செப்டம்பர் முதல் நாளன்று கோலாகலமாக
நடக்க இருக்கும் பதிவர் திருவிழா பற்றிய எமது சிறப்பு நிருபரின் செய்தியை முன்பே
வெளியிட்டிருந்தோம்.இன்னும் ஒரு வாரமே பாக்கி இருக்கும் நிலையில் ஏற்பாடுகள் மிக
வேகமாகச் செய்யப்பட்டு வருகின்றன.மதிய நிகழ்ச்சிக்கு இறுதி வடிவம் கொடுக்க ஒரு
குழு தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.
கடைசித் தகவலின் படி ஒரு பட்டிமன்றம் நடத்தலாம்
என யோசித்து வருகிறார்கள் எனவும்.என்ன தலைப்பில் நடத்தலாம் என்று விவாதிக்கும்
போது சில தலைப்புகள் முன் வைக்கப்பட்டுள்ள தாகவும் தெரிகிறது
ஒரு தலைப்பு......”தமிழ் வலைப் பதிவுலகில்
சிறப்பாகக் கவிதை எழுதுவது ஆண்களா? பெண்களா?”
ஆண்கள் தரப்பில் ரமணி ஐயா,கவியாழி
கண்ணதாசன்,மற்றும் கவிதைவீதி சௌந்தர் ஆகியோர் கலந்து கொள்ளலாமென்றும் பெண்கள்
தரப்பில் சசிகலா, ஸ்ரவாணி,அகிலா ஆகியோர் வாதாடக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்
படுகிறது.
நடுவர் ஒரு கவிஞராக இல்லாமல் ஆனால் கவிதையை எடை போடத்தெரிந்தவராக
இருக்க வேண்டும் என்பதால்,ஏற்கனவே கடிதப் போட்டி நடுவராக அனுபவம் பெற்ற பால கணேஷ்
நடுவராக இருப்பார் என்றும் அவருக்குத் துணை நடுவராக சீனு அவர்கள் இருப்பார் எனவும்
நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
பரிசீலனையில் இருக்கும் மற்றொரு
தலைப்பு”சென்னயில் சிறந்த உணவகம், சாப்பாட்டுக் கடை இருக்குமிடம்,வேளச்சேரியா,மேற்கு
மாம்பலமா,திருவல்லிகேணியா?”
இதில் அணித்தலைவர்களாக மோகன் குமார்,
கேபிள் சங்கர், சிவகுமார் ஆகியோர் இருப்பர் எனவும்,ரூபக் ராம் அவர்களும் களத்தில்
குதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால்
கோவையிலிருந்தும்,மதுரையிலிருந்தும் வரும் பதிவர்கள் அவர்கள் ஊர் சோத்துக்கடை புகழ்பாட
வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தலைப்பு ”சிறந்த உணவகம், சாப்பாட்டுக்கடை
இருப்பது சென்னையா,கோவையா,மதுரையா ”என்று மாற்றப் பட க்கூடும் என்றும் தெரிகிறது.
பல
இடங்களில் உணவை ருசித்து அந்த அனுபவத்தை அனைவருடனும் பகிர்ந்து வரும் பதிவர்களே தயாராக
இருங்கள்!
அடுத்த ரவுண்ட் அப் விரைவில்!
---புளுகு டைம்ஸ்