Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Friday, January 17, 2014

புத்தகக் கண்காட்சி-ஒரு வித்தியாசமான பார்வை..படங்களுடன்!

விடுமுறை நாட்கள் முடிந்தபின் இன்று புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதென ஏற்கனவே முடிவு செய்தபடி இன்று மாலை 3.30 மணி அளவில் வீட்டை விட்டுப் புறப்பட்டு, தானியில் 4 மணி அளவில் கண்காட்சி நடக்கும் ஒய்.எம்.சி.ஏ,மைதானத்தை அடைந்தேன்.சென்ற ஆண்டு கண்காட்சி நடக்கும் இடத்தை அடையும்போதே களைப்படைந்தது போல் இல்லாமல் இந்த ஆண்டு இலவச வாகன  வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால்  எளிதாக  கண்காட்சி அரங்கை அடைந்தேன்.


    இலவச ஊர்தி
    திரும்புகையில்


பத்து ரூபாய் கொடுத்து நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு அரங்குக்குள் நுழைந்தேன்

நுழை வாசல்    
      உள்ளே நுழையும்போதே அதிகபட்சம் 2.30 மணி நேரமே செலவழிக்கத்                        திட்டமிட் டிருந்த படியால்,ஸ்டால்களைத் தேர்ந்தெடுத்து என் சுற்றலைத் துவங்கினேன்.மொத்தம் பத்து அரங்குகளுக்குச் சென்றிருப்பேன்!இன்று விடுமுறை நாளாக இல்லாததால் பதிவர்கள் யாரையும் பார்க்கவில்லை.அப்படி யாராவது வந்திருந்து அவர்களை நான் பார்த்தாலும் அவர்களுக்கு என்னைத் தெரியாது...ஒரு சோட்டா பதிவர்தானே!.டிஸ்கவரியிலும் யாரும் இல்லை.திரு வேடியப்பன் பிஸியாக இருந்தார்.

                                            

                                                     டிஸ்கவரியில் வேடியப்பன்
நான் முப்பது புத்தகங்களெல்லாம் வாங்கவில்லை,வாங்கிய புத்தகங்களின் சாம்பிள் ஒன்று கீழே!

                                          


 அவ்வாறு சென்று கொண்டிருந்தபோதுதான் கீதா பிரஸ் ஸ்டாலில் ஒரு பதிவரைப் பார்த்தேன்.அவரை எனக்குத் தெரியும்.நான் பார்த்தபோது சன் டி.வி. பெண் நிருபர் அவர் முகத்துக்கு நேராக மைக்கைப் பிடித்திருக்க அவர் காமிராவைப் பார்த்தபடி ஆன்மீகம் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.அந்தப் பதிவர் திரு.சென்னைபித்தன் அவர்கள்!அதைப் படம் எடுக்க மறந்து விட்டேன்!

இம்முறை ஓய்வெடுக்கவும் இடம் ஒதுக்கியிருக்கிறார்கள்.நிம்மதியாக அமர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுத்தேன்

                                                   
   
     வெளியே வந்தபின் அரங்கில் ஏதோ நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன்
                                       

               பஸ்ஸில் ஏறி கேட்டை அடைந்து தானியில் ஏறி வீட்டை வந்தடைந்தேன்!
                                
      இன்னொரு நாள் மீண்டும் போக ஆசை!.......இன்ஷா அல்லா!
                                  

 லேட் டிஸ்கி:    ”நான் முப்பது புத்தகங்களெல்லாம் வாங்கவில்லை” என்றுதான் நான் எழுதியிருக்கிறேன்.ஆனால் பின்னூட்டங்களைக் காணும்போது நான் முப்பது புத்தகம் வாங்கியதாகத் தவறாகப் புரிந்து கொளப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.மன்னிக்க!
                                                                                                                                                                        








                                                                                                                                                                              

.

Wednesday, December 4, 2013

சாம்!கூரையின் உட்பக்கம் பெயிண்ட் அடிக்கணும்!-ராகமாலிகை



“Sam,the ceiling needs painting” என்ற புத்தகம் 1964 இல் வெளி வந்ததாம்;

வந்தபோது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதாம்,இப்போது அதெல்லாம் வெறும் ஜுஜுபி!

இநதப் பழைய புத்தகத்தை என்  நண்பர் ஒருவர் எங்கிருந்தோ வாங்கி வைத்திருந்து ஓரிரு ஆண்டுளுக்கு முன் என்னிடம் காட்டினார்.

மிகச் சிறிய புத்தகம்தான்.

மொத்தம் பத்துப் பன்னிரண்டு படங்கள். 

படங்களில் இரண்டு ஜோடிப் பாதங்கள் மட்டுமே. 

ஒவ்வொரு படத்துக்கும் ஒரு பன்ச் லைன்! அவ்வளவே.

இதைப் பற்றி இங்கு என்னால் விளக்கமாகச் சொல்ல முடியாது.அதைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தால் பார்த்துக் கொள்ளுங்கள்!

............................................................................................................. 

பழசு பழசுதான்!

கணினிகளின் வரவுக்குப்பின்,அந்தக்காலத்து டைப்ரைட்டரை ஓரங்கட்டி விட்டார்கள்..

இப்போது அதற்கும்  மறுவாழ்வு வந்திருக்கிறது.

ரகசியமான ஆவணங்கள்,கடிதங்கள் இவற்றைக் கணினியில் அடித்தால் அது திருடு போகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால். லண்டன் இந்தியத் தூதரகத்தில் முக்கிய செய்திகளை இனி டைப்ரைட்டரில் அடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்களாம்!

(மறக்காமல் கார்பனை எரித்து விட வேண்டும்!)(

old is gold!---டைப்ரைட்டரைச் சொல்லவில்லை! செய்தியே கொஞ்சம் பழசுதான்!
.................................................................................................................

இந்தக்காலத்தில் சிவாஜியின் நடிப்பை மிகை என்று சொல்வது ஃபேஷன் ஆகிவிட்டது. வெறும் பாட்டை வைத்து ஓட்டிக் கொண்டிருந்த காலத்தில்,நடிப்பு என்றால் என்ன என்பதைப் புரிய வைத்தவர் அவர்..கர்ணனில் சில இடங்களில் மிகையாகத் தோன்றலாம்.ஆனால் அந்தப் பாத்திரத்துக்கு அது தேவை.’பெக்கெட்’ என்றொரு படம்.அதில் பீட்டர் ஒ டூலின் நடிப்பைப் பாருங்கள்.மிகையென எண்ணுவீர்கள்.ஆனால் அது தேவை(இந்தியில் நமக்ஹராம்,தமிழில் உனக்காக நான்).