குளித்துக் கரையேறும் உன்
உடலோடு ஒட்டியிருக்கும்
ஈரப் புடவையாய்
இருக்கவே ஆசை!
சிந்திக்கும் நேரத்தில்
செம்பவள வாய் திறந்து
முத்துப்பற்களால் கடிக்கும்
பந்து முனைப் பேனாவாய்
இருக்கவே ஆசை!
பாடுகின்ற வேளைதன்னில்
உன்காந்தள் விரல் தழுவ
சுருதி எழுப்பும் தம்பூராவாய்
இருக்கவே ஆசை.!
காதுகளில் தொங்கிக்
கன்னம் உரசும் ஜிமிக்கிகள்;
கழுத்தில் தொடங்கி
மார்பில் வளைந்து
நெளியும் சங்கிலி;
இயற்கை மணம் கொண்ட உன்
கூந்தலுக்குச் செயற்கை மணம்
தரும் மலர்ச் சரங்கள்!
எல்லாமாய் இருக்கவே ஆசை
.........................
.........................
..........................
(சென்ஸார் செய்யப்பட்டது)
எதுவுமே இல்லையென்றாலும்
உன் கால்களில் மிதி பட்டு
உன் உயரத்தை கூட்டும்
ஹை ஹீல்ஸ் செருப்பாயேனும்
இருக்கவே ஆசை!
(காதலனுக்குக் காதல் ஜூரம் 104 டிகிரி !)
//இளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ!// என்பது மிகச் சரி தான் மிஸ்டர் குசும்பு
ReplyDeleteஎற்றுக் கொண்டமைக்கு நன்றி சீனு
Deleteசர்தான்... முத்திப் போச்சு
ReplyDeleteஅதுதான் 104 டிகிரீ எனச் சொல்லி விட்டேனே பிரகாஷ்?!
Deleteநன்றி
ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் இம்புட்டு ஆசையா? சரி சரி எல்லாமே நிறைவேறட்டும்ம் :))))))))))
ReplyDeleteயாரும் சொல்வதில்லை.அவ்வளவே.....!
Deleteநன்றி பி.எ.மணி மணி
இதோட ஜெராக்சை வீட்டுக்கு அனுப்புறேன்.
ReplyDeleteதங்கமணி ரொம்ப சந்தோசப் படுவா!
Deleteநன்றி ராஜி அவர்களே
அறிவான ஆண்மை செருப்பளவிற்கு
ReplyDeleteஇறங்கி அழகிற்கு அடிமைப்படுதல்
தகுமோ ?
காதலில் உயர்வேது தாழ்வேது?அடிமைப்படுவதே ஒரு சுகம்!
Deleteநன்றி ஸ்ரவாணி அவர்களே
Deleteகலக்கறீங்கப்பு...
ReplyDeleteநன்றி சங்கவி
Deleteகாதலனுக்குக் காதல் ஜூரம் 104 டிகிரி என்றால் மருத்துவரிடம்(!) போக வேண்டியதுதான்!
ReplyDeleteநோய்க்குக் காரணமும் அவளே.மருத்துவரும் அவளே
Deleteநன்றி
இளைஞருக்கே 'சென்ஸார்'ஆ ?
ReplyDeleteதேவைப்பட்டால்?
Deleteநன்றி
காதல் ஜூரம் 104 டிகிரி.... :)))))
ReplyDelete