“Sam,the
ceiling needs painting” என்ற புத்தகம்
1964 இல் வெளி வந்ததாம்;
வந்தபோது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதாம்,இப்போது அதெல்லாம்
வெறும் ஜுஜுபி!
இநதப் பழைய புத்தகத்தை என் நண்பர்
ஒருவர் எங்கிருந்தோ வாங்கி வைத்திருந்து ஓரிரு ஆண்டுளுக்கு முன் என்னிடம் காட்டினார்.
மிகச் சிறிய புத்தகம்தான்.
மொத்தம் பத்துப் பன்னிரண்டு படங்கள்.
படங்களில்
இரண்டு ஜோடிப் பாதங்கள் மட்டுமே.
ஒவ்வொரு படத்துக்கும் ஒரு பன்ச் லைன்! அவ்வளவே.
இதைப் பற்றி இங்கு என்னால் விளக்கமாகச் சொல்ல
முடியாது.அதைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தால் பார்த்துக் கொள்ளுங்கள்!
.............................................................................................................
பழசு பழசுதான்!
கணினிகளின் வரவுக்குப்பின்,அந்தக்காலத்து டைப்ரைட்டரை ஓரங்கட்டி விட்டார்கள்..
இப்போது அதற்கும் மறுவாழ்வு வந்திருக்கிறது.
ரகசியமான ஆவணங்கள்,கடிதங்கள் இவற்றைக் கணினியில் அடித்தால் அது திருடு போகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால். லண்டன் இந்தியத் தூதரகத்தில் முக்கிய செய்திகளை இனி டைப்ரைட்டரில் அடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்களாம்!
(மறக்காமல் கார்பனை எரித்து விட வேண்டும்!)(
old is gold!---டைப்ரைட்டரைச் சொல்லவில்லை! செய்தியே கொஞ்சம் பழசுதான்!
.................................................................................................................
இந்தக்காலத்தில் சிவாஜியின் நடிப்பை மிகை என்று சொல்வது ஃபேஷன் ஆகிவிட்டது. வெறும் பாட்டை வைத்து ஓட்டிக் கொண்டிருந்த காலத்தில்,நடிப்பு என்றால் என்ன என்பதைப் புரிய வைத்தவர் அவர்..கர்ணனில் சில இடங்களில் மிகையாகத் தோன்றலாம்.ஆனால் அந்தப் பாத்திரத்துக்கு அது தேவை.’பெக்கெட்’ என்றொரு படம்.அதில் பீட்டர் ஒ டூலின் நடிப்பைப் பாருங்கள்.மிகையென எண்ணுவீர்கள்.ஆனால் அது தேவை(இந்தியில் நமக்ஹராம்,தமிழில் உனக்காக நான்).

நீங்கள் சொன்ன புத்தகம் கிடத்தால் பார்த்துவிட்டு சொல்கிறேன் எனது கருத்தை.
ReplyDeleteநான் இன்னும் எனது Portable தட்டச்சு இயந்திரத்தை வைத்திருக்கிறேன். இரகசிய கடிதங்களை தட்டச்சு செய்ய அல்ல. நீங்கள் சொன்னதுபோல் Old is Gold என்பதால்.
சிவாஜியிடம் யாரோ ஒருவர் ‘உங்களது நடிப்பை மிகையானது என்கிறார்களே’ என்றபோது சொன்னாராம் ‘நடிப்பு என்பதே மிகைப்படுத்துவது தானே’ என்று. சிவாஜி போல் நடிக்க யாராலும் முடியாது என்பதே நிஜம்.
மூன்று தகவல்களுக்கும் நன்றி!
/// சிவாஜியின் நடிப்பை மிகை என்று சொல்வது ஃபேஷன் ஆகிவிட்டது... ///
ReplyDeleteஇதை விட கொடுமை எதுவும் இருக்காது...!!!!!
சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பகிர்வு.... மகிழ்ச்சி...
ReplyDeleteத.ம. 3
சுவையான தகவல்கள்! நன்றி!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteபதிவை மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தட்டச்சு இயந்திரம் மறக்க முடியாதது - அதில் தான் ஆங்கிலம் தட்டச்சு செய்யப் பழகினேன், சிவாஜியின் நடிப்பில் நிறைய பேர் பரிந்துரைக்காத - எனக்கு மிகவும் பிடித்த படம் - எதிரொலி.
ReplyDeleteநல்ல புத்தக அறிமுகத்திற்கு நன்றி
ReplyDelete