Thursday, September 17, 2015

தமிழ்மணம் ரேங்கும்,பெயர் மாற்றமும்!



சில நாட்களாக ஒரே யோசனை.

உக்காந்து யோசிச்சாச்சு;நின்னு யோசிச்சாச்சு

ரூம் போட்டுக்கூட யோசிச்சாச்சு

உருப்படியா ஒரு ஐடியாவும் வரலை

நேத்து தூக்கத்தில ஒரு கனவு !

அதில ஒரு சாமியார் வந்து”மகனே!எளிய வழி இதுதான்”னு ஒரு வழியைச் சொன்னாரு

யோசிச்சாச் சரியாத்தான் இருக்குது!

விசயம் இதுதாங்க,

என்னோட பதிவுக்கு நிறைய பேர் வருகை தரணும்

கருத்துச் சொல்லணும்

ஓட்டுப்போடணும்

தமிழ் மணம் ரேங்கில மேல போகணும்

இதை எப்படிச் சாதிக்கலாம்னுதான் யோசனை.

தினம் ஒரு பதிவு எழுதலாம்!

நிறைய பதிவுல போய் பின்னூட்டம் இடலாம்!

நிறைய பேருக்கு ஓட்டுப் போட்டுட்டு,த.ம.+1 ன்னு சொல்லிட்டு வரலாம்

இதெல்லாம் போதாது

அதுக்குத்தான் சாமியார் வழி சொன்னார்!

ரொம்ப எளிசான வழி!

ஆமாங்க

என் பேரை மாத்திக்கப் போறேன்


பல பேர் சோசியங்க கிட்ட போய் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து அதிர்ஷ்டப் பெயரா மாத்திக்கிறாங்க இல்ல?  

அது மாதிரி.......

இன்று முதல் என் பெயர் “குட்டன்ஜி

ஆனா இது சரியா இருக்கான்னு நீங்கல்லாம் சொன்னாத்தான் நான் மாத்திக்குவேன்!

வரலாறு காணாத அளவில் வந்து கருத்துச் சொல்வீங்களா?!

19 comments:


  1. தங்கள் பெயரை குட்டன்ஜி என மாற்றிக்கொள்ளலாம்.நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதைவிட தங்கள் வலைப்பதிவின் பெயரை தமிழ்மணம் வரிசை எண் 1 என்று மாற்றிப் பாருங்களேன். இது எப்படி இருக்கு!!!!!

    ReplyDelete
    Replies
    1. இது ஸூப்பரோ ஸூப்பர் நானும் ஆலோசிக்கிறேன்

      Delete
    2. இதுவும் நல்லாத்தான் இருக்கு!
      நன்றி

      Delete
  2. குட்டன்ஜிக்கு தமிழ் மணத்தில் ஒரு குட்டு - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. மோதிரக்கையால் குட்டு!
      நன்றி ஜி

      Delete
  3. வணக்கம்
    குட்டன்ஜி

    நல்ல யோசினைதான் பெயரும் நன்றாக உள்ளது... இதை வைத்து தொடருங்கள்.த.ம2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ஆஹா ஜி! நல்ல யோசனை தான் ஜி!

    ReplyDelete
  5. பொதுவாக இங்கு 'ஜி'க்களின் ராஜ்யம்தான். பகவான்ஜி, கில்லர்ஜினு பல 'ஜி'க்கள் இருக்கிறார்கள். பெயரில் 'ஜி'யை சேர்த்துக் கொண்டால் அவர்களைப்போல நீங்களும் தமிழ்மணத்தின் உச்சத்தை தொடலாம் என்று மரத்தடி மாந்திரீகர் சொல்கிறார்.
    த ம 8

    ReplyDelete
    Replies
    1. அதுதான்ஜி நம்ம பாயிண்டே!
      நன்றி ஜி!

      Delete
  6. வலைப் பதிவர் மாநாடு செல்ல வேண்டும்
    கலைகளின் அதிபர் மோதிரக் கையால் குட்டுப் பட வேண்டும்!
    பின்பு பாருங்கள் குட்டன் ஜி காட்டில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டும்.ஆனந்த மழையில் நனைந்து விடுவீர்கள்.
    நினைப்பது நிறைவேற குழலின்னிசையின் வாழ்த்துகள்.
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  7. விட்ட முதல் இடத்தைப் பிடிக்க நானும்தான் போராடிப் பார்க்கிறேன் ,மூன்றாம் இடத்தில் எத்தனை நாளோ என்று கூட சலித்துக் கொண்டேன் ,இப்போ 'ரேங்க்'கே போட்டுக்கிறதில்லை,குட்டன்ஜி:)நானே ஜியை கழற்றி விடலாமா யோசிக்கிறேன் !

    ReplyDelete
  8. எனது வலைப்பூவில் தங்களின் முதல் வருகை கண்டேன்!
    மிக்க நன்றி ஜி!

    தங்களுக்கு எது அதிர்ஷ்டம் தருகிறதோ அப்படியே வைத்துக் கொள்ளலாமே!

    வாழ்த்துக்கள் ஜி!

    த ம +1

    ReplyDelete
  9. ஆகா ... என்னங்க இது புது கலாட்டா

    ReplyDelete
  10. ஹஹஹஹஹஹ் ஓ நீங்கள் ஜோஸ்யத்தில் நல்ல அறிவு உள்ளவராயிற்றே அதனால்தானோ ஐயா....குட்டன் ஜி நல்லாத்தான் இருக்கு. ம்ம்ம் இப்போது பகவான் ஜி, கில்லர் ஜி, ஜோதிஜி யுடன் குட்டன் ஜி யும்....சரி தமிழ்மணம் ஏறிச்சா.....வாழ்த்துகள்...ஏறுவதற்கு என்ன ஒரு ஏணி வைச்சாப் போதாது?!!!!!

    இதையும் ரசித்தோம்....செம ரசனையா எழுதுறவர் ஐயா நீர்!!!!

    ReplyDelete