இடம்:தேவலோகம்,இந்திர சபை.
ரம்பா,ஊர்வசி ஆகியோரின் நடனத்தை தேவேந்திரன் தன் சிம்மாசனத்தில்
அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறான்.
நவக்கிரகங்கள்,தேவர்கள் .அஷ்ட திக் பாலகர்கள்
எல்லோரும் அமர்ந்திருக்கின்றனர்.
அப்போது “நாராயண,நாராயண” என்ற குரல் கேட்கிறது.
நாரதர் வருகிறார்.
இந்திரன்:வாருங்கள் நாரதரே!பூலோக சஞ்சாரம் எல்லாம் சுபமாக முடிந்ததா?
நாரதர்:ஆகா!சென்னை நகருக்குச் சென்றிருந்தேன்.இந்திர லோகம் போல்
கோலாகலமாக இருக்கிறது!
இந்:அப்படியா?என்ன விசேஷம்?
நா:செப்.முதல் தேதியன்று தமிழ் வலைப்பதிவர்கள் ஒன்று கூடி இரண்டாவது
வலைப்பதிவர் திருவிழா நடத்த இருக்கிறார்கள்.மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்:ஓகோ?சென்ற ஆண்டு இன்றைய தேதியில்தானே முதல் மாநாடு நடத்தினார்கள்? அதைப்பற்றி நீங்கள் சொன்ன பின்தானே,நம் தேவலோகத்திலும் வலைப்பதிவுகள் தொடங்கினோம்?எப்படி நடக்கிறது நம்
வலைப்பதிவுலகம்?
நா:உனக்குத் தெரியாதா இந்திரா?
இந்:எனக்கு அதற்கெல்லாம் நேரமேது நாரதரே?
நா:ஆமாம்,ஆமாம்,நடனம்பார்க்கவே நேரம் போதவில்லை!
இந்:நாரதரே!
நா:தப்பு,தப்பு. நாராயணன் தினம் மரபுக்கவிதை
எழுதுகிறார்,சிவனோ துரும்பு கிடைத்தாலும் அதைப் பதிவாக்கி விடுகிறார்,விநாயகர்
குடும்பப்பதிவராகி விட்டார்!எல்லாம் நன்றாகவே நடந்தாலும் பூலோகம் போலில்லை இந்திரா!
இந்:அப்படியா?நடக்க இருக்கும் விழா பற்றிச்
சொல்லுங்கள்.
நா:விழாவன்று காலை நிகழ்ச்சிக்குப் பதிவுலக
பீஷ்ம பிதாமகர் ஆயிரம் பிறை கண்ட மூதறிஞர்புலவர் இராமானுசம் அய்யா அவர்கள் தலைமை தாங்குகிறார்,அடையார் அஜீத்
என அழைக்கப்படும் மூத்த பதிவர் சென்னபித்தன்
முன்னிலை.எழுத்தாளர் திரு பாமரன் அவர்கள் சிறப்புரை.முக்கியமாக பதிவர்கள் அனைவரின்
சுய அறிமுகம்
பின் மதியம் தேவலோக உணவையும் விஞ்சும் உணவு—சைவம் அசைவம் இரண்டும்!
மதிய நிகழ்ச்சிகளில் பதிவர்கள் சிலர் பாட்டு நடனம்,நாடகம் என்று
கலக்கப்போகிறார்கள்.
சேட்டைக்காரன்,சதீஸ் சங்கவி,மோகன் குமார்,யாமிதாஷா
ஆகிய பதிவர்களின் நூல் வெளியீடு.
விழாக் குழுவினர் செயலாற்றும் வேகத்தைப்
பார்த்தால் எனக்கே பிரமிப்பாக இருக்கிறது, ”மெய் வருத்தம் பாரார்,பசி நோக்கார்,கண்
துஞ்சார்” என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது
இந்:கேட்பதற்கே பிரமிப்பாகத்தான்
இருக்கிறது!
நா: நான் விழாவன்று அரங்குக்குச் சென்று
கண்டு களிக்கப் போகிறேன்.தேவேந்திரா நீயும் என்னுடன் வந்து விழாவில் கலந்து
கொள்ளேன்.
இந்:நானே நினைத்தேன்;நீங்கள் சொல்லி
விட்டீர்கள்,அவசியம் வருகிறேன்.
நா:என்னைப்போல் மறைவாக இருந்தால் சுவை
இருக்காது.நீ ஒன்று செய்.குட்டன் என்று ஒரு குசும்புப் பதிவர் இருக்கிறார்;அவர்
அநேகமாக விழாவுக்கு வரமாட்டார்.நீ அவரைப்போல் வேடம் தாங்கி வந்து விடு.வேறொருவர்
போல் வேடம் போட உனக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்!
இந்:நாரதரே!
நா:தப்பு,தப்பு.
இந்: சரி நாரதரே!அந்தகுட்டன்
வந்துவிட்டால்?
நா:வந்தால் வரட்டுமே!அவர் என்ன
கௌதமரா?பதிவர் வேடமிட்டு வந்த உன் மேனி முழுவதும் கீபோர்டாகட்டும் என்று சபிக்கவா
முடியும்?
இந்:நாரதரே!
நா: தப்பு,தப்பு.
இந்:சரி நாரதரே நாம் செல்வோம்.பார்த்து
விட்டு வந்தபின் அதே போல் ஒரு விழா தேவ லோகத்திலும் நடத்த வேண்டும்.
நா:ஆகா! திவ்யமாக நடத்தலாம் ,செல்லுமுன் ஒரு
எச்சரிக்கை.நீ வழக்கம்போல் சோம பானம் ,சுராபானம் ஏதாவது குடித்து விட்டு வராதே.வெளியேற்றி
விடுவார்கள்.படம் பிடிக்கும் கருவியைக் கட்டுப்பாட்டுடன் உபயோகி.பெண்களைப்
படமெடுக்கக்கூடாது.ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.
தேவேந்திரன் தலையாட்டுகிறான்.
டிஸ்கி:விழாவன்று பதிவர்கள் இவ்விரு தேவலோக வாசிகளையும் கண்டு கொள்ள முடிகிறதா பாருங்கள்!:))
அசத்துறீங்க குட்டன். சென்ற ஆண்டு இதே நாள் பதிவர் சந்திப்பு நடந்தது நீங்கள் சொன்ன உடன் நினைவுக்கு வருகிறது
ReplyDeleteநேற்று டிஸ்கவரி புக் பேலஸில் நடந்த மீட்டிங்கில் - பதிவர் சந்திப்பு பற்றி உங்கள் தினசரி பதிவுகள் - ஆர்கனைசர்களால் மிகவும் சிலாகிக்கப்பட்டது
கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மோகன் குமார்
தேவலோகத்தில் வேறு தனி பதிவுலகமா ?
ReplyDeleteஅடடா அது தான் முத் தொழிலும் முறையாக
நடைபெறவில்லையோ ?
கற்பனை வானில் உயர சிறகடிக்கும் சிட்டுக் குருவிக்கு
ஒரு குச்சி மிட்டாய்.
திருப்பதிக்கே லட்டா?!
Deleteநன்றி ஸ்ரவாணி அவர்களே!
அருமை அருமை
ReplyDeleteகுட்டன் வர வாய்ப்பில்லை
ஏனெனில் அவர்தான் வேறொரு உருவில்
வந்துவிடுவாரே
ஆகையால் குட்டனாகவே வரச்சொல்லுங்கள்
நாங்கள் கண்டுபிடித்து விடுகிறோம்
சுவாரஸ்யமான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
//அவர்தான் வேறொரு உருவில்வந்துவிடுவாரே//
Deleteஇல்லை,அவர் உருவில் தேவேந்திரன் வருவான்!
நன்றி ரமணி சார்
tha.ma 3
ReplyDeleteநன்றி
Deleteபார்க்கலாம்
ReplyDeleteஆகட்டும் பார்க்கலாம்!
Deleteநன்றி ராஜிக்கா
என்னது தேவலோகத்திலும் பதிவர்கள் சந்திக்கும் விழா
ReplyDeleteநடத்தத் திட்டம் போடுகிறீர்களா ?....எங்கள வெறுப்பேத்த
வேணும் என்பது தான் உங்கள் குறிக்கோளா ?...இதில இருக்குற
இந்தியாவுக்கே வர முடியாமல் துடிக்கிறோமே எங்களைப் பற்றி
கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்ததுண்டா குட்டனே ?...ஏனிந்தக்
கொலை வெறி ?......உங்கள் முதுகு கீபோட் முதுகாகவே மாறக் கடவ :)))))
இப்படியெல்லாம் சாபம் கொடுக்கலாமா?
Deleteநன்றி
சரியா சொல்லுங்க நீங்க வருவிங்களா ? இல்லையா ?
ReplyDeleteவருவேன் ஆனா வரமாட்டேன்
Deleteநன்றி
குட்டன் வரமாட்டார் என்ற தைரியத்தில் இந்திரன் குட்டன் வேடத்தில் வருவார் எனத் தெரிகிறது. இதைத் தடுக்க ஒரே வழி. திரு குட்டன் அவர்களே பதிவர் சந்திப்பிற்கு வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதுதான். அவர் வருவாரா?
ReplyDeleteஅப்ப்டியும் செய்யலாமோ!
Deleteநன்றி
// இந்:சரி நாரதரே நாம் செல்வோம்.பார்த்து விட்டு வந்தபின் அதே போல் ஒரு விழா தேவலோகத்திலும் நடத்த வேண்டும் //
ReplyDeleteதேவலோகத்தில் நடக்க இருக்கும் பதிவர் விழாவையும் கண்டு வந்து பதிவு ஒன்றை உங்கள் பாணியில் போடவும்.
செஞ்சுடலாம்!
Deleteநன்றி
தேவலோகத்திலும் வலைப்பதிவுகள் தொடங்கினோம்,,,,,,????????????????
ReplyDeleteதொடங்கக்கூடாதா????????????
Deleteநன்றி
பதிவர் திருவிழா 2013--தேவலோகத்திலும்!
ReplyDeleteவாழ்த்துகள்..!
நன்றி
Deleteதேவலோக நெட் லிங்க் கொடுங்க தலைவா...அங்கேயும் உங்க பதிவை அசத்திப்பிடலாம் !
ReplyDeleteவித்தியாசமான சிந்தனைப் பதிவுக்கு வாழ்த்துகள் !
நன்றி ஜோக்காளி
Delete.குட்டன் என்று ஒரு குசும்புப் பதிவர் இருக்கிறார்;//வரட்டும் குசும்பு பண்ணிட்டு எப்படி திரும்பி போயிடுவார் என்று பார்க்கிறேன்
ReplyDeleteவரப்போவது குட்டன் உருவில் தேவேந்திரன்; வஜ்ராயுதம் ஜாக்கிரதை
Deleteஅசத்தல்குட்டன். வலைபதிவர் திருவிழாவின் Brand Ambassador நீங்கள்தான்
ReplyDeleteநன்றி முரளி.சைட் பாரில் போட்டு விட்டேன்!
Deleteஅசத்தி விட்டீர்கள் நண்பரே, பதிவர் திருவிழா 2013 யை அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி பாண்டியன்
Deleteகுட்டன் வரும்போது குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் கொண்டுவர வேண்டுகிறேன்
ReplyDeleteஅனைவரும் ஆவலோடு காத்திருப்போம்!
Delete;-)))))
நன்றி ஐயா
//அடையார் அஜீத் என அழைக்கப்படும் மூத்த பதிவர் சென்னபித்தன் // உங்களுக்கு நிறையவே குசும்பு
ReplyDeleteஹா ஹா!
Deleteநன்றி ரூபக்