செப்டம்பர் முதல் நாளன்று கோலாகலமாக
நடக்க இருக்கும் பதிவர் திருவிழா பற்றிய எமது சிறப்பு நிருபரின் செய்தியை முன்பே
வெளியிட்டிருந்தோம்.இன்னும் ஒரு வாரமே பாக்கி இருக்கும் நிலையில் ஏற்பாடுகள் மிக
வேகமாகச் செய்யப்பட்டு வருகின்றன.மதிய நிகழ்ச்சிக்கு இறுதி வடிவம் கொடுக்க ஒரு
குழு தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.
கடைசித் தகவலின் படி ஒரு பட்டிமன்றம் நடத்தலாம்
என யோசித்து வருகிறார்கள் எனவும்.என்ன தலைப்பில் நடத்தலாம் என்று விவாதிக்கும்
போது சில தலைப்புகள் முன் வைக்கப்பட்டுள்ள தாகவும் தெரிகிறது
ஒரு தலைப்பு......”தமிழ் வலைப் பதிவுலகில்
சிறப்பாகக் கவிதை எழுதுவது ஆண்களா? பெண்களா?”
ஆண்கள் தரப்பில் ரமணி ஐயா,கவியாழி
கண்ணதாசன்,மற்றும் கவிதைவீதி சௌந்தர் ஆகியோர் கலந்து கொள்ளலாமென்றும் பெண்கள்
தரப்பில் சசிகலா, ஸ்ரவாணி,அகிலா ஆகியோர் வாதாடக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்
படுகிறது.
நடுவர் ஒரு கவிஞராக இல்லாமல் ஆனால் கவிதையை எடை போடத்தெரிந்தவராக
இருக்க வேண்டும் என்பதால்,ஏற்கனவே கடிதப் போட்டி நடுவராக அனுபவம் பெற்ற பால கணேஷ்
நடுவராக இருப்பார் என்றும் அவருக்குத் துணை நடுவராக சீனு அவர்கள் இருப்பார் எனவும்
நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
பரிசீலனையில் இருக்கும் மற்றொரு
தலைப்பு”சென்னயில் சிறந்த உணவகம், சாப்பாட்டுக் கடை இருக்குமிடம்,வேளச்சேரியா,மேற்கு
மாம்பலமா,திருவல்லிகேணியா?”
இதில் அணித்தலைவர்களாக மோகன் குமார்,
கேபிள் சங்கர், சிவகுமார் ஆகியோர் இருப்பர் எனவும்,ரூபக் ராம் அவர்களும் களத்தில்
குதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால்
கோவையிலிருந்தும்,மதுரையிலிருந்தும் வரும் பதிவர்கள் அவர்கள் ஊர் சோத்துக்கடை புகழ்பாட
வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தலைப்பு ”சிறந்த உணவகம், சாப்பாட்டுக்கடை
இருப்பது சென்னையா,கோவையா,மதுரையா ”என்று மாற்றப் பட க்கூடும் என்றும் தெரிகிறது.
பல
இடங்களில் உணவை ருசித்து அந்த அனுபவத்தை அனைவருடனும் பகிர்ந்து வரும் பதிவர்களே தயாராக
இருங்கள்!
அடுத்த ரவுண்ட் அப் விரைவில்!
---புளுகு டைம்ஸ்
”சிறந்த உணவகம், சாப்பாட்டுக்கடை இருப்பது சென்னையா,கோவையா,மதுரையா ” என்ற பட்டிமன்றத்திற்கு நடுவர் திரு சென்னை பித்தன் அவர்களா?
ReplyDeleteஅவர் அந்தக்கால உணவகங்கள் பற்றித்தான் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன்.எனவே வேறு யாராவதுதான் நடுவராக வேண்டும்!
Deleteநன்றிசார்
டேஸ்ட் பண்ணி பார்க்க அந்தந்த ஹோட்டல்கள்ல இருந்து சாம்பிள் வாங்கி வந்து தருவாங்களா?!
ReplyDeleteவெளியூர்க்காரங்க வாங்கிட்டு வந்தா ஊசிப்போயிடாதா!
Deleteநன்றி
ஏன் ஏன் இப்படியெல்லாம்.. ஆனாலும் ரசிக்கும் படி இருக்கிறது. இப்படியும் செய்யலாமோ ?
ReplyDeleteசெய்யலாம்னுதான் நினைக்கிறேன்
Deleteபெண் கவிஞர்கள் இரண்டுபேர் மட்டுமா? அந்த இன்னொரு போட்டியாளர் யார்? எனக்கு உம்மை தெரிஞ்சாகனும்.போட்டின்னா சரிசமமா இருந்தாதான் களைக்கட்டும்
ReplyDeleteஐயா சரியாகப் பாருங்கள்-சசிகலா,ஸ்ரவாணி,அகிலா என மூன்று பேர்!
Deleteநன்றி
அதிர்ச்சியில ஒண்ணுமே தெரியல.பாவம் பதிவர்கள் ? ஹும்ம்...
Deleteஐடியா எல்லாம் சூப்பர் . நிஜமாவே நடத்தலாம் போல இருக்கே.
ReplyDeleteஆலோசனைக் கூட்டத்தில் சொல்லுங்க!
Deleteநன்றி
ஓஹோ...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1
ReplyDeleteநன்றி தனபாலன்
Deleteஒரு நிமிஷம் நெசமுன்னே நம்பீட்டன்னா பார்த்துக்கோங்க..
ReplyDeleteநடந்தாலும் நடக்கும்!
Deleteநன்றி ஆவி
எங்கள் அணித்தலைவரக கோவைநேரம் ஜீவாவை பரிந்துரை செய்கிறோம். ஆனா செயிக்கிறவங்களுக்கு குச்சிமுட்டாயும் குருவிரொட்டியும் இல்ல வேறென்ன பரிசுன்னு முன்னமே சொல்லிருங்க
ReplyDeleteபரிசு பற்றி விழாக்குழுவினர்தான் சொல்ல வேண்டும்
Deleteநன்றி
ReplyDeleteகற்பனைப் பதிவு அற்புதம் !
ஆனால் நம்மளை இழுத்து விட்டு இருப்பது தான்
உதறல் எடுக்குது .
ஆனால் பெண்கள் என்றால் பெண்கள் பக்கம் என்று
உங்களுக்கு யார் சொன்னது ?
உங்களுக்கு இருக்கும் வரையறை சுதந்திரம் எங்களுக்கு
கிடைத்திடுமா என்ன ?
எனவே நான் ஆண்கள் பக்கம் தான் !
ஆகா!உங்கள் விருப்பம்!
Deleteநன்றி
மரண மொக்கைகளை போட்டு படிப்போரை சாவின் விளிம்புக்கே கொண்டு செல்லும். ஜோக்காளியை மேடையில் வைத்து 108 தர்ம அடி கொடுக்கப்போவதாக உங்கள் நிருபர் எதுவும் கேள்விப் படவில்லைதானே?
ReplyDeleteவேறு ஏதோ கொடுக்கப்போவதாகக் கேள்வி!
Deleteநன்றி
பதிவர் திருவிழாவிற்கு வாழ்த்துக்கள். அடுத்த முறையாவது மதுரை அல்லதி திருச்சி போன்றா மையமான் ஊர்களில் நடத்துவது என்போன்றவர்களுக்கு சௌகரியமாய் இருக்கும்.
ReplyDeleteஅடுத்த முறை மதுரை எனக் கேள்விப்படுகிறேன்!
Deleteநன்றி
த.ம 8
ReplyDeleteநன்றி
Deleteசாப்பிட்டு முடிச்சதும் போடுங்க
ReplyDeleteஅப்பத்தான் நல்ல சாப்பாடு சாப்பிட்டு
பதிவர்கள் எல்லாம் அரை தூக்கத்தில் இருப்பார்கள்
பேச்சு தாலாட்டுப் பாடின மாதிரியும் இருக்கும்
பேச்சும் புரிஞ்சும் புரியாத கவிதை மாதிரி
சிறப்பாகவும் தெரியும்
அப்படித்தான் நிகழ்ச்சியே!
Deleteநன்றி ஐயா