இந்தச் சினிமாவின் விளம்பரம் முதலில் வந்தவுடன்
நான் இது ஏதோ விவகாரமான படம் போல என எண்ணினேன்!பின்னர்தான் தெரிந்தது,பத்மினி என்பது
ஒரு பெண்ணை அல்ல, பத்மினி காரை குறிப்பது என்று.
பெண்களைச் சாமுத்திரிகா லக்ஷணப்படி நான்கு
பிரிவுகளாகப் பிரித்தார்கள்---பத்மினி, சித்தினி, சங்கினி,அத்தினி
என்று,இதில் பத்மினி என்பது,உத்தமசாதிப் பெண்.இங்கு சாதி என்றால் வருணாச் சிரமம் அல்ல.பெண்மையின் இலக்கணங்கள் எல்லாம் ஒரு சேரப் பொருந்திய மிகஅழகிய பெண்.
ஆனால் அப்படி ஒரு பெண் மனைவியாக வாய்த்தால்
சிரமம்தான்.வடமொழியில் சொல்வார்கள் ”பார்யா ரூபவதி சத்ரு!”அதாவது அழகான மனைவி ஒரு
விரோதி என்பதாகும்.
அழகு என்பது என்ன?அழகிய முகம் .உடல் அமைப்பு
இவையெல்லாம் அழகாகி விடுமா? உள்ளத்தழுகும் வேண்டுமல்லவா?ஆனால் பார்க்க அழகில்லாத ஒரு
பெண்ணை எந்த இளைஞன் மணந்து கொள்ளச் சம்மதிப்பான்?ஆகவே இரண்டும் சுமாராகவாவது
இருக்க வேண்டும்.பத்மினியெல்லாம் வேண்டான்.சித்தினி,சங்கினி போதும்!
வாழ்க்கையில் நாம் போதும்
என்று சொல்வது சாப்பிடும்போது மட்டும்தான்.ஏனென்றால் வயிறு நிரம்பிவிட்டால்
அதற்கு மேல் உண்ண முடியாது.அவ்வையார் சொன்னார்”……….
“ஒரு நாள் உணவை
ஒழியென்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு
நாளும்
என் நோவு அறியாய்இடும்பை கூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது”
உண்மைதான் .வயிறு நிறைந்தவுடன் திருப்தி
அடைந்து விடுகிறது.ஆனால் மனதுக்குத் திருப்தி என்பதே ஏற்படுவதில்லை.வேண்டும் ,வேண்டும் என்று
கேட்டுக் கொண்டே இருக்கிறது. இதுதான் பிரச்சினையே!
இரு நாட்களாக என் வயிறு பசி இல்லாமல்
போய் சாப்பாட்டை ஏற்க மறுக்கிறது.ஆனால் மருந்துகளைச் சாப்பிட்டுத்தானே ஆக
வேண்டும்.வயிறு சரியில்லை என்றால் உடல் வலி தலை வலி என்று எல்லாம் கூடவே வந்து
விடுகின்றன!
முதலில் சொன்ன படத்தை இன்னும் நான்
பார்க்கவில்லை.
ஒரு கிசுகிசு---தலைநகரப் புகைப்பட
நிபுணரும்,தமிழக மான்செஸ்டர் பேய்ப்பதிவரும்,ஓட்டல் பெயர் பதிவரும்,குடும்பப்பதிவரும்,இன்று
எழுதுவதை நிறுத்தி வனவாசம் இருக்கும்
சென்னையைச் சேர்ந்த பைத்தியப்பதிவர் வீட்டில் சந்தித்தார்களாம்!
திருப்தி என்பதை ஏற்படுத்திக் கொள்ள (ல்லவும்) வேண்டும்...! வேறு வழியில்லை...(!)
ReplyDeleteகுடும்பப்பதிவர் தான் யார் என்று தெரியவில்லை...
குட்டன் ஐயாவின் பகிர்வு படித்து பல நாள் ஆச்சி... நலம் தானே ஐயா...?
தொடர்ந்து பகிர வாழ்த்துக்கள்...!
இந்த படம் குறும்படமாக கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ‘நாளைய இயக்குனர்’ பகுதியில் வெளியாகி உள்ளது.
ReplyDeleteஅழகு என்பது அவரவர் பார்வையைப் பொருத்தது என நினைக்கிறேன்.
கிசுகிசுவில் எந்த பதிவர் வீட்டில் சந்தித்தார்கள் என்பதை புரிந்துகொண்டேன். வனவாசம் புரியும் அந்த பதிவரை சந்தித்தால் ‘வனவாசம் போதும் பதிவுலகம் வாருங்கள்.’ என அழையுங்களேன்!
இப்படித்தான் வித்தியாசமா பேரு வைக்கிறாங்க இப்ப! அழகான விளக்கம்! கிசு கிசு ஓக்கே! நீங்களும் அந்த சந்திப்பில் கலந்துக்கிட்டீங்களா?
ReplyDeleteநல்ல பகிர்வு....
ReplyDeleteகிசுகிசு...... - வாவ்.... பதிவர் சந்திப்பின் போது என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள துடிக்கிறது பலரின் மனம்..... :))))))
குட்டரே! வணக்கம்! தாங்கள் குறிப்பிட்டுள்ள அந்த வகைக் கார்தான் நான் முதலில் வாங்கியது! கிசுகிசு எனக்குப் புரியவில்லை!
ReplyDeleteபுலவர் ஐயா! கூடிப் பேசியவர்கள்.......வெங்கட் நாகராஜ்,கோவை ஆவி,மெட்ராஸ் பவன் சிவகுமார்,பால கணேஷ்,மற்றும் சென்னை பித்தன்!
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDelete