Showing posts with label பிறந்தநாள். Show all posts
Showing posts with label பிறந்தநாள். Show all posts

Tuesday, February 5, 2013

இன்றென் வயது ஒன்று!



                                                  குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்!


இன்று என் வயது ஒன்று!

‘என்’ என்பது என் வலைப்பூவைக் குறிக்கும்.

இந்தக் ”குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்” என்ற இளைஞர்களுக்காக இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ மலர்ந்த நாள் 05-02-2012.

குழந்தை பிறந்து,புரண்டு ,கவிழ்ந்து,அமர்ந்து,தவழ்ந்து,தளர் நடை பயின்று இப்போது ஓட ஆரம்பித்திருக்கிறது!

முதல்  ஏழு மாதங்களில் எழுதிய பதிவுகள் 14தான்.

செப்டம்பரில்தான் குழந்தை நடக்கத்துவங்கியது;பின் ஓட்டம்!

ஓடும் குழந்தையைப் பாராட்டி உற்சாகம் அளித்து மேலும் வேகமாக ஓட உதவியவர்கள் நீங்கள் அனைவரும்.

என் வலைப்பூவுக்கு வருகை தந்த,வாக்களித்த,கருத்துச் சொன்ன அனைத்து அன்புள்ளங் களுக்கும் என் நன்றியும் வணக்கங்களும்!

என் தற்போதைய தமிழ் மணம் ரேங்க் –5.( இதற்கு பதிவுகளின் எண்னிக்கையே முக்கிய காரணம்,தரமல்ல ;எனவே அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியதில்லை எனினும்!)

வலைச்சரத்தில் மூன்று முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறேன்.அறிமுகம் செய்த மஞ்சுபாஷிணி,உஷா அன்பரசு,சீனு ஆகியோருக்கு மிக்க நன்றி

152 பதிவுகள் எழுதி விட்டேன்.

இதற்குக் காரணம் உங்கள் ஆதரவுதான்.

தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்நோக்கி நிற்கும்,

குட்டன்.