Wednesday, October 9, 2013

செய்திகள்;வாசிப்பது.....

இன்று படித்த ஒரு செய்தி என்னைக் கோபப்பட வைத்தது.அறியாத சிறுவர்கள் விளைவு களைப் பற்றித் தெரியாமல்  சில செயல்களில் விளையாட்டாக ஈடுபடலாம்.ஆனால் வேலை பார்க்கும் இளைஞர்கள்,விளைவைப் பற்றியே சிந்திக்காமல் ஒரு செயலை ’விளையாட்டு’க் காகச் செய்யலாமா?

அம்பத்தூரில் ஒரு கார் சேவை மையத்தில் வேலை பார்க்கும் இரு இளைஞர்கள்,தங்களுடன் பணிபுரியும் கார்த்திக் என்னும் இளைஞனைப் பிடித்து அவன் கால்சராயைக் கழட்டி அவன் பின்புறத்தில் காற்று அடிக்கும் கருவியின் குழாயைச் செருகிக் காற்றடித்தனராம்.அவன் வயிற்றில் காற்று நிரம்பி மயக்கமடையவே அவனை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர்.அங்கிருந்து போரூர் இராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இளைஞன்,உடல் நேரானதும் போலீஸில் புகார் கொடுக்க,அந்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

இது என்ன விளையாட்டு?விபரீத விளையாட்டு?


நேற்றுப்படித்த ஒரு செய்தி


திருமாலின் தசாவதாரங்கள். எவை?

மத்ஸ்ய,கூர்ம,வராக,வாமன,நரசிம்ஹ,பரசுராம,ராம,கிருஷ்ண,பலராம.கல்கி இவையென்று சொல்லப்படுகிறது.வடக்கில் புத்தர் ஒரு அவதாரம் எனச் சொல்கிறார்கள்.

அதாவது,மீன்,ஆமை,பன்றி,வாமனன்,நரசிம்ஹம்,பரசுராமர்,ராமர்,கிருஷ்ணர்,பலராமர்.கல்கி.

நேற்று இராமேஸ்வரம் கோவிலில் பன்றி புகுந்து விட்டதாம் !

நகராட்சி ஊழியர்கள் அப்பன்றியைப் பிடிப்பதற்காகத் துரத்தும்போது அது அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு,கோவிலுக்குள் நுழைந்து இரண்டாவது பிரகாரம் வரை சென்று விட்டதாம்! அதை விரட்டிய பின் குடம்குடமாகத் தண்ணீர் ஊற்றிக் கோவில் பிரகாரத்தைச் சுத்தம் செய்தனராம்;விசேட பூசைகளும் செய்யப்பட்டனவாம்

இச்செய்தித் தலைப்பைப் படித்ததும் எனக்குத் தோன்றிய  நகைச்சுவையான எண்ணம்,பன்றி திருமாலின் அவதாரம் தானே ,எனவே இதில் பிரச்சினை என்ன இருக்கிறது என்பதே!

செய்தியை முழுவதும் படிக்கும்போது, என் கருத்தையே மதுரை மாவட்ட விஸ்வ இந்து பரிஷத்தின்  தலைவர் சொல்லியிருப்பது தெரிய வந்தது!

சரிதான்!இனிமேல் ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது எனச் சொல்லாதீர்கள்.(இதற்கு வேறு பொருளும் சொல்வர்)

ஆமை திருமாலின் அவதாரம்!

Monday, October 7, 2013

குடித்து விட்டு வண்டி ஓட்டினால்?!

என்ன நடந்திருக்கிறது பாருங்கள்!




     குடித்தது கள்ளல்ல பால்தான்
     பிடித்திருப்பது பால் புட்டிதான்
     படுத்திருப்பது சின்னச் சிசுதான்
     நெடிதாய் நிற்பதும் பொம்மைக்கார்தான்!


    வயதும் புட்டியும் வண்டியும் மாறினால்,தடம் புரளாதோ வாழ்க்கை!