Tuesday, June 30, 2015

பணம் என்னும் மதம்!



என்ன வடிவேலு அண்ணே !நல்லாருக்கீங்களா?

வாப்பா லோகநாதா! என்ன விசயம் இவ்வளவு தூரம்?

நம்ம கந்தசாமி ஐயா வீட்டுக்குப் போயிருந்தேன்.அவருக்கு எழுபது வயசாகுதில்ல!வாழ்த்துச் சொல்லப் போயிருந்தேன்.வீடு ஜே ஜே ன்னு இருக்குது.அவரோட மகள்கள்,மகன்.,மருமகள்  மருமகன்கள் பேரன் பேத்திகள் எல்லாம் வந்திருக்காங்க

அப்படியா?

அவர் உண்ன்மையிலே முற்போக்கான ஆளுதான் அண்ணே!ஒரு குட்டி இந்தியாவே இருக்கிதில்ல வீட்டில?முதல் மருமகன்கிறித்தவர்;இரண்டாவது முஸ்லீம்.ஆனா எல்லாரையும் ஏத்துகிட்டாரே,பெரியமனுசன்தான் அண்ணே!

என்னண்ணே சிரிக்கிறீங்க? நான் சொன்னது சரிதானே.

லோகநாதா.உனக்கு முழு விசயமும் தெரியாது.முதல் பொண்ணு கிறித்தவப்பையனைக் காதலிச்சா..கட்டிக்கிட அப்பாகிட்ட அனுமதி கேட்டா.அவர் மறுத்திட்டாரு.அதுக்குப் பொறகுதான் அந்தப் பெண் அதே பையனைக் கல்யாணம் பண்ணிகிடுச்சு.வீட்டூக்கே வராதேன்னு சொல்லி விரட்டி விட்டுட்டார்.

அப்புறம்?

ரெண்டாவது பெண்  முஸ்லிம் பையனைக் காதலிச்சது.அப்பாகிட்ட சொன்னா அனுமதிக்க மாட்டார்னு சொல்லாம போய்க் கல்யாணம் பண்ணிக்கிடுச்சு.கல்யாணத்துக்கு மொத நாளே மதமும் மாறிடுச்சு.பிறகு அப்ப கிட்ட ஆசிர்வாதம் வாங்க வந்திச்சு.அவரும் ஏத்துக்கிட்டாரு.
அப்படியாண்ணே

அப்புறம்தான் சின்னப் பொண்ணு விசயத்தில விட்டுக் கொடுத்துட்டு பெரிய பெண்ணைத் தள்ளி வைக்கிறதைப் பத்தி ஊரெல்லாம் ஒரு மாதிரிப் பேசுவாங்களேன்னு அவங்களையும் ஏத்துக்கிட்டார்”

ஏண்ணே இந்தப் பாரபட்சம்?

லோகநாதா! அவருக்கு மதம் பத்தியெல்லாம் கவலை இல்லை.முதல் மருமகன் வசதி இல்லாதவன்.இரண்டாவது பெரிய பணக்காரன்!

அவருக்குப் பணம்தான் மதம்!

9 comments:

  1. பணம் எனும் மதம்! :(

    த.ம. +1

    ReplyDelete
  2. லோகநாதனுக்கும் எங்களுக்கும் இப்போ விஷயம் நல்லாவே புரிந்து விட்டது.

    பகிர்வு ஜோர் :)

    ReplyDelete
  3. யாருமே வெறுக்கமுடியாத மதம். எல்லோரும் சபித்துக்கொண்டே வணங்கும் மதம். சரியா சொல்லிருக்கீங்க!

    ReplyDelete
  4. சர்வ சமய இன மொழி - சமரச மந்திரத்தின் மகிமையே மகிமை.

    நான்கை ஐந்தாக்கிவிட்டேன்.

    நன்றி.

    ReplyDelete
  5. மதம் பிடிப்பது என்பது இதுதானோ? உண்மையில் இவர் தான் ‘மதம் பிடித்தவர்’ என நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. பணம் பல கல்யாணங்களில் விளையாடுகின்றதுதான்...

    ReplyDelete