Saturday, August 3, 2013

முதல் பதிவின் சந்தோசம்-தொடர் பதிவு



//திருகுட்டன், ஆறு பேரென்ன நூறு பேருக்கு சமம்//

திரு.வே.நடனசபாபதி அவர்கள் இவ்வாறு சொல்லி என்னைத் தொடரச் சொல்லி ஒரு தள்ளூ தள்ளி விட்டு விட்டார்.

திரு ரூபக் ராம்  அவர்களும் என்னையும் தொடர் எழுத அழைத்து விட்டார்.

மறுக்க முடியுமா?!

2012 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம்,5ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை..தமிழ்ப் பதிவுலகம் ஒரு குலுங்கு குலுங்கியது!

ஆம்! புதியதொரு வலைப்பூ அன்று பிறந்தது.

குட்டன் என்ற இளைஞர்,இளைஞர்களுக்காக ஒரு இளைஞர் வலைப்பூ தொடங்கினார். ”குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்” என்ற பெயரில்.

முதல் பதிவு “குட்டனின் நாட்குறிப்பிலிருந்து”….கற்பனையான ஒரு நாட் குறிப்பிலிருந்து 
சுவாரஸ்யமான  பக்கங்களை வெளியிடும் முயற்சி.

வெளியிட்டு விட்டு மறு நாள் காலை  வந்து குவிந்திருக்கும் பின்னூட்டங்களைக் கான் பதிவைப் பார்த்தால்…….

எத்தனை பின்னூட்டங்கள்?!

1 சேர்த்தால் பத்தாகும்;10 சேர்த்தால் 100 ஆகும்…!

சரி முதல் பதிவுதானே என்று மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் இரண்டாம் பதிவு எழுதினேன்

நியாயமாக அதுதான் முதல் பதிவாக வந்திருக்க வேண்டும்!

மீண்டும் அதே நிலை!

விடலாமா. தொடர்ந்து எழுதினேன்.

மூன்றாம் பதிவில் பின்னூட்டங்கள் வரத் தொடங்கின.
 
வலையுலகம் புரிபடத்துவங்கியது

எனக்கென ஒரு தனிப் பாணி வகுத்துக் கொண்டு முழு மூச்சாக இறங்கினேன்!  

செப்டம்பர் மாதம் 33 பதிவுகள்!

அந்த மாதம் எழுதிய “குழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும் என்ற பதிவு காலத்தை வென்று இன்று வரை படிக்கப்பட்டு 8000 பார்வைகளை பெற்றுள்ளது!

கொஞ்சம் குசும்புடன் எழுதுவதால் “குசும்பு குட்டன்” என்ற பட்டமும் கிடைத்தது.
(குறும்புக்கும் குசும்புக்கும் என்ன வேறுபாடு?)

எனக்கு இதுவே சந்தோசம்!




8 comments:

  1. உங்களின் வலையுலக அனுபவம் எங்களுக்கும் புரியத் துவங்கி விட்டது...!

    ReplyDelete
  2. நல்லா இருக்கு ஆனா, பொசுக்குன்னு முடிச்சிட்டீங்க :-(

    ReplyDelete
  3. புரிஞ்சுக்கிட்டீங்க இல்ல,கலக்குங்க

    ReplyDelete
  4. குட்டன் சிம்பிளா முடிச்சிட்டீங்க!

    ReplyDelete
  5. படித்தேன்.... ரசித்தேன்.....

    ReplyDelete
  6. //கொஞ்சம் குசும்புடன் எழுதுவதால் “குசும்பு குட்டன்” என்ற பட்டமும் கிடைத்தது./

    கொஞ்சம்தானா? ஆனாலும் உங்கள் குசும்புக்கு இரசிகர்கள் அநேகம்!
    எனது வேண்டுகோளை மதித்து பதிவிட்டமைக்கு நன்றி. பதிவை இரசித்தேன். இன்னும் பல நூறு பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. ஹா ஹா . அழைப்பை ஏற்று உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  8. //கொஞ்சம் குசும்புடன் எழுதுவதால் “குசும்பு குட்டன்” என்ற பட்டமும் கிடைத்தது.
    (குறும்புக்கும் குசும்புக்கும் என்ன வேறுபாடு?)//

    ஹா ஹா ஹா குசும்பு குட்டன்

    ReplyDelete