Tuesday, August 18, 2015

புயல் சின்னம் உருவாகி விட்டது! அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்.நவம்பர் மாதங்கள் வடகிழக்குப் பருவ மழைக் காலங்கள். வங்காள விரிகுடாவில்.குறைந்த காற்றழுத்தம்,காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகிப் புயலாக மாறி நம்  வானிலை ஆராய்ச்சி நிலையத்துக்குத் தலைவலி கொடுப்பது வழக்கம். முதலில் சென்னயைத் தாக்கும் என்பார்கள். பின்னர் நெல்லூரைத் தாண்டி என்பார்கள்; கடைசியில் அது ஒரிசாவைத் தாக்கும்.

இம்முறை இப்போதே புயல் சின்னம் உருவாகி விட்டது.அது எங்கு தாக்கும் என்பதும் துல்லியமாகத் தெரிந்து விட்டது;ரமணன் அவர்களின் அறிவிப்பின்றி!

ஆம் புயல்,புதுக்கோட்டையைத் தாக்கப் போகிறது.சரியாக அக்டோபர் மாதம் 11ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. 

ஆனால் இப்புயல் சேதப்படுத்தாத புயல்;மகிழ்ச்சி தரும் புயல்;அனுபவப் புயல்; இலக்கியப் புயல்; பல்சுவைப் புயல்.

புயலின் பிரம்மாண்டம் இப்போதே தெரியத் தொடங்கி விட்டது.நாள் நெருங்க நெருங்க இதன் வலிமை புலப்படும்.இது ஒரு புயலல்ல;பல புயல்களின் சங்கமம்.

இப்புயலுக்கு வலிமை சேர்க்கப்போகிறவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ள லாம். இப்புயலின் தாக்கத்தில் அமிழப்போகிறவர்கள் மகிழ்ச்சி அடையலாம்.

மென்மேலும் இப்புயலுக்கு எவ்வாறு வலிமை சேர்க்க முடியும்.

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!

ஒலிக்கட்டும் வெற்றி முரசு!


18 comments:

  1. இந்த இனிய புயல் சுனாமியாய் மாறினாலும் மகிழ்ச்சியே :)

    ReplyDelete

  2. பதிவர்கள் சந்திப்பு புயல் பற்றி தகவல் தந்தமைக்கு நன்றி! அதுசரி. நீங்கள் புதுகை வருவீர்களா?

    ReplyDelete
    Replies
    1. 2013 இல் சென்னைச் சந்திப்பில் யாருக்கும் தெரியாமல் வந்து போய் விட்டேன்.!
      புதுகை வருவது சாத்தியமில்லை.
      நன்றி ஐயா

      Delete
  3. புயல் வரட்டும் வந்து தென்றலாய் மாறி அக்டோபர் 11 ஐ எல்லோரையும் வருடி மகிழ்வடையச் செய்யட்டும்....

    ReplyDelete
    Replies
    1. புயல் தென்றலாகும்;தென்றல் அன்று மதியம் தாலாட்டும்?
      நன்றி ஐயா

      Delete
  4. இந்த புயலை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக
      நன்றி சுரேஷ் ஐயா

      Delete
  5. ஒலிக்கட்டும் வெற்றி முரசு!

    ReplyDelete
    Replies
    1. டும் டும் டும்!
      நன்றி ஐயா

      Delete
  6. தங்களின் வரவு மிகவும் முக்கியம் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. ”என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்?!’
      நன்றி அண்ணே!

      Delete
  7. ஆம், இதுவும் புயல்தான்...
    புதுகைப் புயல்...!

    ReplyDelete
  8. சேதம் ஏற்படுத்தாத புதுக்கோட்டை புயலானது நிச்சயம் வலைப் பதிவர் மனதின் கரையை கடக்கும்.
    கரையை கடக்கும் புயலுக்கு நிறைவான வாழ்த்துகள்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  9. புதுகைப் புயல்! :) உங்களால் வர முடியாதே! அதே போல என்னாலும் வர இயலாது! [தற்போதைய சூழலில்!]

    விழா சிறக்க எனது வாழ்த்துகளும்.

    ReplyDelete