நாளை காதலர் தினம்;ஆனால் என் அட்டவணைப்படி பதிவு எழுதும் தினமல்ல!
எனவே இன்றே காதலர் தின வாழ்த்துகள்.
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்
ஆதலினாற் காதல் செய்வீர் உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
காதலினாற் சாகாம லிருத்தல் கூடும்
கவலைபோம்,அதனாலே மரணம் பொய்யாம். (பாரதி)
..........................................
காதல்!
அது அனைவரும் பேசும் மொழி
ஆனால் இதயம் மட்டுமே புரிந்து கொள்ளும் மொழி!
................................................
உன்னைச் சந்தித்தது தற்செயலே
உன்னிடம் நட்பானது தேர்ந்தெடுத்தே-ஆனால்
உன்னிடம் காதல் கொண்டது என்னையும் மீறி!
.....................................
காதல் என்பது என்ன?
கணிதத்தில்-ஒரு சமன்பாடு!
வரலாற்றில்-ஒரு போர்!
வேதியலில் -ஒரு எதிர்வினை!
ஓவியத்தில்-ஓர் இதயம்!
என்னில்---நீ!
.....................................................