிந்துகொள்ள
முடிவதில்லை!
1)திருமணத்துக்கு முன்2)திருமணத்துக்குப் பின்!
……………………………
கொஞ்சம் இருங்க!தங்கமணி என்னவோ சொல்கிறாள்!
என்னம்மா?
இன்னிக்கு ராத்திசிச் சாப்பாடு கிடையாதா?!
அய்ய்ய்யோ!
//இன்னிக்கு ராத்திசிச் சாப்பாடு கிடையாதா?!
ReplyDeleteஅய்ய்ய்யோ!//
இதற்குப் பெயர் தான் தடி கொடுத்து அடி வாங்குவது என்பது!
ஹா ஹா!
Deleteநன்றி
ஐ ஜால்ல்ல்ல்ல்ல்லி.., சாப்பாடு போச்சா?! போச்சா?
ReplyDeleteஉங்களுக்கு ஜாலி!எனக்கு....!
Deleteநன்றி
புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு ஏன் கல்யாணம்...?
ReplyDeleteஇதில் சாப்பாடு வேறயா...?
அதுதானே புரியலை!!
Deleteநன்றி
nice
ReplyDeleteநன்றி
Deleteகுட்டன் லேசுப்பட்டவர் இல்லை.
ReplyDeleteசாப்பாடு கிடைக்காது தான்.
நன்றாக எழுதப்பட்டுள்ளது.
ரசனை.
வேதா. இலங்காதிலகம்.
நன்றி
Deleteஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு சூப்பர்!
ReplyDeleteநன்றி
Deletenalla kalakalappu..!
ReplyDeleteநன்றி
Deleteஆண்களுக்கெல்லாம் அறிவு இருக்கிற அளவுக்கு புத்திசாலித்தனம் கிடையாதாமே!
ReplyDeleteஇது வேறா?
Deleteநன்றி
சுவையான பகிர்வு! நன்றி!
ReplyDeleteநன்றி
Deleteபரஸ்பரம் கொண்டுள்ள புரிதலே வாழ்க்கை.
ReplyDeleteஉண்மைதான்
Deleteபோச்சே போச்சே இன்னைக்கு சாப்பாடு போச்சே
ReplyDeleteதண்ணி குடிச்சாச்சு!!
Deleteநன்றி
இதிலிருந்து தெரிந்துக்கொள்ளுங்கள்...
ReplyDeleteஆண்கள் எவ்வளவு பொய் சொல்கிறவர்கள்...
பெண்கள் எவ்வளவு உண்மையானவர்கள் என்று....
பதிவு அருமை குட்டன் ஐயா.
ஆகா!
Deleteநன்றி
//வாழ்க்கையில் இருநேரங்களில் ஒரு ஆணால் பெண்ணைப் புரிந்துகொள்ள முடிவதில்லை! //
ReplyDelete//1)திருமணத்துக்கு முன்2)திருமணத்துக்குப் பின்!//
அப்போ எப்பதான் புரிந்து கொள்வது ?
என்னபா இது உங்கள் வலைக்கு இளஞ்சர்கள் மட்டுமே வர வேண்டுமா அல்லது மனம் இளமையாய் இருக்க வேண்டுமா
//அப்போ எப்பதான் புரிந்து கொள்வது ?//
Deleteஅதுதானே புரியலை!
//என்னபா இது உங்கள் வலைக்கு இளஞ்சர்கள் மட்டுமே வர வேண்டுமா அல்லது மனம் இளமையாய் இருக்க வேண்டுமா //
இளமையென்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம்தான்!
நன்றி
Deleteஅட...
ReplyDeleteஅட...
ReplyDelete//என்னம்மா?
ReplyDelete//
பெண்டாட்டியை இப்படிக் கூப்பிடமாட்டார்கள்.