என்னைச் சந்திக்காமலேயே என் மீது அப்படி
என்ன கோபமோ பள்ளி மாணவனுக்கு (அதாங்க
ஸ்கூல் பையன்!),ஒரு சிக்கலான தொடர் பதிவில கோத்து விட்டு விட்டார்!”என் முதல் கணினி அனுபவம்” என்ற தலைப்பில் எழுத வேண்டுமாம்.இதைத் தன் வளைக் கரங்களால் தொடங்கி வைத்தவர் ஆரணி அக்கா!என்னவோ போங்கப்பா;நானும் இதுல மாட்டிக்கிட்டேன்!
எனக்குத் தினமும் கணினி முன் அமர்வதே முதல்
அனுபவம் போலத்தான் தோன்றுகிறது; எதோ ஒரு
விரலால் தட்டிப் பதிவை ஒப்பேத்தி விடுகிறேனே தவிர,நுணுக்கங்கள்
எதையும் கற்றுக் கொள்ளவில்லை!சிலரது பதிவுகளைப் பார்த்தால் பொறாமையாக
இருக்கிறது! எத்தனை அலங்காரங்கள்?!
சரி விடயத்துக்கு வருவோம்.என்
முதல் கணினி அனுபவம் ,எப்போது ?(ஐயா புண்ணிய வான்களே!முதல் கணினி அனுபவத்தோடு நிறுத்திக்
கொள்ளுங்கள்.ஒவ்வொரு அனுபவமாகத் தொடராதீர்கள்!) பள்ளியில் படிக்கும்போதா?கல்லூரி சென்றபிறகா?அது
முக்கியமில்லை அனுபவம் எப்படி என்பதே முக்கியம்.
என் வீட்டுக்கு அருகில் ஒரு கணினிப் பயிற்சி
நிறுவனம் தொடங்கினார்கள். அதில் இலவச அறிமுகம் என்று பயிற்சி வகுப்பு ஒன்று நடத்தினார்கள். இலவசமாச்சே,விடலாமா?முதல்
ஆளாகப் போய் விட்டேன்.முதல் வகுப்பில் இருபது பேர் இருக்கும்.பத்துக் கணினிகள். ஒவ்வொன்றின்
முன்னும் இருவர்.என் பார்ட்னர்…….(வேண்டாம் அந்தக்கதையெல்லாம் எதற்கு. சுருக்கமாகச்
சொன்னால் வகுப்பு சுவாரஸ்யமாகப் போக உதவியது!)
குப்பையைப் போட்டால் குப்பை வரும்,பைனரி
என்று என்ன வெல்லாமோ சொன்னார்கள். கடைசியில் உருப்படியாக எல்லோரும் ஒரு மின்னஞ்சல் கணக்குத் தொடங்க உதவினார்கள். நான் யாஹூ
வில் ஒரு கணக்குத் தொடங்கினேன்.இடையில் பிஸ்கட் ,டீ வேறு!
அது ஒன்றுதான் நான் அன்று கற்றுக் கொண்டது!
ஆனாலும் சுவாரஸ்யமான அனுபவம்தான்!
நான் மட்டும் சும்மாவிடலாமா ஐந்து பேரை மாட்ட வேண்டாம்?!
இதில் ஒரு சங்கடம் என்னவென்றால் இச் சுழலில் ஏற்கனவே சிக்காதவர்களாகத் தேட வேண்டும்;என் பதிவைப் படிப்பவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதானே அவர்களுக்குத் தெரியும்!
அந்த ஐவர்!
1)வே.நடனசபாபதி
2)s.suresh
3)டினேஷ் சுந்தர்
4)கவியாழி கண்ணதாசன்
5)காமக் கிழத்தன்
எழுதுவாங்கன்னு நம்புகிறேன்!
இதில் ஒரு சங்கடம் என்னவென்றால் இச் சுழலில் ஏற்கனவே சிக்காதவர்களாகத் தேட வேண்டும்;என் பதிவைப் படிப்பவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதானே அவர்களுக்குத் தெரியும்!
அந்த ஐவர்!
1)வே.நடனசபாபதி
2)s.suresh
3)டினேஷ் சுந்தர்
4)கவியாழி கண்ணதாசன்
5)காமக் கிழத்தன்
எழுதுவாங்கன்னு நம்புகிறேன்!
பார்ட்னர் யார்…….?
ReplyDeleteஅவர்களுக்கு சொல்லியாச்சி...!
எந்தப் பார்ட்னர்?!
Deleteநன்றி தனபாலன்
என்னை வழக்கம்போல் வம்பில் மாட்டிவிட்டீர்கள்! பரவாயில்லை. உங்கள் அழைப்பை ஏற்று நானும் எனது முதல் கணினி அனுபவத்தை விரைவில் பதிவிலேற்றுகிறேன்.
ReplyDeleteநன்றி சார் காத்திருக்கிறேன்
Deleteஎன்னையும் கோர்த்து விட்டாச்சா? நான் ஏற்கனவே பிபிசியில் பேசிக் படிச்ச கதைன்னு கொஞ்சம் எழுதி இருக்கேன்! இருந்தாலும் உங்க அழைப்புக்காக திரும்பவும் ட்ரை பண்றேன்! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்;எதிர்நோக்குகிறேன்!
Deleteகலக்கல்.. சரி உங்க பாட்னர் யாருன்னு சொல்லவே இல்லையே...
ReplyDeleteஅதை இன்னொரு பதிவில் சொன்னாப் போச்சு!
Deleteநன்றி சங்கவி
என்ன இவ்வளோ சுருக்கமா முடிச்சிட்டீங்க. குட்டன்
ReplyDeleteமுதல் அனுபவம் இவ்வளவுதான்!
Deleteநன்றி முரளிதரன்
ரொம்ப எடிட் செய்திடிங்க போலருக்கே,உங்ககிட்டேர்ந்து இன்னும் எதிர்பார்த்தேனே
ReplyDeleteசின்ன அனுபவம்;சின்னப் பதிவு.
Deleteநன்றி அம்மா!
பார்ட்னர் யாராக இருந்தாலும் வகுப்பு சுவாரஸ்யமாக போனால் சரி... பதிவு சூப்பர்...
ReplyDeleteநன்றி ஸ்கூல் பையன்
Deleteஅந்த பயிற்சி நிறுவனத்தில் நடந்த வற்றை கொஞ்சம் விவரித்து இருக்கலாம், ரொம்பவும் சுருக்கமாக முடித்து விட்டீர்...
ReplyDeleteகணினி அனுபவம் மட்டுமே!மற்றதெல்லாம் பிரிது மொழிதல்!
Deleteநன்றி ரூபக் ராம்
முதல் கணினி அனுபவம் சுவாரஸ்யம், ஆமா அந்த பார்ட்னர் யாருன்னு சொல்லலையே ஹி ஹி...
ReplyDeleteசொல்லிடலாம்!
Deleteநன்றி மனோ
கணினி அனுபவத்தினை விடுங்க! உங்க பாணியில் பார்ட்னர் பத்தி சொல்லியிருக்கலாம்! :)
ReplyDeleteசொல்ல வேண்டியதுதான்
Deleteகுட்டன் சார்... ரொம்ப எதிர்பார்த்து வாசிச்சேன்... சுருக்கமா சொல்லிடிங்களே....
ReplyDeleteஅப்புறம் அந்த பார்ட்னர் பத்தி தனியா ஒரு பதிவு போடுங்க...
விரைவில்....
Deleteநன்றி
// (வேண்டாம் அந்தக்கதையெல்லாம் எதற்கு. சுருக்கமாகச் சொன்னால் வகுப்பு சுவாரஸ்யமாகப் போக உதவியது!) //
ReplyDeleteசரி! அந்த சுவாரஸ்யத்தை தனிப்பதிவாக எழுதவும்.
// அந்தப் பஞ்சமர்! //
பஞ்சமர் என்றால் அர்த்தமே வேறு. எனவே ஐவர் என்று சொல்லுங்கள்.