Monday, June 29, 2015

சாந்தியும் சமாதானமும்!



கோடைவிடுமுறைக்குப் பின் அன்றுதான் பள்ளி திறந்திருந்தது.
மாலை பள்ளியிலிருந்து திரும்பிய சாந்தி,புத்தகப் பையை எறிந்து விட்டு அம்மாவிடம் வந்து ஆர்வமாகப் பேசலானாள்,
“அம்மா!இன்னிக்கு என் வகுப்பில்,ஒரு புதுப் பெண் சேர்ந்திருக்கா.அவ பேரை இது வரைக்கும் நான் கேட்தே இல்லை.சமாதானம் தான் அவ பேரு. நீ கேள்விப்பட்டிருக்கயா?”
ஓ!கிறித்தவப் பெண்ணாக இருப்பாள்.அவர்கள்தான் அப்படிப் பெயர் வைப்பார்கள்”என்றாள் அம்மா.
சாந்தி  கேட்டாள்”என் வகுப்பில் இருக்கும் எஸ்தர் பொட்டு வைப்பதில்லை.இவள் வைத்திருக்கிறாளே?”
கத்தோலிக்கராக இருப்பாள்.அவர்கள் பொட்டு வைப்பதுண்டு” இது அம்மாவின் பதில்
“கெட்டிக்காரியாக இருக்கிறாள் அம்மா.ரொம்ப நல்லவளும் கூட.என் அருகில்தான் அவளுக்கு இருக்கை.அன்பாகப் பேசுகிறாள்.அவள் கொண்டு வந்த கேக்கை எனக்கும் கொடுத்தாள்”சாந்தி
”பெயருக்கு  ஏற்றபடி இருக்கிறாள் போலும். நீயும் அது போலத்தான் இருக்க வேண்டும்.
இன்று நம் வீட்டில் செய்த முறுக்கை நாளை அவளுக்குக் கொண்டு போய்க் கொடு.”
அம்மா தொடர்ந்தாள்”உன் பெயர் சாந்தி .சாந்தி என்றால் அமைதி இல்லியா? ஆங்கிலத்தில் பீஸ் என்ற வார்த்தைக்கு அமைதி ,சமாதானம் என்ற இரு பொருளும் உண்டு.எனவே 
உன் பெயரும் அவள் பெயரும் ஒன்றுதான்”
”இதையே வேறு விதமாகவும் சொல்லலாம்.உலகில் சண்டை இன்றி இருந்தால்தான் உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும்.அதாவது சமாதானம் இருந்தால்தான் சாந்தி நிலவும்.சாந்தி இருந்தால்தான் வாழ்க்கை சுகமாக இருக்கும்.எனவே சாந்தியும் சமாதானமும் மிக அவசியம்.”
”ஆமாம் அம்மா.என் வகுப்பு உவைஸ் கூடச் சொல்லியிருக்கான்,அவர்கள் ஒருவரை ஒருவர்  சந்திக்கும்போது சாந்தியும் சமாதானமும் நிலவுக  என்று கூறிக்கொள்வார்கள் என்று .” சாந்தி சொன்னாள்

”உங்கள் வகுப்பில் அனைவருடனும் பிரியத்துடன் சண்டைகளின்றிப் பழக வேண்டும்
 நீங்கள் இருவரும் என்றும் சேர்ந்தே இருந்து நன்கு படித்து நல்ல பெயர் எடுக்க வேண்டும்.
ஒரு நாள் அவளை நம் வீட்டுக்கு அழைத்து வா”
அம்மா சாந்தியை அணைத்துக் கொண்டாள்

14 comments:

  1. குழந்தைகளாக இருக்கும்போதே கற்றுக் கொள்ளட்டும்...

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜவர்களே

      Delete
  2. அழகான மத நல்லிணக்கன கதை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சீனிஅவர்களே

      Delete
  3. வணக்கம்
    அன்பின் வெளிப்பாடு சொல்லம் கதை மிகஅருமையாக உள்ளது த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ரூபன் அவர்களே

      Delete
  4. இந்த குழந்தை மனம் சாகும் வரை வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. சரியே
      வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலனவர்களே

      Delete
  5. சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். ஆமென்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நடனசபாபதி அவர்களே

      Delete
  6. உண்மைதான் எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்!

    ReplyDelete
  7. சாந்தியும் சமதானமும் நிலவுக!

    ReplyDelete
  8. வணக்கம்.

    உங்கள் பதிவின் தலைப்பைப் பார்த்த உடனேயே முடிவு செய்துவிட்டேன்,

    இது நிச்சயம் அந்த சாந்தியும் சமாதானமும் இல்லையென.!

    முன்னனுபவம் :)

    ரசனை.

    நன்றி.

    ReplyDelete
  9. நாங்கள் சொல்ல வந்ததை ஊமைக்கனவுகள் விஜு அவர்கள் சொல்லிவிட்டார்...

    இரண்டும் இருந்தால் ...இருந்தால்...இருந்தால்..என்று சொல்லிக் கொண்டே போகலாம்...சமாதானம் இருந்தால் சாந்திதான்...சாந்தி இருந்தால் சமாதானம் அங்கு உண்டு என்பதும் தெரிந்துவிடுகிறது...நல்ல வார்த்தை விளையாடல்..

    ReplyDelete