Saturday, June 23, 2012

ரஜினி ரசிகர்களின் கோபம்!


//”இது என்ன சார் அக்கிரமம்?கதாநாயகனுக்குக் கமல் என்று பெயர் வைத்து விட்டுக் காமெடியனுக்கு ரஜினி என்று பெயர் வைத்திருப்பது திட்டமிட்ட  சதிச் செயல்.இதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கப் போகிறோம்”—ஒரு ரஜினி ரசிகர் எங்கள் நிருபரிடம் சொன்னார்.

”ரஜினி என்ற பெயரில் எத்தனையோ பேர் இருப்பார்கள்.ஒரு பாத்திரத்துக்கு அப்பெயர் வைப்பது தவறா?”-எங்கள் நிருபர்.

“ஒரு பாத்திரத்துக்கு அப்பெயர் வைத்திருந்தால் தவறில்லைதான். ஆனால் ஒரே படத்தில் கதாநாயகனுக்குக் கமல் என்றும் காமெடி யனுக்கு  ரஜினி என்று பெயர் வைதத்து தவறு.  எங்கள் தலைவரைக் காமெடியன் என்று சொல்கிறார்களா?இதை எங்களால் எப்படிப் பொறுக்க முடியும்?”

”என்ன செய்யப் போகிறீர்கள் ”

”நாளை வரை பொறுத்திருங்கள்.நாளை எந்தத் திரையரங்கிலும் இந்தப் படம் ஓடாமல் செய்யப்போகிறோம்.பெயரை மாற்றும் வரை போராட்டம்தான்”

சகுனி படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கு நிலையில் இப்படி ஒரு பிரச்சினையா?//

(தினசரிப் புளுகு பத்திரிகையில் வந்த செய்தி)

Wednesday, June 6, 2012

இதிகாசத்தை இகழ்ந்த பதிவரும்,பாராட்டியவரும்!


சென்ற வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர் திரு அப்பாதுரை என்னும் அமெரிக்கா வாழ் தமிழர்.அறிவுஜீவி.

இவர் அறிமுகப்படுத்திப் பாராட்டிய ஒரு பதிவர் நாக்பூரில் வாழும் பொதுவுடமைவாதியான காஸ்யபன் என்பவர்.இன்னொரு அறிவுஜீவி!குறிப்பாக அவர் எழுதிய இபிகோ 375 என்ற சிறுகதையை மிகவும் பாராட்டிப்  புகழ்ந்திருந்தார் திரு அப்பாதுரை.

அப்படி என்ன கதை அது?

அச்சிறிய கதையின் சுருக்கம் இதோ---

“துர்வாச மகரிஷி,குந்திபோஜனிடம் அவன் மகள் குந்தியை ஆசிரம சேவைக்காகக் கேட்டு அழைத்து வந்து கற்பழித்து விடுகிறார்”

இதுதான் திரு அப்பாதுரையை மிகவும் பாதித்த கதை!

துர்வாசி மகரிஷி மிக தபோபலம் பெற்ற ஒரு மகரிஷி. எல்லோராலும் மதிக்கப்பட்டவர்.அவரது பலவீனம் அவரது கோபம் மட்டுமே!

அப்படிப்பட்ட ஒரு ரிஷியைத் திட்டமிட்டுக் கற்பழிக்கும் ஒரு காமுகனாகச் சித்திரிக்கும் கதைதான்” ஆயுள் முழுதும் நினைவில் நின்று பாதிக்கும்” கதையாம்!

உண்மைதான்.இந்துமத்தின் புராண இதிகாச கால புருஷர்களை இப்படிக் கேவலமாகச் சித்தரித்தால் இது பாதிக்கத்தான் செய்யும்.

இதிகாசம் போற்றும் புருஷர்கள் இவர்களுக்குக் கேவலமான கதைப்பொருள் ஆகிறார்கள்.

இவர்களது இந்தக் கேவலமான செயலுக்குச் சிலர் பாராட்டு வழங்குவர்.காஸ்யபன் போன்றோர் மேலும் உற்சாகத்தோடு அவதூறுக் கதைகள் எழுதுவர்!

ஏனென்றால் எதையும் சகித்துக் கொள்ளும் மதமாயிற்றே இந்து மதம்!