“ஹலோ!யாரு குட்டனா? பழையபடியும் எழுத ஆரம்பிச்சுட்டீங்க போல!”
”ஏன்,எழுதக்கூடாதா?”
“அப்படி இல்ல .நீங்க கட்டாயம்
தொடர்ந்து எழுதணும்.எங்களை மாதிரி இளைஞர்களுக்காக வலைப்பூ நடத்தும் இளைஞர் நீங்க தொடர்ந்து எழுதணும்.அதுதான் எங்க ஆசை’
“ரொம்ப நன்றிங்க”
இது போல் நேற்று முதல் பத்துக் கால்கள்.
எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி?
ஹூ…ம்!
இப்படி நடந்தால் நன்றாகத்தான் இருக்கும்
.
ஆனால் நடக்கவில்லையே!
நானே ஏதாவது இப்படி நினைத்துப் பார்த்தால்தான்
உண்டு!
ஒரு ஆறு பேரைத்தவிர யாரும் ஒண்ணும் சொல்லவில்லை.
எட்டிப்பாத்தவங்களே மொத்தம் 117 பேர்தான் இது வரை.
இதுக்காக எல்லாம் எழுதாம இருந்துவிடுவேனா
என்ன?
எழுதத்தான் போகிறேன்.
இளைஞர்களுக்காக,இளைஞரால் நடத்தப்படும்
இளைஞர் வலைப்பூ!
இதை ஏன் சொல்ல வேண்டும்?
எல்லோருக்கும் தெரியும் இது
’இளைஞர்களுக்கான’ வலைப்பூ என்று
எனவே அதை நீக்கி விடலாம்.
நான் இளஞன் என்பதை திரும்பத் திரும்ப
சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
எனவே இளைஞரால் என்பதை நீக்கி விடலாம்.
பதிவின் எழுத்தே சொல்லும் இது இளைஞர்
வலைப்பூ என்று.
எனவே இளைஞர் என்பதை நீக்கி விடலாம்.
கடைசியில் வலைப்பூ!
இது வலைப்பூ இல்லாமல் வேறு என்ன?
எனவே அதையும் நீக்கி விடலாம்.
மிஞ்சியிருப்பது.....ஒன்றுமில்லை!
அதுதான் இந்த வலைப்பூ!!
டிஸ்கி:இப்போதுதான் கவனித்தேன்.சென்ற
பதிவுடன் ட்ரிபிள் செஞ்சுரி அடிச்சுட்டேன்!
ஆதரவுக்கு(!) நன்றி!
தொடர்ந்து எழுதுங்கள் குட்டன்ஜி வாழ்த்துகள் செஞ்சுரிக்கு
ReplyDeleteதமிழ் மணம் 2
வணக்கம்
ReplyDeleteதொடருகிறேன்.... த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அட...! வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteஐயா குட்டன் அவர்களே! ‘கண்ணில் படாமல் இருந்தால் மனதை விட்டு மறைந்துவிடும்’ என்ற ஆங்கில சொற்றொடரை அறியாதவரல்ல நீங்கள். தொடர்ந்து எழுதுங்கள். தொடர்வோர் எண்ணிக்கை தானே கூடும். முன்னூறு பதிவுகள் விரைவில் மூவாயிரம் பதிவுகளாகட்டும். வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கங்க எப்படி இருக்கிங்க ?
ReplyDeleteஎங்களை நினைவிருக்கா ?
தொடர்ந்து எழுதுங்க.
தொடர்ந்து எழுதுங்க! அடிக்கடி காணாம போயிடறீங்க! அதனாலதான் பேஜ் வியு குறைந்திருக்கும்! ரீ எண்ட்ரி ஆனது பலர் கண்ணுல பட்டிருக்காது! தொடருங்கள்! 300வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteதூங்கும் போதும் காலாட்டிகிட்டே இருக்கணும் ,இல்லேன்னா பூட்ட கேஸுன்னு முடிவு பண்ணிடுவாங்க ,அதனாலே இருக்கிற வரைக்கும் எழுதிக்கிட்டே இருக்கணும் :)
ReplyDeleteஆஹா.... 300-வது பதிவு. முதலில் இருந்தது போல நிறைய குறும்புப் பதிவுகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். விரைவில் பல நூறு பதிவுகளை எட்டிட எனது வாழ்த்துகள்.
ReplyDeleteரிட்டர்ன் ஆஃப் தெ ட்ராகன்....அதுவும் 300 வது பதிவு...இன்னும் நிறைய சென்ஞ்சுரிகள் அடிக்க வாழ்த்துகள்!
ReplyDeleteநீங்கள் நிச்சயமாக இளைஞர்தான்...ஐயா என்று அழைக்கப்பட்டாலும்!!!! (சரி சரி தெரிஞ்சா மாதிரி காமிச்சுக்கலை...)