ஒருவன் ஒரு புதுக்கார் வாங்கினான்.
அக் காரின் சிறப்பு என்ன என்றால்,அது
ஒரு ரோபோ கார்.
அவன் என்ன கட்டளையிட்டாலும் அதைத் தானே
செய்து முடிக்கும்.
அது வந்த பின் அவன் எங்கெல்லாம் சென்று வரவேண்டுமோ
அங்கெல்லாம் அதை அனுப்பி விட்டு நிம்மதியாக இருக்க ஆரம்பித்தான்;
அதுவும் அவன் கட்டளைகளைச் சரியாக
நிறைவேற்றி வந்தது.
ஒரு நாள் அவன் மனைவி சொன்னாள்”எனக்கு
இன்று மிகக் களைப்பாக இருக்கிறது.எனவே உங்கள் காரை அனுப்பிக் குழந்தைகளைப் பள்ளியிலிருந்து
அழைத்து வரச் சொல்லுங்கள்”
அவனும் காரிடம் “என் குழந்தைகளை அழைத்து
வா”எனச் சொல்லி அனுப்பினான்.
கார் வெகு நேரம் திரும்பி வரவில்லை.
அவனுக்குக் கவலை அதிகமாகிப் போலீஸில்
புகார் செய்யப் புறப்படும் நேரத்தில் கார் வந்து சேர்ந்தது.
“உங்கள் குழந்தைகள்”என்று சொல்லி நின்றது.
காரிலிருந்து எதிர்வீட்டுச் சிறுமியும்,பக்கத்து வீட்டுப் பையனும்,அவன் ஆபீஸ் டைப்பிஸ்ட் மகளும்,அவன் மனைவியின்
நண்பியின் பையனும் இறங்கினர்.
மனைவி கோபத்துடன் அவனைப் பார்த்துக்
கேட்டாள்”இவர்களெல்லாம் உங்கள் குழந்தைகளா?”
அவன் கேட்டான்”அது இருக்கட்டும் .ஆனால்
காரில் நம் குழந்தைகள் இல்லையே அதற்கு என்ன சொல்கிறாய்?”
ஹய்யோ ஹய்யோ!...
ஹய்யோ ஹய்யோ!...
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:)))))))
குட்டன் என்றாலே குறும்புதான்.ஆனாலும் இந்த பதிவில் உள்ள நகைச்சுவையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை!
ReplyDeleteஉண்மையாகவா?!
Deleteநன்றி சார்
ஹா ஹா ஹா
ReplyDeleteசிரித்தீர்களா!
Deleteநன்றி
ஹாஹா ஆமா இந்த கார் எந்த கம்பெனி
ReplyDeleteகுட்டன் ஸ்பெசல்!
Deleteநன்றி
ஹா ஹா இரண்டு பேரும் செமையா மாட்டிக்கிட்டாங்க
ReplyDelete:)
Deleteதொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்!
நன்றி
ஹா ஹா ஹா செம கதை.. சரியான குசும்பு குட்டன்
ReplyDeleteபிரிக்க முடியாதது...குட்டனும் குசும்பும்!
Deleteநன்றி சீனு
நல்ல குசும்பான கதை! வாழ்த்துக்கள்! உங்கள் தொடர்பதிவு கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டது! நேரமிருப்பின் ஒருதரம் என் தளம் வாருங்கள்! நன்றி!
ReplyDeleteவருகைக்கும் என் அழைப்பை ஏற்றமைக்கும் நன்றி சுரேஷ்
Deleteநல்லாத்தான் இருக்கு
ReplyDeleteஇருக்கணும்!
Deleteநன்றி முரளிதரன்
ஹா ஹா... (உங்களின் வயது 'A'bove 60...?)
ReplyDeleteஎன்ன அநியாயம்!என் வலைப்பூவின் தலைப்பில் பாருங்கள்..”இளைஞர்களுக்காக,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ”!ஒரு இளைஞர் வயது எப்படி 60க்கு மேல் இருக்க முடியும்?செப்டெம்பர் 1 ஆம்தேதி பாருங்கள்!
Deleteநன்றி
உங்க கற்பனையா இது..?
ReplyDeleteஇல்லீங்க!படிச்சதுதான்!
Deleteநன்றி
நாம அடி வாங்காம தப்பிக்கணும்..
ReplyDeletepபோறப்போக்கிலே நீங்க சொல்றதும் சாத்தியமாகலாம்
ReplyDeleteசிரித்தேன்....
ReplyDeleteசெத்தாண்டா கொமாரு, அவளும் மாட்டியாச்சு ஹா ஹா ஹா ஹா....!
ReplyDeleteஹா ஹா ஹா .. உங்களுக்கு மட்டும் எப்படி இம் மாதிரி கதைகள் சிக்குகிறது
ReplyDeleteகுரும்பு .. ஹா...ஹ....ஹா...
ReplyDeleteகுறும்பு என்றாலும் கரும்பு!
ReplyDeleteஉங்க குறும்புக்கு எல்லையே இல்லை!.... :)
ReplyDelete