Tuesday, September 22, 2015

ஹர ஹர மகாதேவ்!



தொ’ல்’லைக் காட்சியில் இராமாயணம் பார்த்துக் கொண்டிருந்தேன்.


வானரப்படையினர் போருக்குச் செல்கையில் “ஹர ஹர மகாதேவ்” என்று சொல்லியவாறு செல்கின்றனர்.


அதைக்கேட்டவுடன் எதையோ நினைத்து எனக்குக் ”குபுக் ”என்று சிரிப்பு வந்து விட்டது. 
(குபுக் என்று எப்படிச் சிரிப்பு வரும்?)


நல்ல வேளை அருகில் யாரும் இல்லை.இருந்து ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டால் என்ன பதில் சொல்வேன்?!


”ஹர ஹர மகாதேவ் கி”


சிரிப்பில்தான் எத்தனை வகை? இதைக் கலைவாணர் தனது ஒரு பாட்டில் அழகாகச் சொல்லி யிருப்பார்;சிரித்துக்காட்டியிருப்பார்.

நமது நகைச்சுவையை ரசித்துப் பிறர் சிரிக்கலாம்; ஆனால் நம்மைப் பார்த்து யாரும் சிரிக்கும் நிலை ஏற்படக்கூடாது! அதைதான் கவிஞர் புலமைப் பித்தன் சொன்னார்”சிரித்து வாழ வேண்டும்,பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே” என்று


நம்மோடு சேர்ந்து சிரிக்கப் பலர் இருப்பர்;ஆனால் நம்மோடு சேர்ந்து அழ எத்தனை பேர் இருப்பார்கள்?


இப்போது சிரிக்கப் போகிறீர்களா ?

அல்லது இதையெல்லாம் படிக்க நேர்ந்ததே என்று அழபோகிறீர்களா?

10 comments:

  1. சிரித்துக்கொண்டே அழுகின்றேன் குட்டன்ஜி
    தமிழ் மணம் 2
    ஜி நம்ம வூட்டாண்டே காணோமே...

    ReplyDelete
  2. யாவாரத்துல கொஞ்சம் பிசி.கண்டிப்பா வாரேன்!
    நன்றி அண்ணாச்சி!

    ReplyDelete
  3. முதலில் சிரித்தேன். அப்புறம்.. வேண்டாம் நான் அழுதுடுவேன்..!
    த ம 3

    ReplyDelete
  4. அழப்போகிறேன் :-(

    ReplyDelete

  5. ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது. சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது.’ என்று பாடத் தோன்றுகிறது.

    ReplyDelete
  6. சிரிப்புதான்பா நமக்கு! அழறதுக்குத்தான் நிறைய பேர் இருக்காங்களே டீவி முன்னாடி உக்காந்து சீரியல் பார்த்து.....

    ReplyDelete
  7. சிரிப்புத்தான் குட்டன் ஜீ[[

    ReplyDelete