Showing posts with label காதலி. Show all posts
Showing posts with label காதலி. Show all posts

Friday, September 13, 2013

நான் காதலித்த பெண்கள்!



ஆரம்பப்பள்ளியில் அலைக் கூந்தல் அகிலா

உயர்நிலைப் பள்ளியில் உதட்டழகி உமா

கல்லூரிக்காலத்தில் கன்னம் சிவந்த கனகா

வேலை தேடும்போது,வேல்விழி வேணி

பணியில் சேர்ந்த பின் பல்லழகி பவித்ரா

விடுமுறை நாட்களில் விரலழகி விமலா

இத்தனையும் தாண்டி மணம் புரிந்ததோ

அத்தனையும் சேர்ந்த அழகியாம் தங்கமணி!

(பெயர் சொல்ல மாட்டேன்!)

முதல் ஆறும் முடிவில்லா கைக்கிளை!

கடைசியில் வந்ததுதான் அன்பின் ஐந்திணை!!

 டிஸ்கி:(இதெல்லாம் உண்மையில்லீங்கொ!ச்ச்சும்மா)(அய்யோ!கடைசி  மட்டும்  முழுசா உண்மைங்கோ!)



Thursday, August 29, 2013

தேடிப் பிடிக்கும் என் ஆன்மா!




எனக்குத் திசைகாட்டி தேவையில்லை
      நீ இருக்கும் இடம் தெரிய.
உனது இதயத்தின் துடிப்பொலியே
    என்னை வழி நடத்தும்

இருட்டில் ஒளிந்திருக்கும் உன்னைத்தேட
     எனக்கு வெளிச்சம் தேவையில்லை
உன் முத்துப்பல் ஒளியே போதும்
     உன்னை நான் தேடிப்பிடிக்க!

காற்றின் உதவி தேவையில்லை
     உன்னை கண்டு பிடிக்க
உன் தேன் குரல் ஒலி கிசுகிசுப்பாய்
      என் காதோடு வழிகாட்டும்

நட்சத்திரங்கள் தேவையில்லை
   என்னைக் கூட்டிச் செல்ல
இருளிலும் ஒளிரும் உன் கண்கள்
     என்னை இழுத்துச் செல்லும்!

ஆனால் என் அன்பே!

வழிதவறி என்றேனும் போக நேர்ந்தால்
      நிச்சயம் நான் உயிர் நீப்பேன்.
அப்போது என் ஆன்மா உன்னை
      அடைந்தே தீரும்!


டிஸ்கி:பதிவர் திருவிழா பற்றி நிறைய எழுதியாகி விட்டது.எனவே லைட்டா ஒரு காதல் கவிதை!