பகவான் நித்யானந்தா அவர்கள் பிறப்பு
பற்றி உறுதியான தகவல்கள் இல்லை.
அவரது சீடர்கள் சொல்வது- கோழிக்கோட்டுக்கு அருகில்
உள்ள டுனேரி கிராமத்தில் ஒரு ஆதரவற்ற குழந்தையாக நாயர் தம்பதியால்
கண்டெடுக்கப்
பட்டார்.
பிறப்பு 1897 ஆம் ஆண்டு என்று மட்டும் தெரிகிறது. இருபது வயதுக்கு முன்பே
அவர்,ஹிமாலயாவில் அலைந்து திரிந்து ஆத்ம ஞானம் பெற்றார் .
1920 இல் திரும்பி வந்து
கன்னங்காட்டில் ஒரு ஆசிரமம் கட்டத் தொடங்கினார்.
அக்கால ஆங்கில அதிகாரிகள் அவர்
கள்ள நோட்டுத்தயாரிப்பதாகச் சந்தேகப் பட,அவர் அவர்களை முதலைகள் நிறைந்த ஒரு குளத்துக்கு அழைத்துச் சென்று அதில்
மூழ்கி ரூபாய் நோட்டுக்கள் எடுத்துக் காட்டினாராம்.
1936 இல் மகாராஷ்ட்ராவில் உள்ள
கணேஷ்புரிக்குச் சென்று அங்கேயே தங்கி ஆசிரம் நிறுவினார்.8-8-1961 இல் மகா சமாதி
அடைந்தார்.
இவருக்குப் பின் ஆசிரமத்தலைவராக
வந்தவர் ஸ்வாமி முக்தானந்தா.1982 இல் இவர் காலமானார்.
அவருக்குப் பின் குருமயி சித்விலாசானந்தா, அவர் சகோதரர் நித்யானந்தா இருவருக்கும் கருத்து வேற்றுமை வந்து ,நித்யானந்தா தனியாகச் சென்று ஆசிரமம் அமைத்துப் பின் தஸ்னமி அகாராவின் மஹா மண்டலேஸ்வரர் ஆனார்.
அவருக்குப் பின் குருமயி சித்விலாசானந்தா, அவர் சகோதரர் நித்யானந்தா இருவருக்கும் கருத்து வேற்றுமை வந்து ,நித்யானந்தா தனியாகச் சென்று ஆசிரமம் அமைத்துப் பின் தஸ்னமி அகாராவின் மஹா மண்டலேஸ்வரர் ஆனார்.
பகவான் நித்யனந்தாவின் சமாதி கணேஷ்புரியில்
இருக்கிறது.