Monday, March 26, 2012

காதலிக்கப் பெண்கள் தேவை!!

-------------------------------------
தகுதிகள்
.............

1..10th பெயிலாகியிருக்கணும் ( நாங்கலாம் 7வது பாஸ். பாஸ் தான பெருசு அதான் )


2..அப்பன் வசதியாக இருக்கணும் ( வீட்டோட மாப்பிள் ளையா செட்டில் ஆகிடலாம் )


3..அப்பா செல்லமா இருக்கணும் ( செலவுக்கு பாக்கெட்மணி கிடைக்கும் )


4..மொக்கை போடத் தெரியணும் ( நேரம் போகணும்லா )


5..பொண்ணு அழகா இருக்கணும் ( நாலுபேர்கிட்
ட பெருமையா சொல்லணும்லா )


6..குறைந்தது ஒரு தங்கை இருக்கணும் ( அட போங்கப்பா கூச்சமா இருக்கு )
    (பத்தினிக்கதைகள் படிப்பீரே,மச்சினி கிடைத்தால் விடுவீரோ!--ஜெயகாந்தன்)

7..இருசக்கர வாகனம் இருக்கக்கூடாது ( நாங்க லிப்ட் குடுத்தால்தான் கிக் )


8..அதிக தோழிகள் இருக்கணும்(கண்ணுக்கு குளிர்ச்சியா சைட் அடிக்கலாம்லா)


9..ஆண் நண்பர்கள் இருக்ககூடாது ( போட்டிலாம் போட முடியாது )


10.பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனின் ரசிகையா இருக்கணும் (தியேட்டர்லயும் காதல் பண்ணலாம்)


சட்ட திட்டங்கள்:

1..அழகான பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

2..ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் கிடைக்கப்பெற்றால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

3..விண்ணப்பிக்கும் அனைவருடைய பெயர்களும் பொன்னெழுத்துக்களால் கல்வெட்டில் பதிக்கப்படும்.
 
4..விண்ணப்பதாரர்களில் 5 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு உபரியாக சேர்த்துகொள்ளபடுவார்கள்.

5..தேர்ந்தெடுக்கப்படும் 5 பேருக்கும் காதலியின் அப்பன் பணத்தில் 5 iphone 4s மொபைல் பரிசளிக்கப்படும்.

6..தள்ளுபடியாகும் விண்ணப்பதாரர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்படும்.

7..தேர்ந்தெடுக்கப்படும் காதலிக்கு 1 வருட உத்திரவாதம் வழங்கப்படும்.

8..முகநூலைப் போல் ஒருவர் பல பெயர்களில் விண்ணப் பிக்கக்கூடாது மீறுகிறவர்களின் விண்ணப்பம்   சுவாமி நித்யானந்தாவுக்கு forward செய்யப்படும்.


9..தேர்ந்தெடுக்கப் பட்டபின் வெளியேற நினைப்பவர்களுக்கு ஒரே பிரசவத்தில் 16 பெண் குழந்தைகள் பிறக்கும் என பில்லி சூனியம் வைத்துச் சாபம் வழங்கப்படும்.

10.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த வருடம் Feb29 ..

(நன்றி-தமிழ் தாயகத்தில்-புன்னகை)

Friday, March 23, 2012

பிலாசபி பிரபாகரனுக்கு வயசாயிப்போச்சா?!

ஏன் இப்படி ஒரு கேள்வி என்று யோசிக்கிறீர்களா?

ஒரு வலுவான காரணம் இருக்கிறது!

நேற்றைய ’என் விகடனி’ ல் வலையோசைப்பகுதியில், பிரபாகரனின் அறிமுகம். படத்துடன். பின் அவர் எழுதிய சில பதிவுகள்.

அவற்றில் ஒரு பதிவு என்னைத் திகைக்க வைத்தது!

“அங்கிள் இது லேடீஸ் டாய்லெட் “ என்ற பதிவு!

ஒரு பேரிளம்பெண் பிரபாகரனைப் பார்த்து ‘அங்கிள் ’  என்று அழைத்தாளென்றால்,அவருக்கு வயது என்னவாக இருக்கும்?! ஹி,ஹி.

எனவேதான் முதலில் கேட்ட கேள்வி!

பின்னர் சில நண்பர்களுடன் பேசிய பின் தேடுதலில் இறங்கினேன்.

ஒரு நண்பர் சொன்ன படி ஒரு பேச நினைக்கும் பதிவில் தேடினேன்.

மாட்டியது!

ஆம்!அந்தப் பதிவை எழுதியவர் சென்னைபித்தன் அவர்கள்!

விகடனில் வெளியான மற்ற இரு பதிவுகளும் அவருடை யவைதான்!

விகடனில் ஏதோ குழப்பம்.!

விளைவு!!

பிரபாகரனுக்கு வயசாகிப்போச்சு!

அடுத்ததாகப் பிரபாகரனின் பதிவைப்போட்டுச் சென்னைப் பித்தனை அறிமுகப்படுத்தினால் சரியாப்போச்சு!!

நல்ல கூத்து!

Sunday, March 18, 2012

சூப்பர் ஸ்டார்! தலைவா!உனக்கு நிகர் யார்!!

1.கிரகாம் பெல் தொலைபேசியைக்கண்டுபிடித்தவுடன் அதில் ஏற்கனவே பத்து மிஸ்ட் கால்ஸ்   இருந்தன--
    
     எல்லாம் ரஜினியிடமிருந்து!

2. வேகமாக ஓடும் யமஹா மோட்டார் சைக்கிள்கள் இவை---
     R 1,R 15,R 6,RX 100,RX 125,RX 135,Rd,Rxz.

   இவற்றில் R என்பது எதைக் குறிக்கிறது தெரியுமா.............?

   ரஜினிகாந்த்!

3.இந்திய கிரிக்கெட் அணிக்குப் பயிற்சியாளராக ரஜினி நியமிக்கப்பட்டார்.என்ன நடந்தது தெரியுமா.............?

  அந்த அணி கால்பந்து,ஹாக்கி இவற்றிலும் உலகக் கோப்பையை வென்றது!

4.ரஜினி முத்தாண்டுதல்   போட்டியில் கலந்து கொண்டார்....என்ன நடந்தது தெரியுமா.........

  செவ்வாய்,வியாழன்,சனி மூன்றிலும் கால் பதித்த முதல் மனிதர் ஆனார்!!

Friday, March 9, 2012

நாங்க வெளி நாட்டிலேருந்து வந்திருக்கோம்ல!

கையில மினரல் வாட்டரை வச்சிக்கிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களாம்!)


வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்திரமா வச்சிக்கிட்டு என்ன பண்றாங்களோ?)

கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிக்கிட்டு அல்லது தள்ளிக்கிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுறதே, சர்க்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறயா?)

குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துக்கோங்க!)

கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

எதை வாங்கினாலும்  டாலர்,திர்கம்ஸ்ல யோசிச்சி "ஹேய்.. சாப்பாடு ஒரு  டாலர் தான் வாவ்.. ன்னு ராமானுஜம் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க..

தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)


"செளக்கியமா"ன்னு கேக்காம.. "ஹாய்"ன்னு சொல்றது, "லட்ச"த்துக்கு பதிலா.. "மில்லியன்ல" சொல்றது, தயிருக்கு பதிலா.. "யோகர்டு"ன்னு சொல்றது, "ஹய்வே"க்கு பதிலா "ஃப்ரீவே"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)

சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ () பெப்சியோ" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. " ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒண்ணும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைட்டையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)

கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு...
எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் யு.எஸ்ஸில...", "இப்படிதான் நான் துபாய்ல இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!!....

நெட்டில் சுட்டது!