Monday, January 6, 2014

மனைவிக்கு உதவிய கணவன்!

சமையலறையில் மனைவிக்கு வேலை மிக அதிகமிருப்பதைக் கவனித்த கணவன் அவளுக்கு உதவ எண்ணினான்.

நான் ஏதாவது உதவட்டுமா எனக் கேட்டான்.

மனைவிக்கு மகிழ்ச்சி

கணவனிடம் சொன்னாள்”அந்தக் கூடையில் இருக்கும் உருளைக் கிழங்கை எடுத்துக் கொள்ளுங்கள்.பாதிக் கிழங்கின் தோலைச் சீவி இந்தப்பாத்திரத்தில் தண்ணீரில் போட்டு வேக வையுங்கள்.”

கணவனும் செய்தான்.

மனைவியிடம் பாராட்டுப் பெற எண்ணி அவளைப் பார்க்கச் சொன்னான்.

அவள் பார்த்து விட்டுப் பாராட்டவில்லை;மாறாக அவனை கேவலமாகப் பேசினாள்.

அவனுக்குப் புரியவில்லை.

நீங்களே சொல்லுங்கள்

அவன் என்ன தப்பு செய்தான்?............................

..........................

..........................

......................











9 comments:

  1. க்ளைமேக்சை சொல்லாம விட்டுட்டா எப்படி!?

    ReplyDelete
  2. சொல்ல வேறு வேண்டுமா?அவள் சொன்னதென்ன அவன் செய்ததென்ன?படம் சொல்லுமே அக்கா!
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. "அக்கா" இது தான் சூப்பர் ஐயா...!

      ஹிஹி...

      Delete
  3. நான் அந்த கணவன் தோலை சீவி வேகவைத்திருப்பான் என நினைத்தேன். ஆனால் படத்தைப் பார்த்ததும் சிரித்துவிட்டேன். இதைத்தான் கருத்துப் பரிமாற்ற இடைவெளி (Communication Gap) என்பதோ?

    ReplyDelete
  4. அந்தக் கூடையில் இருக்கும் உருளைக் கிழங்கில் பாதியை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டாமோ...?

    சரியாகத் தானே செய்துள்ளான் - அந்த "பாதிக்" கிழங்கின் தோலைச் சீவி...!

    ReplyDelete
  5. அடடா.... என்னமா புரிஞ்சுக்கிட்டாரு! :)

    ReplyDelete
  6. கூடையில பாதிக்கிழங்க உறிக்க சொன்னா கிழங்குல பாதியை உரிச்சிட்டாரு புருஷன்! நல்ல புத்திசாலிதான்! ஹாஹா!

    ReplyDelete
  7. அந்தப் புகைப்படம் எடுத்தவர் யார், நீங்களா, உங்க மனைவியா?
    (ஹே.. ஹீ....)

    ReplyDelete
  8. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

    ReplyDelete