நான் பிறக்கும்போது
என்னைத் தூக்கியெடுத்து
அன்போடு அணைக்க ஒரு
பெண்ணிருந்தாள்---என் அம்மா
வளரும் பருவத்தில்
என்னுடன் விளையாடிக்
கவனம் செலுத்த ஒரு
பெண்ணிருந்தாள்---என் அக்கா
பள்ளி செல்கையில்
பாடம் சொல்லித்தர
அங்கும் ஒரு
பெண்ணிருந்தாள்---என் ஆசிரியை
என் சுக துக்கங்களில்
தானும் பங்குகொண்டு
ஊன்றுகோலாய் ஒரு
பெண்ணிருந்தாள்---என் மனைவி
என் முரட்டுத்தனத்தை
மாற்றி என்னை இளக்க
மலர்போல் ஒரு
பெண்ணிருந்தாள்---என் மகள்.
நான் உயிர் நீகும்போது
என்னை உள்வாங்கிக் கொள்ள
பொறுமையாய் ஒரு
பெண்ணிருக்கிறாள்---நிலமகள்!
பெண்மையைப்போற்றுவோம்!
பெண்ணே நீ வாழ்க!!
பெண்ணே நீ வாழ்க!!