Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts

Tuesday, June 30, 2015

பணம் என்னும் மதம்!



என்ன வடிவேலு அண்ணே !நல்லாருக்கீங்களா?

வாப்பா லோகநாதா! என்ன விசயம் இவ்வளவு தூரம்?

நம்ம கந்தசாமி ஐயா வீட்டுக்குப் போயிருந்தேன்.அவருக்கு எழுபது வயசாகுதில்ல!வாழ்த்துச் சொல்லப் போயிருந்தேன்.வீடு ஜே ஜே ன்னு இருக்குது.அவரோட மகள்கள்,மகன்.,மருமகள்  மருமகன்கள் பேரன் பேத்திகள் எல்லாம் வந்திருக்காங்க

அப்படியா?

அவர் உண்ன்மையிலே முற்போக்கான ஆளுதான் அண்ணே!ஒரு குட்டி இந்தியாவே இருக்கிதில்ல வீட்டில?முதல் மருமகன்கிறித்தவர்;இரண்டாவது முஸ்லீம்.ஆனா எல்லாரையும் ஏத்துகிட்டாரே,பெரியமனுசன்தான் அண்ணே!

என்னண்ணே சிரிக்கிறீங்க? நான் சொன்னது சரிதானே.

லோகநாதா.உனக்கு முழு விசயமும் தெரியாது.முதல் பொண்ணு கிறித்தவப்பையனைக் காதலிச்சா..கட்டிக்கிட அப்பாகிட்ட அனுமதி கேட்டா.அவர் மறுத்திட்டாரு.அதுக்குப் பொறகுதான் அந்தப் பெண் அதே பையனைக் கல்யாணம் பண்ணிகிடுச்சு.வீட்டூக்கே வராதேன்னு சொல்லி விரட்டி விட்டுட்டார்.

அப்புறம்?

ரெண்டாவது பெண்  முஸ்லிம் பையனைக் காதலிச்சது.அப்பாகிட்ட சொன்னா அனுமதிக்க மாட்டார்னு சொல்லாம போய்க் கல்யாணம் பண்ணிக்கிடுச்சு.கல்யாணத்துக்கு மொத நாளே மதமும் மாறிடுச்சு.பிறகு அப்ப கிட்ட ஆசிர்வாதம் வாங்க வந்திச்சு.அவரும் ஏத்துக்கிட்டாரு.
அப்படியாண்ணே

அப்புறம்தான் சின்னப் பொண்ணு விசயத்தில விட்டுக் கொடுத்துட்டு பெரிய பெண்ணைத் தள்ளி வைக்கிறதைப் பத்தி ஊரெல்லாம் ஒரு மாதிரிப் பேசுவாங்களேன்னு அவங்களையும் ஏத்துக்கிட்டார்”

ஏண்ணே இந்தப் பாரபட்சம்?

லோகநாதா! அவருக்கு மதம் பத்தியெல்லாம் கவலை இல்லை.முதல் மருமகன் வசதி இல்லாதவன்.இரண்டாவது பெரிய பணக்காரன்!

அவருக்குப் பணம்தான் மதம்!

Wednesday, December 12, 2012

உங்கள் துன்பங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன்!

பணம்தான் வாழ்க்கையில் எல்லாமா?

பணத்தால் படுக்கையை வாங்கலாம்;தூக்கத்தை வாங்க முடியுமா?!

பணத்தால் கடிகாரத்தை வாங்கலாம்;நேரத்தை வாங்க முடியுமா?!

பணத்தால் புத்தகத்தை வாங்கலாம்;அறிவை வாங்க முடியுமா?!

பணத்தால் மருந்தை வாங்கலாம்;ஆரோக்கியத்தை வாங்க முடியுமா?!

பணத்தால் அந்தஸ்தை வாங்கலாம்;மரியாதையை வாங்க முடியுமா?!

பணத்தால் உடலுறவை வாங்கலாம்;உண்மைக்காதலை வாங்க முடியுமா?!

பல நேரங்களில் பணத்தால் கிடைப்பது துன்பம்,வேதனை.

நான் உங்கள் நண்பன்.

ஒரு நண்பனாக நான் உங்கள் துன்பம் வேதனைகளை ஏற்கத் தயார்.

உங்கள் பணத்தை எல்லாம் எனக்குக் கொடுத்து விட்டு நிம்மதியாக இருங்கள்!

------உங்கள் நண்பன் ஒருவன்.

(இணையத்திலிருந்து)

இலவச இணைப்பு--ஒரு ஜோக்
------------------------------------------

வகுப்பறையில் இரு மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆசிரியர் வந்து அவர்களைக் கண்டித்துக் காரணம் கேட்டார்.

அவர்கள் சொன்னார்கள்”சார் கீழே பத்து ரூபாய் கிடந்தது.அதை மிகப் பெரிய பொய்யனுக்குக் கொடுப்பதாகத்  தீர்மானித்தோம்.யார் அது என்பதில்தான் வாக்குவாதம்.”


ஆசிரியர் சொன்னார்”பொய்யா?சே?என்ன மோசமான எண்ணம் உங்களுக்கு?நான் உங்கள் வயதில் பொய்யே சொன்னதில்லை.”

மாணவர்கள் அந்தப் பணத்தை ஆசிரியருக்கே கொடுத்து விட்டனர்.

(இந்தியாவின் நேரங்கள்)