Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Sunday, March 18, 2012

சூப்பர் ஸ்டார்! தலைவா!உனக்கு நிகர் யார்!!

1.கிரகாம் பெல் தொலைபேசியைக்கண்டுபிடித்தவுடன் அதில் ஏற்கனவே பத்து மிஸ்ட் கால்ஸ்   இருந்தன--
    
     எல்லாம் ரஜினியிடமிருந்து!

2. வேகமாக ஓடும் யமஹா மோட்டார் சைக்கிள்கள் இவை---
     R 1,R 15,R 6,RX 100,RX 125,RX 135,Rd,Rxz.

   இவற்றில் R என்பது எதைக் குறிக்கிறது தெரியுமா.............?

   ரஜினிகாந்த்!

3.இந்திய கிரிக்கெட் அணிக்குப் பயிற்சியாளராக ரஜினி நியமிக்கப்பட்டார்.என்ன நடந்தது தெரியுமா.............?

  அந்த அணி கால்பந்து,ஹாக்கி இவற்றிலும் உலகக் கோப்பையை வென்றது!

4.ரஜினி முத்தாண்டுதல்   போட்டியில் கலந்து கொண்டார்....என்ன நடந்தது தெரியுமா.........

  செவ்வாய்,வியாழன்,சனி மூன்றிலும் கால் பதித்த முதல் மனிதர் ஆனார்!!