ஐயன்மீர்,
அதிகமான ஆணி பிடுங்க வேண்டியிருப்பதால் எனக்கு பணிக் காய்ச்சல் கண்டிருக்கிறது.
இந்த சூட்டுடன்,தங்கமணியின் கோபாக்னியின் சூடு வேறு-- தன்னைக் கவனிப்பதே இல்லை என்று!
எனவே என்வலைப்பதிவு மேய்தலை நான் ஒழுங்கு படுத்த எண்ணியுள்ளேன்.
அதன்படி சில முடிவுகளை நான் எடுத்துள்ளேன்.
அவையாவன....
1)திங்கள்,புதன்,வெள்ளி--வலைப்பதிவு எழுதும் நாட்கள்
2)செவ்வாய்,வியாழன்,1/2 சனி--பின்னூட்ட நாட்கள்
3) 1/2 சனி,ஞாயிறு--தங்கமணிக்கான நாட்கள்!( கட்டளைகளை நிறைவேற்ற)
வீட்டில் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும் முடிவு!
தவறாமல் பின்பற்ற வேண்டும்!
..........................................................................
நேரத்தின் அருமை!
.................................
நேரம் என்பது இலவசமாகக் கிடைப்பதுதான்;
ஆனால் அது விலை மதிப்பற்றது!
அதை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ள
முடியாது;
ஆனால் பயன்படுத்த முடியும்!
அதை நீங்கள் உங்களிடம் வைத்திருக்க
முடியாது;
ஆனால் செலவழிக்க முடியும்!
அதை இழந்து விட்டாலோ
திரும்பப் பெற என்றுமே முடியாது!
.........................................................
நேரத்தை செலவிட தாங்கள் எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன்.
ReplyDelete'நேரத்தை இழந்து விட்டாலோ
திரும்பப் பெற என்றுமே முடியாது.'என்ற கருத்து ஆயிரத்தில் ஒரு சொல்.
நன்றி சபாபதி சார்
Deleteஅருமை.... கலக்குங்க...
ReplyDeleteநன்றி ச்கூல் பையன்
Deleteசிறப்பு அருமையான பகிர்வு.
ReplyDeleteநல்ல முடிவு.... எந்நேரமும் ஒரே வேலையைச் செய்தால் கஷ்டம் தான்!!!
ReplyDeleteநன்றி வெங்கட்
Deleteநல்ல அட்டவணை .காலத்தின் அருமை கருதி நீங்கள் எடுத்த முடிவு சரியே
ReplyDeleteநன்றி கண்ணதாசன் சார்
Deleteமுடிவு நல்ல முடிவுதான். காப்பாத்தினீங்கன்னா, சரி.
ReplyDeleteசந்தேகம் வேண்டாம்!சில நாட்களாவது காப்பாற்றுவேன்!
Deleteநன்றி
நல்ல முடிவுதான்! நானும் கொஞ்சம் யோசித்து வலை மேய்தலை குறைக்கலாம் என்று நினைத்துள்ளேன்! நன்றி
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteநாம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே...
ReplyDeleteநீங்கள் போட்டிருக்கும் அட்டவணையை எல்லோருமே கடைபிடிக்கலாம்.
ReplyDeleteநேரத்தின் அருமை காலம் கடந்தபின் தான் தெரியும்.
அட்டவணையை தப்பாமல் கடைபிடிக்க வாழ்த்துகள்.
நல்ல முடிவு!
ReplyDelete