Saturday, December 21, 2013

தேவயானியின் கதை!



தேவயானி!

இன்று ஊடகங்களில் தினமும் தொடர்ந்து பரபரப்பாகப் பேசப்படும் பெயர்.

தேவயானி பற்றிய முழு விவரங்கள் தெரியுமா?

மிகவும் சுவாரஸ்யமான கதை!

மகாபாரதத்தில் பல கிளைக் கதைகள் உண்டு.

அதில் ஒன்றுதான் தேவயானியின் கதை.

இவள் அசுர குரு சுக்கிராச்சாரியரின்  செல்ல மகள் .

சுக்கிராச்சாரியார் மிருதசஞ்சீவினி என்ற மந்திரத்தின் உதவியுடன் இறக்கும் அசுரர்களை யெல்லாம் உயிர்ப்பித்து வந்தார்.

இது தேவர்களுக்கு மிகவும் தொந்தரவாகப் போயிற்று.

அந்த மந்திரத்தக் கற்று வருவதற்காகப் பிருகஸ்பதியின் மகனான கசன் என்பவனை அனுப்பினர்.

அவனும் சென்று சுக்கிராச்சாரியாரிடம் சீடனாகச் சேர்ந்தான்.

அங்கேயே தங்கிப் பயில ஆரம்பித்தான்.

அவனுக்கும் தேவயானிக்கும் இடையே காதல் மலர்ந்த்து

அசுர்ர்கள் அவன் நோகத்தைத் தெரிந்து கொண்டு அவனைக் கொன்ற போதெல்லாம், தேவயானியின் துயர் கண்டு சுக்கிராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார்.

கடைசியில் அசுரர்கள் கசனைக் கொன்று எரித்துச் சாம்பலை மதுவில் கரைத்து குருவிடம் கொடுக்க அவர் அதைக் குடித்து விட்டார்.

பின் தேவயானி வந்து கதற,அவர் யோசித்தபோது நடந்தது புரிந்தது.

அவனை உயிர்ப்பித்து வெளிக்கொணர்ந்தால் அவர் இறந்து போவார்.

என்ன செய்வது?

அவனை வயிற்றுக்குள் உயிர்ப்பித்து அவனுக்கு மிருதசஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார் .

அவனும் வெளியே வந்து, மந்திரத்தின் மூலம் ஆச்சாரியாரை உயிர்ப்பித்தான்.

ஆனால் காதலை விடக் கடமை  முக்கியம் எனச் சொல்லி,தேவயானியைப் பிரிந்து சென்றான்.

இதுவே தேவயானியின் கதை!

இக்கதை 1941இல்,”கச்சதேவயானி” என்ற பெயரில் படமாக வெளி வந்து வெற்றிகரமாக ஓடியது.

நடித்தவர்கள்—கொத்தமங்கலம் சீனு,டி.ஆர்.ராஜகுமாரி
....................................

அப்பு:அண்ணே !தேவயானியை அமெரிக்காவில கைது செஞ்சாங்களாமே.படப்பிடிப்பிக்குப் 
போயிருந்தாங்களா?

குப்பு: டேய் அது வேற தேவயானிடா.அங்க தூதரகத்தில அதிகாரி!

அப்பு:ஆமாண்ணே!அந்தக்காலத்துப் புராண இதிகாசங்களிலேயே சொல்லியிருக்கு, தூதர்களைக் கைது செய்யக் கூடாதுன்னு!

குப்பு:வெவரமாத்தான் பேசறே!இவங்க ஆதர்ஷ் ஊழல்ல மாட்டினவங்களாம்.

அப்பு:அடக் கடவுளே!இன்னும் அட்டையெல்லாம் கொடுத்தே முடியல்லை;அதுக்குள்ள அதில ஊழலா?

குப்புடேய்!அது ஆதார்டா!  
......................................
.....................................................

6 comments:

  1. ரொம்ப நாளைக்கப்புறம் குட்டனின் குறும்பு ஸ்டார்ட் ஆயிடுச்சா. நடக்கட்டும்

    ReplyDelete
  2. மறக்க முடியுமா... - டி.ஆர்.ராஜகுமாரியையும் (!)

    ஆதர்ஷ் - ஆதார்... ஹா... ஹா...

    ReplyDelete
  3. // ஆனால் காதலை விடக் கடமை முக்கியம் எனச் சொல்லி, தேவயானியைப் பிரிந்து சென்றான் //

    ” நான் உன்னுடைய தந்தையின் வயிற்றிலிருந்து வந்ததால் நான் இனி உனக்கு சகோதரன்” என்று கசன், அந்த தேவயானியை ஏற்க மறுத்து விடுகிறான். மகாபாரதக் கதையை நினைவூட்டியமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  5. இரசித்தேன்! இனி குப்பு ,அப்பு ஆகியோரின் சந்திப்பை அடிக்கடி எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
  6. குட்டனின் குறும்பு மீண்டும் தொடங்கியது - ஸ்டார்ட் ம்யூசிக்!

    ReplyDelete