Thursday, August 29, 2013

தேடிப் பிடிக்கும் என் ஆன்மா!




எனக்குத் திசைகாட்டி தேவையில்லை
      நீ இருக்கும் இடம் தெரிய.
உனது இதயத்தின் துடிப்பொலியே
    என்னை வழி நடத்தும்

இருட்டில் ஒளிந்திருக்கும் உன்னைத்தேட
     எனக்கு வெளிச்சம் தேவையில்லை
உன் முத்துப்பல் ஒளியே போதும்
     உன்னை நான் தேடிப்பிடிக்க!

காற்றின் உதவி தேவையில்லை
     உன்னை கண்டு பிடிக்க
உன் தேன் குரல் ஒலி கிசுகிசுப்பாய்
      என் காதோடு வழிகாட்டும்

நட்சத்திரங்கள் தேவையில்லை
   என்னைக் கூட்டிச் செல்ல
இருளிலும் ஒளிரும் உன் கண்கள்
     என்னை இழுத்துச் செல்லும்!

ஆனால் என் அன்பே!

வழிதவறி என்றேனும் போக நேர்ந்தால்
      நிச்சயம் நான் உயிர் நீப்பேன்.
அப்போது என் ஆன்மா உன்னை
      அடைந்தே தீரும்!


டிஸ்கி:பதிவர் திருவிழா பற்றி நிறைய எழுதியாகி விட்டது.எனவே லைட்டா ஒரு காதல் கவிதை!


16 comments:

  1. //நட்சத்திரங்கள் தேவையில்லை
    என்னைக் கூட்டிச் செல்ல
    இருளிலும் ஒளிரும் உன் கண்கள்
    என்னை இழுத்துச் செல்லும்!//

    இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...
    நல்ல கவிதை குட்டன்..

    ReplyDelete
  2. அப்போ செத்தாலும் விடமாட்டீங்க?? :)))

    சூப்பர் கவிதை பாஸ்!!

    ReplyDelete
  3. லைட்டா ஒரு காதல் கவிதை!
    >>
    இதுக்கு முன்னாடி டீக்கடைல வேலை செஞ்சுக்கிட்டு இருந்தீங்களா?! லைட், ஸ்ட்ராங்குன்னு சொல்லிக்கிட்டு!!!

    ReplyDelete
    Replies
    1. எமோஷன் லைட்!
      நன்றி ராஜி

      Delete
  4. உன் முத்துப்பல் ஒளியே போதும்
    உன்னை நான் தேடிப்பிடிக்க!//சிரிச்சா சத்தமும் வருமே?

    ReplyDelete
    Replies
    1. சத்தம் வராமல் முத்துப்பல் காட்டி முறுவலிப்பதைப் பார்த்ததில்லையா கவிஞரே!
      நன்றி

      Delete
  5. //காற்றின் உதவி தேவையில்லை
    உன்னை கண்டு பிடிக்க
    உன் தேன் குரல் ஒலி கிசுகிசுப்பாய்
    என் காதோடு வழிகாட்டும்
    //

    நல்ல இருக்கு.. ரசித்தேன்.

    ReplyDelete
  6. அருமை அருமை
    லைட்டாவா ஸ்ட்ராங்கா இல்லை இருக்கு
    மனம் கவர்ந்த காதல் கவிதை
    தொடர வாழ்த்துக்கள் (கவிதையும் )

    ReplyDelete
    Replies
    1. ஸ்டாங்காவா இருக்கு?(என்னத்தக் கன்னையா டோனில் படிக்கவும்!)

      Delete
  7. காதல் கவிதை என்பது ‘லைட்டா’? இதை நான் வன்மையாய் கண்டிக்கிறேன்!

    ReplyDelete
  8. காதல் கவிதை சிரமப்படாமல் எழுதி விடலாம்!எனவே லைட்!
    நன்றி சார்

    ReplyDelete
  9. குட்டன் காதலுடன் வலம் வருவதில் மகிழ்ச்சி :)

    ReplyDelete