Showing posts with label திருவிழா. Show all posts
Showing posts with label திருவிழா. Show all posts

Monday, August 19, 2013

மாயண்ணன் வந்திருக்காஹ!மாப்பிள்ள மொக்கச்சாமி வந்திருக்காஹ!........

பதிவுலக உறவுகளே!

எதிர்பார்த்துக் காத்திருந்த நாள் நெருங்கி விட்டது.

செப்டம்பர் முதல் நாள்.

எழுத்தில் மட்டுமே சந்தித்துப் பேசி மகிழ்ந்த பலர் நேரில் முகம் பார்த்துப் பேசிப் பழகப் போகும் நாள்! 

தமிழகத்திலிருந்து மட்டுமல்ல,மற்ற மாநிலங்களிருந்தும் பதிவர்கள் ஆவலுடன் கலந்து கொள்ள வருகிறார்கள்.(வெளி நாடுகளிலிருந்தும்?)

மாயண்ணன் வரப்போறாஹ!

மாப்பிள்ள மொக்கச்சாமி வரப் போறாஹ!

மற்றும் நம்ம உறவினர் எல்லாம் வரப்போறாஹ!

வாங்கய்யா பதிவர்களே!

விழாவைச் சிறக்கச் செய்யுங்கள்!

இந்த நேரத்தில் விழா ஒருங்கிணைப்புக் குழுவினரிடமிருந்து ஒரு முக்கிய அறிவிப்பு....

பதிவர் சந்திப்பு-நன்கொடை கொடுப்போர் கவனத்திற்கு



உலகமெங்கிலும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழ் வலைப்பதிவுலக தோழமைகளுக்கு வணக்கம். கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் நடைபெற்ற முதலாம் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவை யாரும் மறந்திருக்க முடியாது.மிகவும் சிறப்பாக நடந்ததென அனைவரும் சொன்னதில் மிக்க மகிழ்ச்சி.அதே போல் இந்த ஆண்டு செப்டம்பர் 1 ம் நாள் இரண்டாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா நடைபெற இருக்கிறது.சென்ற ஆண்டைப் போலவே ஒருநாள் முழுவதும் நடக்கவிருக்கும் இவ்விழாவை மிகவும் சிறப்பானதாக எடுத்துச் செல்ல பதிவர்கள் பல குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். 

இந்த பதிவர் சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைவதற்கு ஏதுவாக விருப்பப்படும் பதிவர்களிடமிருந்து நன்கொடை  வசூலிக்கலாம் என கடந்த வார கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.இந்த நிர்வாகக் குழுவின் முறையான வங்கிக் கணக்காக பதிவர் அரசன் அவர்களின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி வருகிறோம்.

நன்கொடை கொடுக்க விரும்பும் பதிவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்கணக்கில் பணத்தைச் செலுத்தலாம்.பணத்தை செல்லுத்திவிட்டு கீழ்க்கண்ட அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பணம் செலுத்திய விபரத்தையும் உங்கள் சுய விபரத்தையும்(வலை முகவரி,மின்னஞ்சல் முகவரி) தெரியப்படுத்துங்கள்.பணம் வந்து சேர்ந்ததும்  tamilbloggersinfo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து பெற்றுக்கொண்டோம் நன்றி என்ற தகவல் வந்து சேரும்.

First Name: Raja
Last Name: Sekar
Display Name: RAJA. S
Account Number: 30694397853
Branch Code: 006850
CIF No. : 85462623959
IFS Code : SBIN0006850
MICR Code : 600002047
Branch : SBI Saligramam Branch

Address: 49, Arcot Road, Saligramam , Chennai, City Pin - 600093

Contact :

044- 24849775

அரசன்(ராஜா) அலைபேசி எண் - 9952967645

நன்றி..

ஒருங்கிணைப்புக்குழு ,
தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்

டிஸ்கி:நான் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு.....50 விழுக்காடுகளே.ஆனால் எங்கிருந்தாலும் என் நினைவுகள் விழாவில்தான் நிலைத்திருக்கும்!